கோலாலம்பூர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அதிகரிக்கும் கொரோனா.. மலேசியாவில் ஒரு மாதம் முழு லாக்டவுன்.. பிரதமர் அதிரடி அறிவிப்பு!

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: கொரோனா அதிகரித்து வருவதால் மலேசியா முழுவதும் ஒரு மாத காலம் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் முஹைதீன் யாசின் தெரிவித்தார்.

இது தொடர்பாக மலேசியா பிரதமர் முஹைதீன் யாசின் கூறுகையில், 'மலேசியா கொரோனாவின் மூன்றாவது அலைகளை எதிர்கொள்கிறது, இது ஒரு தேசிய நெருக்கடியைத் தூண்டக்கூடும். என்வே நாளை முதல் ஜூன் 7 வரை நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது' என்று கூறினார்.

nationwide one month lockdown as COVID-19 cases spike in Malaysia

இந்த ஊரடங்கு மூலம் மழலையர் பள்ளி மற்றும் தினப்பராமரிப்பு நிலையங்கள் தவிர அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகிறது. உணவகங்களில் உணவருந்தும் சேவை அனுமதிக்கப்படாது, தனியார் வாகனங்களில் மூன்று பேருக்கு மேல் அனுமதிக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மாநிலங்களுக்கிடையேயான மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான அனைத்து பயணங்களும் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் இந்த வாரம் நடைபெற உள்ள ஈத் அல்-பித்ர் பண்டிகைக்கு முன்னதாக வந்துள்ளது. போக்குவரத்து தடை செய்யப்படும் என்று அறிவித்துள்ளதால் மில்லியன் கணக்கான மலேசியர்கள் ஈத் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

அமித்ஷாவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி இப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி அமித்ஷாவை கைது செய்த ஐபிஎஸ் அதிகாரி கந்தசாமி இப்போது தமிழக லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபி

மத நிறுவனங்கள் குறைந்த எண்ணிக்கையில் திறக்கப்படலாம். வணிகங்கள் குறைந்த பணியாளர்களுடன் என்றும் கூறப்பட்டுள்ளது. மலேசியாவில் சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று கடுமையாக அதிகரித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை மட்டும் 3,807 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளது. மலேசியாவில் இதுவரை மொத்தம் 4,44,484 பாதிப்புகளும், 1,700 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Prime Minister Muhaidin Yassin said a month-long curfew would be imposed across Malaysia as the corona rises
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X