சரக்குனு வாட்ஸ் ஆப் குரூப்பில் மதுபானங்கள் விற்பனை அமோகம்.. வாணியம்பாடியில் எல்லாமே டிஸ்கவுண்ட் ரேட்
வாணியம்பாடி: வாணியம்பாடியில் வாட்ஸ்அப் குழு மூலம் மது விற்பனை அமோகம் செய்யப்பட்ட சம்பவம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது விற்பனை செய்ய செல்போன் எண் வழங்கப்பட்டுள்ளது.
Recommended Video
தமிழக அரசு கொரோனா ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு பிறப்பித்தது. இந்நிலையில் கள்ளச்சாராயம், மதுபான பாட்டில்கள் என பல்வேறு இடங்களில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் காவல்துறையினர் கள்ளச்சாராயம் விற்பவர்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வந்து மதுபானம் விற்பனை செய்யும் கும்பலை கைது செய்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் தற்போது வரை சுமார் 5000 மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இரு சக்கர வாகனங்கள்
ரயில், ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் கொண்டு வந்து மது விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்துள்ளனர். இந்நிலையில் வாணியம்பாடியில் சரக்கு குழு துவங்கப்பட்டு இந்த குழுவில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் செயல்பட்டு வருகின்றனர்.

வெளிமாநில மதுபாட்டில்கள்
அதுமட்டுமில்லாமல் இந்த குழுவில் தொடர்புள்ள சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இந்த குழு மூலம் விற்பனை நடந்து வருகிறது. இதில் வெளிமாநில மதுபாட்டில்கள் மற்றும் கள்ளச்சாராயம் உட்பட அனைத்துமே சலுகை விலையில் தருகின்றனர்.

குழு
மதுபானம் வாங்க விரும்புவோர் அவருடைய வாய்ஸ் மூலம் அந்த குழுவில் பதிவு செய்வார்கள். உடனடியாக குரூப் அட்மின் மற்றும் அதில் இருப்பவர்கள் அவர்களிடம் உள்ள மதுபான பாட்டில்கள் விவரம் மற்றும் விலையை உடனடியாக வாய்ஸ் மூலம் பதிவு செய்து வருகிறார்கள்.

தேர்வு
மேலும் ஊரடங்கு காலம் என்பதால் குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் கொண்டு பெற்றுக் கொள்ளலாம் என குரூப் அட்மின் உத்தரவு பிறப்பிக்கிறார். இதை குழுவில் உள்ள அனைவரும் பின்பற்றி வருகின்றனர் இதனால் காவல்துறை எப்படி இவர்களை கைது செய்வது என்று புரியாமல் திணறி வருகின்றனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications