ஜம்முவில் பிடிபட்ட லஷ்கர் தீவிரவாதி! இத்தனை நாளாக பாஜக ஐடி விங்கில் நிர்வாகியாக செயல்பட்டது அம்பலம்
ஸ்ரீநகர்: தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா எனும் தீவிரவாத அமைப்பை சேர்ந்த தீவிரவாதியை பொதுமக்கள் பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். இவர் தற்போது பாஜக நிர்வாகியாக இருந்து வருகிறார்.
ஜம்மு காஷ்மீரில் ரியாஸி பகுதியில் உள்ள கிராம மக்கள் இரு லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகளை பிடித்து போலீஸில் ஒப்படைத்தனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 துப்பாக்கிகள், 7 கையெறி குண்டுகள், கைத் துப்பாக்கி உள்ளிட்டவை பறிமுகல் செய்யப்பட்டன.
அந்த இருவரில் ஒருவரான தாலிப் ஹூசைன் ஷா என்பவர் பாஜகவில் நிர்வாகியாக உள்ளார். அவர் கடந்த மே 9-ஆம் தேதி சிறுபான்மைப் பிரிவு சமூக ஊடக பொறுப்பாளராக இருந்தவர்.

ட்விட்டர்
இதுகுறித்து ஏடிஜிபி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் ரியாஸி மாவட்டம் துக்ஷான் கிராமத்தில் உள்ள மக்களுக்கு பாராட்டுகள். ஆயுதங்கள் சுற்றித் திரிந்த இரு தீவிரவாதிகளை பிடித்துக் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு ரூ 2 லட்சம் சன்மானம் வழங்கப்படுவதாக டிஜிபி அறிவித்துள்ளார் என ஏடிஜிபி தெரிவித்துள்ளார்.

புல்வாமா
இருவரில் ஒருவர் புல்வாமாவை சேர்ந்த ஃபைசல் அகமது, இன்னொருவர் ரஜோரியை சேர்ந்த தலிப் ஹூசைன் ஆகியோராவர். இவர்களில் தலிப் ஹூசைன் பாஜகவில் இணைந்துள்ளார். இவர் பாஜக மூத்த தலைவர்களுடன் இணைந்து புகைப்படங்களை எடுத்துள்ளார். இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில் பாஜகவில் நிறைய பேர் ஆன்லைன் மூலம் இணைகிறார்கள்.

பின்னணி தெரியாது
அவ்வாறு இணையும் போது அவர்களுடைய பின்னணி குறித்தெல்லாம் நாங்கள் பார்ப்பதில்லை என்றனர். அது போல் ஜம்மு துணை நிலை ஆளுநரும் போலீஸாரும் இணைந்து ரியாஸி மக்களுக்கு சன்மானத்தை அறிவித்துள்ளார்கள். இதுகுறித்து துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறுகையில் ரியாஸி மாவட்டத்தின் துக்சான் தோக் கிராம மக்களின் தைரியத்தை தலை வணங்குகிறேன்.

தீவிரவாதிகள்
இவர்கள் அதிகம் தேடப்பட்ட இரு தீவிரவாதிகளை பிடித்துக் கொடுத்துள்ளனர். இது போன்ற சம்பவங்களால் தீவிரவாதத்திற்கு முடிவு கட்டலாம். எனவே கிராம மக்களின் வீர தீர செயலுக்கு ரூ 5 லட்சம் சன்மானம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதமாக ஹூசைன் ஷாவை போலீஸார் தேடி வந்தனர். ரஜோரி மாவட்டத்தில் நடந்த இரு வெடிகுண்டு தாக்குதலில் ஷாவுக்கு தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ஷாவை தேடி வந்தனர். இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தி அதே ஆயுதங்களை ஷாவை கைது செய்த போது பறிமுதல் செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவிக்கிறார்கள்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் ஆலோசனை -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications