85 கோடி பட்ஜெட்.. எலிசபெத் ராணிக்கு கருணாநிதி அளித்த திரை விருந்து.. ஒரு ரீவைண்ட்!
லண்டன்: பக்கிங்காம் பேலஸ் இருளில் மூழ்கி இருக்கிறது. நடு இரவில் அந்த பிரம்மாண்ட அரண்மனைக்கு முன் மெழுகுவத்திகளை ஏந்தியபடி மக்கள் கண்ணீரில் தவிக்கின்றனர். டப்ளினில் இருந்து விடுமுறையைக் கழிக்க தன் மகன் வீட்டுக்கு இலண்டன் வந்த மூதாட்டி ஒருவர் அரண்மனை முன்னால் செய்வது அறியாமல் உறைந்து போய் உட்கார்ந்திருக்கிறார்.
'எங்கள் தேசத்தின் வெளிச்சம்' மறைந்துவிட்டது என ஒரு காதல் ஜோடி பூங்கொத்தைப் பிடித்தபடி தொலைக்காட்சிக்குப் பேட்டி அளிக்கிறது.
இத்தனை அன்பைச் சம்பாதித்த மகாராணி இரண்டாம் எலிசபெத் இன்று உயிருடன் இல்லை. இந்த இழப்பு இலண்டன் மக்கள் மட்டும் இல்லை. இந்திய மக்களுக்கும்தான்.

மூன்று முறை இந்தியா வந்த ராணி
இந்தியா ஒரு காலத்தில் இந்த அரண்மனையின் ஆட்சிக்குக் கீழ்தான் இயங்கியது. அந்த அரண்மனைக்கும் இந்தியாவுக்கும் 300 ஆண்டுக்கால உறவு உண்டு. அதைத்தாண்டி இரண்டாம் எலிசபெத் ராணிக்கும் இந்தியாவுக்கும் நெகிழ்ச்சியான பல கதைகள் உண்டு.
இரண்டாம் எலிசபெத் ராணி இந்தியாவிற்கு வந்த கதையைவிடத் தமிழ்நாட்டிற்கும் அவருக்குமான உறவு உணர்வு ரீதியானது. இவர் மூன்று முறை இந்திய மண்ணிற்கு விஜயம் செய்துள்ளார். முதல் விசிட் 1961இல் நடந்தது. பின் 1983இல் இந்தியா வந்த அவர் இரும்பு மங்கை இந்திரா காந்தியைச் சந்தித்தார். மூன்றாவது முறை வந்ததுதான் மிகமிக முக்கியமானது. 1997இல் இந்தியா வந்த அவர், சென்னைக்கும் வந்தார்.

மு.கருணாநிதி வழங்கிய வரவேற்பு
அன்றைக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சராக மு.கருணாநிதி இருந்தார். அந்த வருகையின் போது 'மருதநாயகம்' படப்பிடிப்பில் அவர் பங்கேற்றார். அந்த சினிமா செட்டுக்குள் ராணி நடைபோட்டபோது அங்கே படைவீரர்கள் தோற்றத்தில் நின்றிருந்த துணைநடிகர்கள், 'வெற்றி வேல், வீர வேல்' என்று கோஷம் எழுப்பி ராணியை வரவேற்றனர். எலிசபெத் ராணிக்கு வழங்கப்பட்ட சிவப்புக் கம்பள வரவேற்பில் நடிகர் கமல்ஹாசன் 'மருதநாயகம்' கான்சாகிப் கெட் அப்பில் உடன் வலம் வந்தார். அதாவது 18 ஆம் நூற்றாண்டின் போர்வீரர் முகமது யூசுப் கானாக கமல் நடிக்க இருந்தார். அந்தக் காலத்தில் மிகப் பிரம்மாண்டமாகத் தொடங்கப்பட்ட உலகப் படங்களில் வரிசையில் இந்தப் படம் புகழப்பட்டது. ஏறக்குறைய அன்றைக்கு 85 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இது தயாரிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் நிதிச் சுமையால் படம் வெளியாகவில்லை. கமல்ஹாசனின் கனவு படமாக இன்று வரை இது பேசப்பட்டு வருகிறது.

