சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா! 72 அடி உயர ரோலர் கோஸ்டரில் அந்தரத்தில் தொங்கிய மக்கள்! செம ஷாக்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஆசையோடு ரோலர் கோஸ்டரில் சென்றவர்கள் 72 அடி உயரத்தில் அந்தரத்தில் சிக்கி கொண்டு காப்பாற்றும்படி அலறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி உள்ள நிலையில் ரோலர் கோஸ்டர் பாதிவழியில் அந்தரத்தில் ஏன் நின்றது? என்பது பற்றிய பின்னணி தகவலும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இங்கிலாந்து நாட்டின் சவுத்என்ட் எஸ்ஸக்ஸ் பகுதியில் ‛அட்வென்சர் ஐலேண்ட்' எனும் பொழுதுபோக்கு பூங்கா உள்ளது. இங்கு பிரமாண்டமான ரோலர் கோஸ்டர் உள்ளது. அட்வென்ச்சரை விரும்பும் மக்கள் இந்த பூங்காவில் உள்ள ரோலர் கோஸ்டரில் ஆர்வமாக பயணிப்பார்கள்.

Eight riders were left stranded at the top of a 72 feet high roller coaster in england

72 அடி உயரம் கொண்ட இந்த ரோலர் கோஸ்டரின் வேகம், பள்ளம், மேடாக உருவாக்கப்பட்ட பாதையில் சட்டென சாய்ந்து நிமிரும் இந்த ரோலர் கோஸ்டர் பயணம் என்பது உண்மையில் அங்கு த்ரில் நிறைந்ததாக இருக்குமாம்.

இத்தகைய சூழலில் தான் ‛அட்வென்ச்சர் ஐலேண்ட்' பொழுதுபோக்கு பூங்காவில் வழக்கம்போல் ரோலர் கோஸ்டர் இயங்கியது. மதியம் 2 மணியளவில் 8 வயது சிறுமி உள்பட 8 பேர் ரோலர் கோஸ்டரில் ஏறினர். அவர்கள் சாகச பயணத்தை மேற்கொண்டபோது திடீரென ரோலர் கோஸ்டர் வழக்கத்துக்கு மாறாக அந்தரத்தில் அப்படியே நின்றது.

இந்த வேளையில் ரோலர் கோஸ்டரில் பயணித்தவர்கள் மற்றும் அதனை வேடிக்கை பார்த்தவர்கள் என அனைவரும் ‛பயமுறுத்தும் வகையில் ரோலர் கோஸ்டரை அந்தரத்தில் நிறுத்தி இருக்கின்றனர்' என நினைத்தனர். ஆனால் சில நிமிடங்கள் வரை அப்படியே அசைவு ஏதுமின்றி ரோலர் கோஸ்டர் நின்றது. இதனால் சந்தேகம் கிளம்பியது.

மேலும் ரோலர் கோஸ்டரில் இருந்தவர்கள் அபயக்குரல் எழுப்ப பார்க்கில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? என்பது தெரியவில்லை. இதுபற்றி விசாரித்தபோது தான் திடீரென ஏற்பட்ட கோளாறு காரணமாக ரோலர் கோஸ்டர் இயங்காமல் அந்தரத்தில் நின்றது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக மீட்புபடையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மீட்பு படையினர் விரைந்து வந்து போராடி 40 நிமிடங்கள் கழித்து ரோலர் கோஸ்டரில் சிக்கிய 8 பேரையும் பத்திரமாக மீட்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகையில், ‛‛பூங்காவில் ரோலர் கோஸ்டரில் சிக்கியவர்கள் அந்தரத்தில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். அவர்கள் காப்பாற்றும்படி குரலெழுப்பினர். எப்படியாவது அனைவரையும் காப்பாற்ற வேண்டும் என பிரார்த்தனை செய்தோம். நல்லவேளை யாருக்கும் எதுவும் ஆகவில்லை. அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுவிட்டனர்'' என்றார்.

இதுபற்றி அந்த ‛அட்வென்ச்சர் ஐலேண்ட்' பொழுதுபோக்கு பூங்காவை நடத்தும் ஸ்டாக்வேல் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் மார்க் மில்லர் கூறுகையில், ‛‛ரோலர் கோஸ்டரில் சிக்கியவர்கள் 40 நிமிடத்தில் மீட்கப்பட்ள்ளனர். இந்த மீட்பு பணியில் எங்களின் பணியாளர்களும் மீட்பு படையினரும் ஈடுபட்டனர். ரோலர் கோஸ்டரில் ஏற்பட்ட பிரச்சனை பற்றி விசாரித்து வருகிறோம்'' என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+