"நீங்கதான் என்னோட கடைசி நம்பிக்கை!" கண்ணீர்விட்ட இளம் பெண்.. பதறிய போலீஸ்! கடைசியில் குபீர் ட்விஸ்ட்
லண்டன்: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் அவசர அழைப்பிற்கு அழைத்துச் செய்த காரியம் சலசலப்பை உண்டாக்கி உள்ளது.
பொதுவாக நாம் எதாவது மிகப் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டு விட்டோம் என்றால் அவசர உதவியை அழைப்போம். அவர்களும் தக்க நேரத்தில் வந்து நமக்கு உதவுவார்கள்
ஆனால், சில குறும்புக்கார இளைஞர்கள் விளையாட்டிற்குக் கூட அவசர உதவியை அழைப்பார்கள். இதுபோன்ற அழைப்புகளை ஃபில்டர் செய்வதே போலீசாருக்கு பெரிய வேலையாக இருக்கும்.

பிரிட்டன்
இதனிடையே இதுபோன்ற ஒரு சம்பவம் தான் இங்கிலாந்து நாட்டில் நடந்துள்ளது. ஆனால், அந்த பெண் விளையாட்டிற்குக் கால் செய்யவில்லை. அவசர உதவி எண்ணுக்கு அழைத்த அவர், தான் பெரிய பிரச்சினையில் சிக்கி உள்ளதாகக் கதறி உள்ளார். என்ன பிரச்சினை என்று கேட்டதற்கு, அவர் அளித்த பதிலைக் கேட்டு போலீசாருக்கு சிரிப்பு வந்துவிட்டது.

கடைசி நம்பிக்கை
இது தொடர்பாத இங்கிலாந்தின் வெஸ்ட் யார்க்ஷயர் போலீசார் ஆடியோ ஒன்றைத் தனது ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில் இளம் பெண் ஒருவர், "ஹாய், இப்போது நான் சொல்வதைக் கேட்டு உங்களுக்கு செம கோபம் கூட வரலாம். இதற்காக நான் எல்லாருக்கும் ஃபோன் செய்துவிட்டேன். ஆனால் யாருக்கும் எனக்கு உதவ மறுக்கிறார்கள். நீங்கள் தான் எனது கடைசி நம்பிக்கை. என்ன கைவிட்டுவிடாதீர்கள்.

என்ன பிரச்சினை தெரியுமா
எனக்கு உங்களின் உதவி தேவை. எனது வீட்டில் மிகப் பெரிய சிலந்தி ஒன்று புகுந்துவிட்டது. நான் அதை விரட்டப் பல முயற்சிகள் எடுத்துவிட்டேன். ஆனால் என்னால் அதை வெளியே அனுப்ப முடியவில்லை. தயவு செய்து எனக்கு உதவுங்கள். அது ஒரு ராட்சத சிலந்தி! நான் ஜோக் செய்யவில்லை. பிளீஸ் நேரில் வந்து உதவுங்கள்!" என்று அவர் கூறுகிறார். அதற்கு மறுமுனையில் இருக்கும் அதிகாரி, "துரதிர்ஷ்டவசமாக போலீசாரால் உங்கள் வீட்டில் இருந்து சிலந்தியை வெளியேற்ற முடியாது" என்று கூறி அழைப்பைத் துண்டித்துவிட்டார்.

தேவையற்ற அழைப்புகள்
இது தொடர்பாக வெஸ்ட் யார்க்ஷயர் போலீஸ் அதிகாரி கூறுகையில், "உங்கள் வீட்டில் சிலந்தி இருப்பதற்கு எல்லாம் அவசர எண்ணுக்குத் தொடர்பு கொள்ள வேண்டாம். சம்பந்தமே இல்லாமல் எங்களுக்கு வரும் அழைப்புகளுக்கு இது ஒரு உதாரணம். சராசரியாக, எங்களுக்கு வரும் ஆயிரம் அழைப்புகளில் 120 அழைப்புகள் இதுபோன்ற அழைப்புகள் தான். காவல்துறையின் நேரத்தை வீணடிக்காதீர்கள். இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோருக்கு ஃபைன் விதிக்க முடிவு செய்துள்ளோம்.

பைன்
அந்த பெண்ணுக்கும் ஃபைன் போட்டுள்ளோம்" என்றார். இந்த ஆடியோவை கேட்டு பலரும் அந்த பெண் தேவையில்லாமல் போலீஸ் நேரத்தை வீணடிப்பதாகக் கூறி வருகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் அந்த பெண்ணின் குரலைக் கேட்டால், விளையாட்டாகச் செய்ததை போலத் தெரியவில்லை என்றும் உண்மையில் பயந்து போய் தான் அவர் அப்படிச் செய்துள்ளதாகவும் கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications