12 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய தெரு நாய்.. இறந்துவிட்டதாக கலங்கிய அக்கம் பக்கத்தினர்.. என்ன நடந்தது?
லண்டன்: தெரு நாய் மோசமாக தாக்கியதில் இங்கிலாந்தின் மான்சென்ஸ்டர் நகரில் 12 வயது சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறுவன் இறந்துவிட்டதாகவே அக்கம் பக்கத்தினர் அஞ்சிய நிலையில், நல்ல வேளையாக தீவிர சிகிச்சையால் உயிர் பிழைத்துள்ளான் சிறுவன்.
தெரு நாய் தொல்லை இந்தியாவில் மட்டுமல்ல, இங்கிலாந்திலும் கூட இருக்கிறது. இந்தியாவிற்கும் இங்கிலாந்திற்கு உள்ள வித்தியாசம் என்னவென்றால் இங்கிலாந்தில் நாய்களை வளர்ப்பு பிராணியாக வளர்ப்பவர்கள் அனுமதி பெற வேண்டும். அப்போதுதான் யார் நாய் என்பதை கண்டுபிடித்துவிட முடியும்.

அண்மையில் குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் மிகப்பெரிய உணவு பொருள் விற்பனை கார்ப்பரேட் நிறுவங்களில் ஒன்றான வாக் பக்கிரியின் நிர்வாக இயக்குநரான பராக் தேசாய், தெரு நாய்களின் தாக்குதலால் தலையில் பலத்த காயம் அடைந்து அக்டோபர் 22ம் தேதி உயிரிழந்தார்.
அக்டோபர் 15, 2023 அன்று காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தேசாய் தெரு நாய்களால் தாக்கப்பட்டார். இதனால் பயந்து போய் ஓடிவந்த அவர், தரையில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து ஒரு வாரம் கழித்து இறந்து போனார். இந்தியாவில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ள நிலையில், இங்கிலாந்தின் தெருவில் சென்ற 12 வயது சிறுவனை நாய் ஒன்று மோசமாக தாக்கியது. கண்ட இடங்களில் கடித்து குதறி உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கிரேட்டர் மான்செஸ்டரின் ஓல்ட்ஹாம் நகரில் 12 வயதான மொஹித் கர்தாஸி என்ற சிறுவனை கடுமையாக எக்ஸ்எல் புல்லி என்ற நாய் பயங்கரமாக தாக்கியது. நாயின் கொடூர தாக்குதலில் சிறுவன் படுகாயம் அடைந்தான். சிறுவன் கிட்டத்தட்ட இறந்துவிட்டதாக அக்கம்பக்கத்தினர் அச்சம் அடைந்தனர்.
நாயின் தாக்குதலில் மகன் இறந்துவிட்டதாக அக்கம் பக்கத்தினர் சொல்வதைக் கேட்ட சிறுவனின் தந்தை விரைந்து வந்தார். இதனிடையே தகவல் அறிந்து வந்த போலீசார் சிறுவன் மொஹித் கர்தாஸியை மீட்டு ராயல் மான்செஸ்டர் குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் நாயை அதிகாரிகள் பிடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 43 வயதான பவுலா ஜென்கின்ஸ் என்பவரை ஆபத்தான முறையில் நாயை வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்தனர். முன்னதாக 31 வயதுடைய பெண் ஒருவரும் அந்த நாயின் தாக்குதலில் காயமடைந்தார். ஆனால் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை.

இதனிடையே 12 வயது சிறுவனுக்கு மருத்துவமனையில் மூன்று மணிநேரம் பல இடங்களில் அறுவை சிகிச்சை நடந்தது. பிளாஸ்டி சர்ஜரியும் சில இடங்களில் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் சிறுவனன் சுயநினைவுக்குத் திரும்பினான். இப்போது பேசுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications