Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லண்டனில் சிம்பொனி இசையில் லயிக்க வைத்து.. நாடு திரும்பும் இளையராஜா! அரசு சார்பில் நாளை வரவேற்பு

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இசை ஞானி இளையராஜா லண்டனில் தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றம் செய்திருக்கிறார். உலகின் தலைசிறந்த இசைக்குழுவான ராயல் பிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து இசை மழையில் ரசிகர்களை நனையவைத்தார். தமிழகத்தை பொருத்தவரை முதன்முதலில் சிம்பொனியை இசைத்தவர் இளையராஜாதான். தமிழ் நாட்டில் மட்டுமல்ல ஆசிய கண்டத்திலேயே முதலில் சிம்பொனியை எழுதி அதை அரங்கேற்றம் செய்தவர் என்ற பெருமையை இளையராஜா பெற்று இருக்கிறார். இளையராஜா நாளை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அவருக்கு தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்படுகிறது.

இசை உலகில் முடி சூடா மன்னராக வலம் வரும் இளையராஜா, சிம்பொனி இசையை லண்டனில் அரங்கேற்றினார். இசையில் புதிய சாதனையை படைத்துள்ள இளையராஜா, உலக அளவில் தமிழர்களுக்கு இதன் மூலம் பெருமை சேர்த்துள்ளார். 'வேலியன்ட்' என்ற தலைப்பில் அவர் உருவாக்கிய தனது முதல் சிம்பொனி இசையை லண்டனில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் ராயல் பிலார்மோனிக் இசைக்குழுவினருடன் இணைந்து, இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு அரங்கேற்றினார்.

Ilayaraja London music

இந்த இசை வடிவத்தை 35 நாட்களில் எழுதிய இளையராஜா, சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்து உள்ளார். ஈவன்டிம் அப்பல்லோ அரங்கத்தில் நடந்த இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியை ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். இளையராஜாவின் இசைக் குறிப்புகளுக்கு நூற்றுக்கணக்கான இசைக் கலைஞர்கள் ஒரே நேரத்தில் இசைத்தது பார்வையாளர்களை இசை மழையில் நனைய வைத்தது.

சிம்பொனி இசையை அரங்கேற்றியதன் மூலம் லண்டனையே இளையராஜா திரும்பி பார்க்க வைத்தார். ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த இசைநிகழ்ச்சியில், சிம்பொனி இசை மட்டும் 45 நிமிடத்திற்கு அரங்கேற்றம் செய்யப்பட்டது. அந்த 45 நிமிடமும் சிம்பொனி இசையால் இளையராஜா, இசை ரசிகர்களை கட்டிப்போட்டு இருந்தார். சிம்பொனி இசை அரங்கேற்றம் மூலம் மொசாட், பீத்தோவன், சாய்கோவ்ஸ்கி ஆகியோர் வரிசையில் இளையராஜாவும் சிம்பொனி இசை கலைஞர்கள் வரிசையில் இணைந்திருக்கிறார்

லண்டனில் சாதனை படைத்த இளையராஜா நாளை விமானம் மூலம் சென்னை திரும்புகிறார். அவருக்கு விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக லண்டன் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா கடந்த 6-ஆம் தேதி சென்னையில் இருந்து லண்டன் புறபட்டு சென்றார்.

அவருக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மத்திய அமைச்சர் எல் முருகன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+