Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

700 ஆண்டுகள் பழசு.. இங்கிலாந்து மன்னர் சார்லசுக்காக ரெடியாகும் தங்க சிம்மாசனம்! இத்தனை சிறப்புகளா?

இங்கிலாந்து மூன்றாவது சார்லஸின் முடிசூட்டு விழாவுக்கு 700 ஆண்டுகள் பழமையான தங்க முழாம் பூசப்பட்ட சிம்மாசனம் பயன்படுத்தப்பட உள்ளது.

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து மகாராணி 2 ஆம் எலிசபெத்தை தொடர்ந்து அந்நாட்டு மன்னராக அவரது மகன் மூன்றாவது சார்லஸ் பதவியேற்றுக்கொண்ட நிலையில் வரும் மே மாதம் நடைபெற இருக்கும் அவரது முடிசூட்டு விழாவுக்கு 700 ஆண்டுகள் பழமையான தங்க முழாம் பூசப்பட்ட சிம்மாசனம் பயன்படுத்தப்பட உள்ளது.

பல ஆண்டு காலமாக இங்கிலாந்தின் ராணியாக இருந்தவர் 2 ஆம் எலிசபெத். இவர் கடந்த ஆண்டு 93 வது வயதில் காலமானார். அவரை தொடர்ந்து அவரது மகன் 3 ஆம் சார்லஸ் இங்கிலாந்தின் மன்னராக பதவியேற்றுக் கொண்டார்.

வரும் மே மாதம் 6 ஆம் தேதி மூன்றாவது சார்லஸ் இங்கிலாந்தின் புதிய மன்னராக முடிசூடிக்கொள்ளும் விழா நடைபெறுவதாக அரச குடும்பம் அறிவித்தது. இதனை அடுத்து முடிசூட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக லண்டலில் நடைபெற்று வருகின்றன.

700 ஆண்டு பழைய சிம்மாசனம்

700 ஆண்டு பழைய சிம்மாசனம்

இங்கிலாந்தின் புதிய மன்னராக 3 ஆம் சார்லஸ் முடிசூட்டிக் கொள்ளும் விழாவில் 700 ஆண்டுகள் பழமையான தங்க முழாம் பூசப்பட்ட சிம்மாசனம் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த சிம்மாசனத்தை கடந்த 1308 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னர்கள் முடிசூட்டு விழாவிற்காக தயார் செய்து இருக்கிறார்கள்.

ஹென்றி முடிசூட்டப்பட்ட சிம்மானம்

ஹென்றி முடிசூட்டப்பட்ட சிம்மானம்

இங்கிலாந்தின் முன்னாள் அரசர் ஹென்றி கடந்த 1399 ஆம் ஆண்டு இந்த சிம்மாசனத்தில் அமர்ந்துகொண்டுதான் மன்னராக முடிசூட்டிக் கொண்டு இருக்கிறார். வரலாற்று சிறப்புகள் நிறைந்த இந்த சிம்மாசனம் கடந்த 18, 19 ஆம் நூற்றாண்டுகளில் சேதம் அடைந்து உள்ளது. அதன் தொடர்ச்சியாக சிம்மாசனத்தின் அடித்தளம் மாற்றி அமைக்கப்பட்டது.

புதுப்பிக்கப்படும் சிம்மாசனம்

புதுப்பிக்கப்படும் சிம்மாசனம்

இந்த சிம்மானத்தின் கீழே கால் பகுதியில் இரு பக்கமும் சிங்கங்களின் உருவங்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த நிலையில் தற்போது மூன்றாம் சார்லஸின் முடிசூட்டு விழாவிற்கும் பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த பெருமைமிகு சிம்மாசனத்தை பயன்படுத்த அரச குடும்பம் விருப்பம் தெரிவித்து உள்ளது. அதன் பேரில் முடிசூட்டு விழாவுக்காக இந்த சிம்மாசனத்தை புதுப்பிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு உள்ளன.

 மன்னர் கிரீடம்

மன்னர் கிரீடம்

இந்த சிம்மாசனம் இன்னும் சில வாரங்களில் தயாராகிவிடும் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு மே மாதம் இந்த சிம்மாசனத்தில் அமரவைக்கப்பட்டு சார்லஸ் இங்கிலாந்து மன்னராக முடிசூட்டப்படுவார். அவரது தலையில் அப்போது மன்னருக்கான கிரீடம் வைக்கப்படும். இங்கிலாந்து மன்னர் முடி சூட்டு விழாவுக்கு இன்னும் 2 மாதங்களே இருப்பதால் பக்கிங்ஹாம் அரண்மனை களைக்கட்டத் தொடங்கி உள்ளது.

ராணி எலிசபெத் மரணம்

ராணி எலிசபெத் மரணம்

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து செப்டம்பர் 8 ஆம் தேதி அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். ஸ்காட்லாந்து அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டு சில நாட்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டது.

இறுதிச் சடங்கு

இறுதிச் சடங்கு

செப்டம்பர் 19 ஆம் தேதி வெஸ்ட்மின்ஸ்டரில் ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உட்பட பல நாடுகளில் தலைவர்கள் கலந்துகொண்டார்கள். எலிசபெத் ராணி மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+