லாட்டரியால் அடித்த யோகம்.. துள்ளி குதிக்கும் 70 வயது பாட்டி.. 30 ஆண்டுக்கு மாதம் 10 லட்சம் ரூபாயாம்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்பது போல இங்கிலாந்தில் 70-வயதான பெண்மணி ஒருவருக்கு லாட்டரியில் அதிர்ஷ்ட காற்று வீசியிருக்கிறது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.10 லட்ச ரூபாய் பரிசுத்தொகை அவருக்கு லாட்டரியில் அடித்துள்ளதாம். இது பற்றிய செய்தியை பார்ப்போம்.

கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்துக் கொண்டு கொடுக்கும் என்றும்.. திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குன்னு வந்தது யோகம் என பழமொழி நம்ம ஊரில் சொல்வதுண்டு.. லாட்டரியில் பரிசு அடிப்பவர்களுக்கு இதை அப்படியே பொருத்தி பார்க்கலாம்தான்.. ஏனெனில் கடை வீதிகளுக்கு ஏதேச்சையாக செல்லும் போது வாங்கிய லாட்டரியில் கோடிகளை அள்ளியதாக அவ்வப்போது அமெரிக்கா, இங்கிலாந்து, உள்ளிட்ட நாடுகளில் இருந்து செய்திகள் வெளிவருவதை காண முடியும்.

70-year-old Woman in UK wins lottery to recieve 10 lakh rupees per month for 30 years

ஏன் நமது பக்கத்து மாநிலமான கேரளாவில்கூட லாட்டரிக்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளது. தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் சட்ட விரோதம் ஆகும். ஆனால், கேரளா தவிர்த்து மேலும் சில மாநிலங்களில் லாட்டரி விற்பனைக்கு அனுமதி உள்ளது. சரி அதெல்லாம் இருக்கட்டும்.. இங்கே விஷயத்திற்கு வருவோம்...

இங்கிலாந்தின் டோர்கிங் பகுதியை சேர்ந்தவர் 70-வயதான டோரிஸ் ஸ்டன்பிரிட்ஜ். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள ஒரு நிறுவனத்தில் லாட்டரியை வாங்கியுள்ளார். லாட்டரி டிரா முடிந்த பிறந்த பிறகு தனக்கு வந்த இமெயிலை பார்த்து இருக்கிறார். அதில் 30 ஆண்டுகளுக்கு உங்களுக்கு மாதம் 10 பவுண்டுகள் (சுமார் 10 லட்ச ரூபாய்) பரிசாக கிடைக்கும் என்று கூறப்பட்டு இருந்தது.

இதைப் பார்த்த மகிழ்ச்சியில் அவருக்கும் கையும் ஓடவில்லை... காலும் ஓடவில்லை. லாட்டரியில் பரிசு விழுந்ததை பற்றி பூரிப்புடன் பேசிய டோரிஸ், தற்போது எனக்கு 70 வயது ஆகிவிட்டது. இன்னும் 30 ஆண்டுகள் வாழ வேண்டும் என்ற ஆசை இந்த பரிசு விழுந்ததன் மூலம் வந்து இருக்கிறது.

தற்போது லாட்டரியில் விழுந்துள்ள பணம் மூலம் 50 ஆண்டுகளுக்கு முன்பாக கட்டிய தங்கள் வீட்டை புதுப்பித்து கட்ட டோரிஸும் அவரது கணவர் ஸ்டான்பிரிட்ஜும் முடிவு செய்து இருக்கிறார்கள். பல்வேறு நாடுகளுக்கு விடுமுறை சுற்றுலா செல்லவும் பிளான் வைத்து இருக்கிறார்களாம். தனது பேரனின் முதல் விமான பயணமாகவும் அது அமையப் போகிறது என்று சந்தோசத்துடன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+