லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிரிட்டனில் முதல்முறை.. கொரோனாவால் 24 மணி நேரத்தில் யாரும் இறக்கவில்லை

Google Oneindia Tamil News

லண்டன் : கடந்த 2020ம் ஆண்டில் மார்ச்சில் கொரோனா பரவ தொடங்கியதில் இருந்து இதுநாள் வரை பிரட்டனில் கொரோனாவால் தினமும் மக்கள் இறந்து போவது வாடிக்கையாகும். ஆனால் முதல் முறையாக இங்கிலாந்தில் கொரோனாவால் நேற்று யாருமே இறக்கவில்லை. இது மிகப்பெரிய சந்தோஷத்தை இங்கிலாந்து மககளுக்கு ஏற்படுத்தி உள்ளது.

சமீபத்திய புள்ளிவிவரங்களின் படி இங்கிலாந்து தினசரி 3,165 புதிய கொரோனா பாதிப்புகளை பதிவு செய்து இருந்தது. திங்களன்று 3,383 ஆக பாதிப்பு உயர்ந்தது. முன்னதாக கடந்த வாரம் 2,493 ஆக பாதிப்பு இருந்தது. இந்தியாவில் அடையாளம் காணப்பட்டதாக கருதப்படும் கொரோனா வைரஸ்களின் பாதிப்பு அதிகரிப்பால் சிறிய அளவில் உயர்ந்துள்ளது.

Covid: Zero daily deaths announced in UK for first time

தினசரி இறப்புகளின் அறிக்கைகள் பெரும்பாலும் வார இறுதி நாட்களிலும், வாரத்தின் தொடக்கத்திலும் குறைவாகவே இருக்கும். இந்நிலையில் பிரிட்டனில் கொரோனாவால் யாரும் இறக்காத நாளாக திங்கள்கிழமை மாறி உள்ளது.

சுகாதாரச் செயலாளர் மாட் ஹான்காக் இதுபற்றி கூறும் போது, மொத்த நாடும் இந்தச் செய்தியைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடையும். தடுப்பூசிகள் நன்றாக செயல்படுகின்றன - உங்களையும், உங்களைச் சுற்றியுள்ளவர்களையும், உங்கள் அன்புக்குரியவர்களையும் பாதுகாக்கிறது.

ஆனால் சந்தேகத்திற்கு இடமின்றி சொல்கிறேன் இது நல்ல செய்தி. ஆனாலும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆக வேண்டும். நாம் இன்னும் இந்த கொரோனா வைரஸை வெல்லவில்லை, அது உங்களுக்குத்ம் தெரியும், மேலும் புதிய பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தயவுசெய்து கொரோனா வழிமுறைகளை பின்பற்றி செயல்படுங்கள் என்றார். மேலும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

English summary
The UK has announced zero daily Covid deaths within 28 days of a positive test for the first time since March 2020.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X