லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதல்முறையாக செல்லப் பிராணிகளில் ஆல்பா வைரஸ் பாதிப்பு.. ஆய்வில் கண்டுபிடிப்பு!

Google Oneindia Tamil News

லண்டன்: தென் கிழக்கு இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஆல்பா கொரோனா வைரஸ் வீட்டில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளான நாய்கள், பூனைகளுக்கும் பரவியிருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலக நாடுகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பரவி பல்வேறு பாதிப்புகளை கொடுத்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் பல்வேறு நாடுகளில் மரபணு மாற்றம் அடைந்து பல்வேறு வகையில் அவை உருமாறியும் வருகின்றன.

Covid variant Alpha found in pets says study

இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, நைஜீரியா உள்ளிட்ட நாடுகளில் உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதை எளிதில் அடையாளம் காண அவற்றிற்கு உலக சுகாதார அமைப்பு பெயர்களை சூட்டியது.

அதில் இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸுக்கு ஆல்பா என பெயரிடப்பட்டது. அது போல் இந்தியாவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸுக்கு டெல்டா என பெயராகும். இந்த வகையில் டெல்டா வைரஸ் முன்பிருந்த வைரஸ் வகையை விட வேகமாக பரவி வருகிறது.

இந்த நிலையில் தென்கிழக்கு இங்கிலாந்தில் முதல்முறையாக கண்டறியப்பட்ட ஆல்பா வகை வைரஸ் நாய், பூனைகளுக்கு பரவி இருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. 2 பூனைகள் மற்றும் ஒரு நாய்க்கு எடுக்கப்பட்ட சளி பரிசோதனையில் அவை மூன்றும் ஆல்பா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இந்த செல்லப்பிராணிகளுக்கு நோய் பாதிக்கப்படுவதற்கு முன்பு சுவாச பிரச்சினை உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து இங்கிலாந்து நாட்டு கால்நடை ஆய்வு மையத்தின் டாக்டர் லூசா பெராசின் கூறுகையில் எங்களது ஆய்வு மூலம் இரு பூனைகள் மற்றும் ஒரு நாய்க்கு ஆல்பா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது.

சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்! சென்னை தி நகர் துரைசாமி சுரங்கபாதை உள்பட 3 சுரங்கபாதைகள் மூடல்!

அவற்றிற்கு சுவாச கோளாறுகளுடன் இதய பிரச்சினைகளும் இருந்துள்ளது. இது போன்ற பிரச்சினைகளை இதற்கு முன்னர் செல்லப்பிராணிகளிடம் கண்டதே இல்லை. கொரோனா வைரஸால் விலங்குகளும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவைகளுக்கு மனிதர்கள் மூலம் பரவும் என தெரிகிறது.

இந்த பரவலானது மிகவும் அரிதான ஒன்றாகவே திகழ்வதாக தெரிவித்தார். இந்த பிராணிகளுக்கு இதய தசைகளில் அழற்சியும் இருந்தது கண்டறியப்பட்டதாக டாக்டர் லூசா தெரிவித்தார்.

English summary
Covid Variant Alpha found in two cats and a dog says Study.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X