லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட கொடுமையே.. "டர்புர்" மூலமாகவும் கொரோனாவைரஸ் பரவ வாய்ப்பிருக்காம்.. நம்பறதா வேண்டாமா!

கொரோனாவைரஸ் பரவுவது குறித்து மற்றொரு ஆய்வு புது கருத்தை தெரிவித்துள்ளது

Google Oneindia Tamil News

லண்டன்: இதை நம்புவதா வேண்டாமான்னு தெரியலை.. அதாவது மனிதர்கள் விடும் "கேஸ்" மூலமாகக் கூட கொரோனாவைரஸ் பரவ வாய்ப்பிருக்காம். அதேசமயம், பிராப்பரா "ஜட்டி" போட்டிருந்தால், "கேஸ்" பரவாமல் தடுக்கப்பட்டால், வைரஸ் பரவலும் தடுக்க முடியுமாம். இப்படி ஒரு ஆய்வு சொல்கிறது.

Recommended Video

    பிரான்ஸில் தண்ணீரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா

    கொரோனாவைரஸ் தொடர்பாக நாளும் ஒரு செய்தி வந்தவண்ணம் இருக்கிறது. ஆரம்பத்தில் தும்மல், இருமல் மூலம் வெளியாகும் நீர்த் திவலைகள் மூலமாக அது பரவும் என்றனர். பிறகு மூச்சுக் காத்து பட்டால் கூட பரவும் என்றனர். இதோ இப்போது "கேஸ்" விட்டால் கூட அதன் மூலமாகவும் பரவ வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

    உலக அளவில் தற்போது அமெரிக்காவில்தான் மிகக் கடுமையான பாதிப்பை கொரோனாவைரஸ் கொடுத்துள்ளது. அங்கு இதுவரை 40,000க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டனர். லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, காஸ் விட்டால் எப்படி கொரோனாவைரஸ் பரவும் என்ற கேள்வி உலகம் முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது.

    கொரோனா வுகான் லேபிலிருந்து பரவவில்லை.. அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் WHO-வின் விளக்கம் கொரோனா வுகான் லேபிலிருந்து பரவவில்லை.. அமெரிக்காவுக்கு கோபத்தை ஏற்படுத்தும் WHO-வின் விளக்கம்

    வைரஸ்

    வைரஸ்

    இதுதொடர்பாக ஒரு ஆய்வை நடத்தியுள்ளனர் விஞ்ஞானிகள். அதாவது கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பாதிப் பேருக்கும் மேல் அதாவது 50% பேரின் மலத்தில் கொரோனாவைரஸ் இருந்ததாம். இதன் மூலம்தான் "கேஸ்" விட்டால் அதன் மூலமாக கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி மனிதர்கள் விடும் "கேஸானது" கண்ணுக்குத் தெரியாத நுன்னிய துகள்களை தாங்கிச் செல்லும். அந்தத் துகள்கள் மூலமாக பாக்டீரியாக்களை பரப்ப முடியும்.

    அடர்த்தி

    அடர்த்தி

    இதுதொடர்பாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டாக்டர் ஆன்டி டேக் என்பவர் கூறுகையில், கொரோனா பாதித்த நோயாளிகளைப் பரிசோதித்தபோது, அதில் 55 சதவீதத்துக்கும் மேற்பட்டோரின் மலத்தில் கொரோனாவைரஸ் இருந்தது தெரிய வந்தது. எனவே கொரோனாவைரஸை, நாம் விடும் கேஸ் நீண்ட தூரத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்று ஊகிக்கப்படுகிறது. ஒரு டால்கம் பவுடரின் ஒரு துகளின் அடர்த்தியானது, 5 மைக்ரான் ஏரோசாலை விட 5 மடங்கு பெரிதாகும்.

    சோதனை

    சோதனை

    கேஸ் மூலமாக பாக்டீரியாக்கள் பரவுவது தொடர்பான ஆய்வு 2001ம் ஆண்டிலேயே நடந்துள்ளது. கார்ல் குரூசல்நிக்கி மற்றும் டாக்டர் லூக் டென்னன்ட் ஆகிய இரு ஆஸ்திரேலிய டாக்டர்கள் இதுதொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர். இதற்காக 2 பேரை வைத்து ஆய்வு நடத்தினர். ஒருவர் ஜட்டி போடாமலும், இன்னொருவர் ஜட்டி போட்டும் சோதனைக்குட்படுத்தப்பட்டனர். இருவருக்கும் இடையே கிட்டத்தட்ட 5 செமீ இடைவெளி விடப்பட்டிருந்தது.

    கண்ணாடி கின்னம்

    கண்ணாடி கின்னம்

    இருவரும் ஒரு கண்ணாடிக் கின்னத்தில் "கேஸ்" விடுமாறு பணிக்கப்பட்டிருந்தனர். அதில் ஜட்டி போட்டவர் விட்ட "கேஸ்" நிரம்பிய கிண்ணத்தில் எந்த பாக்டீரியாவும் பரவவில்லை. மாறாக ஜட்டி போடாமல் இருந்தவரின் கிண்ணத்தில் பாக்டீரியா தொற்று பரவியது தெரிய வந்ததாம். இந்த பாக்டீரியா ஆபத்தை ஏற்படுத்தாத பாக்டீரியாதான். ஆனால் எப்படி இது கேஸ் மூலம் பரவுகிறது என்பதற்கு இதுவரை விடை கிடைக்கவில்லையாம்.

    புது தகவல்

    புது தகவல்

    இந்த ஆண்டு தொடக்கத்தில் சீனாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்புப் பிரிவு மையமானது இதுகுறித்த முக்கியத் தகவலை கூறியிருந்தது. அதாவது நாம் விடும்" கேஸ்" தடுக்கப்படும் பட்சத்தில் அதன் மூலம் கொரோனாவைரஸ் பரவல் இருக்காது என்று கூறியிருந்தது. அதேசமயம், நாம் ஜட்டி போடாமல் இருந்தால் இது நிச்சயம் பரவும் என்று கூறியுள்ளனர்.

    இதுதொடர்பான அதிகாரப்பூர்வமான தகவல் எதையும் இதுவரை உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கவில்லை. எனவே அதுவரை கவலைப்படாமல் "கேஸ்" விடலாம்.. எதற்கும் ஜாக்கிரதையாவே இருப்போம்!

    English summary
    covid19: can farts spread coronavirus what scientists say
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X