ஒரு கோடியில் சண்டைக்காட்சி
கமலுடன் Kate Winslet சேர்ந்து நடிப்பதாக இருந்தார். ஆனால் அவர் மறுத்துவிட்டார். கமல் பொருத்தமான நடிகர்களைத் தேடி ஐரோப்பாவுக்குச் சென்றார். இதற்கான பிரம்மாண்டமாக நடந்த சென்னை நிகழ்வில், ராணி எலிசபெத்தின் பார்வைக்கு டீஸர் ஒன்றும் திரையிடப்பட்டது. அது ₹1 கோடிக்கு மேல் செலவு செய்து எடுக்கப்பட்ட ஒரு போர்க் காட்சி எனக் கூறப்பட்டது. இப்படி கமல்ஹாசனின் சினிமா வாழ்க்கையோடு மறக்கமுடியாதவராக ராணி எலிசபெத் இடம்பிடித்தார். இந்நிலையில் ராணியின் பிரிவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தகவலைப் பகிர்ந்து நடிகர் கமல்ஹாசன், "எழுபதாண்டுகளாக இங்கிலாந்தின் மகாராணியாகத் திகழ்ந்த இரண்டாம் எலிசபெத் இயற்கை எய்திய செய்தியைக் கேட்டுத் துயருற்றேன். ஆங்கிலேயர்கள் மட்டுமல்லாது, அகில உலகத்தவரின் நேசத்தையும் பெற்றவராக அவர் விளங்கினார்.

25 ஆண்டுக்கால நினைவில் கமல்
25 ஆண்டுகளுக்கு முன்னர் எங்களது அழைப்பை ஏற்று 'மருதநாயகம்' திரைப்படத்தின் தொடக்கவிழாவில் கலந்துகொண்டு வாழ்த்தினார். அனேகமாக அவர் கலந்து கொண்ட ஒரே திரைப்பட படப்பிடிப்பு அதுதான். 5 ஆண்டுகளுக்கு முன்னர் லண்டனில் நடந்த கலாச்சார நிகழ்வில் அரண்மனையில் அவரைச் சந்தித்துப் பேசியது இன்னமும் பசுமையாக நினைவிருக்கிறது. தங்கள் பிரியத்திற்குரிய ராணியை இழந்து வாடும் இங்கிலாந்து மக்களுக்கும், அரச குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.1961 ஆண்டு அப்போதையைக் குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத், இந்தியக் குடியரசு அணிவகுப்பில் கலந்துகொள்ளுமாறு எலிசபெத் ராணிக்கு அழைப்பு விடுத்தார். அதன்பொருட்டு ராணி மற்றும் மறைந்த அவரது கணவர் இளவரசர் பிலிப் - எடின்பர்க் டியூக் உடன் வருகை தந்தார். அவருக்கு 'ராம் லீலா' மைதானத்தில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.

வரவேற்ற கருணாநிதி
அந்தப் பயணத்தில் ராணி இரண்டாம் எலிசபெத், மும்பை, கொல்கத்தா, சென்னை மற்றும் தாஜ்மஹால், மகாத்மா காந்தி சமாதி எனப் பல இடங்களைச் சுற்றிப் பார்த்தார்.அதன்பின் 1983 காமன்வெல்த் தலைவர்கள் மாநாட்டிற்காக அவர் இந்தியா வந்தர். அப்போதுதான் அவர் அன்னை தெரசாவைக் கவுரவித்தார். மூன்றாவது பயணத்தில்தான் சென்னை வந்த அவருக்கு அன்றைய முதல்வர் கருணாநிதி சிறப்பான வரவேற்பை வழங்கினார். உலக வரலாற்றில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரிட்டிஷ் அரசின் அரியணையில் அமர்ந்திருந்த ராணி இரண்டாம் எலிசபெத் தமிழ்நாட்டுடன் சேர்த்து நினைத்துப் பார்க்க வரலாற்றில் பல பக்கங்கள் உள்ளன.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications