லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உயிர் பலி: உலக வல்லரசுகளை ஒரே நாளில் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொரோனா.. அமெரிக்கா, ரஷ்யாவில் ஷாக்

Google Oneindia Tamil News

லண்டன்: உலகில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடான அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,899 பேர் பலியாகி உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 812 பேர் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். பிரேசிலில் ஒரே நாளில் 484 பேரும், இந்தியாவில் 385 பேரும் ஒரே நாளில் பலியாகி உள்ளனர். கொரோனா 3வது அலை பல நாடுகளில் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் வந்துள்ள கொரோனா 3வது அலை உலக வல்லரசு நாடுகளையே நிலைகுலைய செய்து வருகிறது. அமெரிககா, ரஷ்யா, இங்கிலாந்து, ஈரான், பிரேசில் உள்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. டெல்டா, ஆல்பா போன்ற வைரஸ்களால் கடும் பாதிப்புகளை இந்த நாடுகள் சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் இதுவரை 230,274,541 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 206,993,284 பேர் குணம் அடைந்துவிட்டனர். கொரோனா தொற்றால் உலகம் முழுவதும் இதுவரை 4,721,570 பேர் பலியாகி உள்ளனர்.

தற்போது கொரோனா தொற்று பாதிப்புடன் 18,559,687 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இன்று காலை நிலவரப்படி 98,331 பேர் கவலைக்கிடமான நிலையில் உலகம் முழுவதும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்

அதிக மரணங்களால் மிரளும் ரஷ்யா.. உலகில் கொரோனா மோசமாக பாதித்த டாப் 5 நாடுகள்... ரிப்போர்ட் அதிக மரணங்களால் மிரளும் ரஷ்யா.. உலகில் கொரோனா மோசமாக பாதித்த டாப் 5 நாடுகள்... ரிப்போர்ட்

முதலிடம்

முதலிடம்

உலகிலேயே கொரோனாவின் தீவிரத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்கா . அங்கு நேற்று முன்தினம் ஒரே நாளில் 76,599 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் நேற்று அந்த எண்ணிக்கை 117,989 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 43,239,677ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 125,700 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,829,282ஆக உள்ளது. ஒரே நாளில் நேற்று முன்தினம் 637 பேர் பலியாகினர். ஆனால் கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 117,989 பலியாகி உள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 696,837 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே உச்சபட்சமாக அமெரிக்காவில் தான் 9,713,558 ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சையில் உள்ளனர்.

2வது இடம்

2வது இடம்

அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இங்கிலாந்தில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா உடன் ஒப்பிடும் போதும் உயிரிழப்பு எண்ணிக்கை மிகமிக குறைவு ஆகும். இங்கிலாந்தில் ஒரே நாளில் 31,564 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,496,543 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 32,678 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,043,557 ஆக உள்ளது. ஒரே நாளில் 203 பேர் இங்கிலாந்தில் பலியாகி உள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 135,455 ஆக உயர்ந்துள்ளது. இங்கிலாந்தில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 1,317,531 ஆக உள்ளது.

3வது இடம்

3வது இடம்

இங்கிலாந்துக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு துருக்கியில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து போல் அல்லாமல் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை குறைவாக உள்ளது. துருக்கியில் நேற்று முன்தினம் 27,688 ஆக இருந்த பாதிப்பு எண்ணிக்கை 29,338 ஆக உயர்ந்துள்ளது. இதனால் துருக்கியில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6,904,285 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 23,361 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,388,380 ஆக உள்ளது. ஒரே நாளில் 260 பேர் துருக்கியில் பலியாகி உள்ளனர். இதனால் துருக்கியில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 62,065 ஆக உயர்ந்துள்ளது. துருக்கியில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 453,840 ஆக உள்ளது.

4வது இடம்

4வது இடம்

துருக்கிக்கு அடுத்தபடியாக தினசரி பாதிப்பு இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஆனால் அமெரிக்கா போலவே ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை இல்லை. இந்தியாவில் ஒரே நாளில் 27,333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,530,077 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 34,148 பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 32,776,207 ஆக உள்ளது. ஒரே நாளில் 385 பேர் இந்தியாவில் பலியாகி உள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 445,801 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 308,069 ஆக உள்ளது.

5வது இடம்

5வது இடம்

கடந்த 24 மணி நேரத்தில் உலகிலேயே அதிக கொரோனா பலி அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 812 பேர் பலியாகி உள்ளனர். இதனால் ரஷ்யாவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 199,808 ஆக உயர்ந்துள்ளது. ரஷ்யாவில் ஒரே நாளில் 19,179 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ரஷ்யாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 7,313,851 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரம் ஒரே நாளில் 15,437பேர் குணம் அடைந்ததால் ஒட்டுமொத்தமாக குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 6,526,111 ஆக உள்ளது. ரஷ்யாவில் ஆக்டிவ் நோயாளிகள் எண்ணிக்கை 587,932 ஆக உள்ளது.

English summary
In the last 24 hours alone, 1,899 people have died in the United States, the world's worst-affected country by corona. Russia is next with 812 victims in a single day. In Brazil, 484 people were killed in a single day and in India, 385 people were killed in a single day. Corona 3rd wave is spiked in many countries.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X