Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகளுடன் காதல் திருமணம்.. மருமகனை வெட்டிக்கொன்றது ஏன்?கிருஷ்ணகிரி கோர்ட்டில் சரணடைந்த மாமனார் பகீர்

ஜெகன் கொலை தொடர்பாக மாமனார் சங்கர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே மகளை காதலித்து திருமணம் செய்த ஆத்திரத்தில் மோட்டார்சைக்கிளில் வந்த மருமகனை வழிமறித்து மாமனார் மற்றும் உறவினர்கள் பட்டப்பகலில் நடுரோட்டில் வைத்து சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தில் சரணடைந்த மாமானர் கொலைக்கான பின்னணி என குறிப்பிட்ட காரணத்தை வாக்குமூலமாக அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டியை சேர்ந்தவர் சின்னபையன். இவரது மகன் ஜெகன் (வயது 28). இவர் டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் அவதானப்பட்டி அருகே உள்ள புழுகான் கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்த சங்கர் என்பவரின் மகள் சரண்யா (21).

இந்நிலையில் தான் ஜெகன் மற்றும் சரண்யா ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாக இருந்த போதிலும் பெண்ணின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

எதிர்ப்பை மீறி திருமணம்

எதிர்ப்பை மீறி திருமணம்

அதாவது சரண்யாவை பணக்கார மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து கொடுக்க அவரது குடும்பம் விரும்பி உள்ளது. இதனால் ஜெகனை அழைத்து அவர்கள் கண்டித்துள்ளனர். காதல் செய்வதை விட்டுவிடும்படி அறிவுறுத்தி உள்ளனர். அதேபோல் காதல் செய்யக்கூடாது என சரண்யாவிடமும் அவர்கள் தெரிவித்துள்ளதக கூறப்படுகிறது. இருப்பினும் ஜெகன்-சரண்யா ஜோடி தங்களின் காதலில் உறுதியாக இருந்தனர். மேலும் தொடர்ந்து எதிர்ப்பு வந்தது. இதனால் ஜெகன், சரண்யாவை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

நடுரோட்டில் வெட்டிக்கொலை

நடுரோட்டில் வெட்டிக்கொலை

இதனால் சரண்யாவின் குடும்பத்தினர், ஜெகன் மீது ஆத்திரத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் இன்று மதியம் ஜெகன் மோட்டார் சைக்களில் தருமபுரி - கிருஷ்ணகிரி சாலையில் அணை பிரிவு மேம்பாலம் அருகில் சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த மாமனார்(சரண்யாவின் தந்தை) சங்கர் மற்றும் உறவினர்கள் ஜெகனை அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். காதல் திருமணம் செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாத ஆணவத்தில் சங்கர் இந்த கொலையை செய்ததாக ஜெகனின் குடும்பத்தினர் கூறினர். மேலும் ஆணவக்கொலை என குற்றம்சாட்டப்பட்டது.

 4 பேர் மீது வழக்கு

4 பேர் மீது வழக்கு

மேலும் கொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன. இந்நிலையில் தான் இந்த கொலை தொடர்பாக ஜெகனின் தந்தை காவேரிபட்டணம் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் மாமனார் சங்கர், அவரது உறவினர்களான அருள், திம்மராயன், கோவிந்தராஜ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாமனார் சரண்-பகீர் வாக்குமூலம்

மாமனார் சரண்-பகீர் வாக்குமூலம்

இந்நிலையில் தான் மருமகன் கெஜனை கொலை செய்ததை ஒப்புக்கொண்டு மாமானார் சங்கர் கிருஷ்ணகிரி கூடுதல் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் இன்று மாலையில் சரணடைந்தார். அப்போது தனது மகள் சரண்யாவை காதல் திருமணம் செய்தது பிடிக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் மருமகனை வெட்டிக்கொன்றதாக கூறி சரணடைந்த நிலையில் மற்ற 3 பேரையும் போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+