100 நாட்களை தொட்ட விவசாய போராட்டம்.. கையில் எடுக்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம்.. மார்ச் 8ல் விவாதம்
லண்டன்: வடமாநிங்களில் நடந்து வரும் விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் நாட்டையே உலுக்கி உள்ளது. இதுவரை இந்திய அளவில் பேசப்பட்டு வந்த போராட்டம் நேற்று சர்வதேச அளவில் பிரபலம் அடைந்தது. கடந்த நவம்பர் மாதத்தில் இந்த இந்த நீண்ட போராட்டம் நடந்து வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் 100 நாட்களாக டெல்லி எல்லையில் போராட்டம் செய்து வருகிறது.
இந்தியாவை உலுக்கி வரும் இந்த விவசாய போராட்டம் குறித்து தற்போது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த விவசாய போராட்டம் குறித்து இணையத்தில் அளிக்கப்பட்டு வந்த மனுக்களாலும், பிரிட்டிஷ் எம்பிக்கள் பலர் இது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று வைத்த கோரிக்கையாலும் விவசாய போராட்டம் குறித்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட உள்ளது.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின் கீழ் அவையான ஹவுஸ் ஆப் காமன்சில் வரும் 8ம் தேதி இந்த விவாதம் நடக்க உள்ளது. விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பெட்டிஷன் கமிட்டி உறுப்பினர்கள், சில எம்பிக்கள் மற்றும் ஒரு அமைச்சர் பேச இருக்கிறார். எதிர்கட்சி உறுப்பினர்கள் பலர் இந்த போராட்டம் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விவசாய சட்டம் மற்றும் போராட்டம் என்பது உள்நாட்டு விவகாரம் என்று இந்திய வெளியுறவுத்துறை தொடர்ந்து கூறி வந்த நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் இதை பற்றி விவாதிக்க உள்ளனர். நேற்றுதான் பிரிட்டிஷ் வெளியுவுரை அமைச்சர் டொமினிக் உடன் இந்திய வெளியுறவுத்துறைஅமைச்சர் ஜெய்சங்கர் ஆலோசனை செய்தார்.
இதில் இரண்டு நாட்டு உறவு குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. இந்த நிலையில் பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்த சட்டத்தை விவாதிக்க உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் பேச்சு சுதந்திரம் குறித்தும் இந்த ஆலோசனையில் விவாதிக்க உள்ளனர்.
இந்த விவசாய போராட்டம் குறித்து பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிகாரபூர்வமாக பேச மறுத்து வந்த நிலையில் தற்போது இந்த விவாதம் நடக்கிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications