ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்.. ஒன்று கூடும் ஜி7 நாடுகள்.. நாளையே முக்கிய ஆலோசனை!
லண்டன்: ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் குறித்தும், தாலிபான் வெற்றி குறித்தும் ஆலோசிக்க ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளது. நாளை இந்த ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது.
ஜி7 நாடுகள் என்பது கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் ஆகும். கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் இவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. பிரிட்டனின் கான்வாலில் ஜி7 நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டு கொரோனா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்தனர். முக்கியமாக ஆசியாவில் சீனாவின் மாபெரும் வளர்ச்சி குறித்தும், மார்க்கெட் உலகை சீனா கட்டுப்படுத்துவது குறித்தும் இதில் ஆலோசனை செய்யப்பட்டது.
இதை சீனாவும் கூட விமர்சனம் செய்து இருந்தது. ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமாக தெரிவித்தது. இந்த நிலையில்தான் தற்போது ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து ஆலோசிக்க ஜி7 நாடுகள் முடிவு செய்துள்ளது.

ஆப்கானிஸ்தான்
பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பின் பெயரில் இந்த சந்திப்பு நடக்க உள்ளது. ஆன்லைன் மீட்டிங்காக நாளை இந்த சந்திப்பு நடக்க உள்ளது. "இது மிக முக்கியமான கூட்டம். உலக நாடுகள் எல்லாம் ஒன்றிணைத்து ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுபவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். இது மனித பாதுகாப்பு தொடர்பான பிரச்சனை. ஆப்கான் மக்கள் கடந்த 20 வருடமாக போராடி பெற்ற உரிமைகள் அங்கு காக்கப்பட வேண்டும்" , என்று போரிஸ் ஜான்சன் இந்த மீட்டிங் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ளார்.

போரிஸ் ஜான்சன்
கடந்த வாரத்தில் இருந்து இந்த கூட்டத்தை நடத்த வேண்டும் என்று இவர் முயன்று வந்த நிலையில் தற்போது இந்த மீட்டிங் நாளை நடக்கும் என்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தான் விவகாரத்தை கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய பணக்கார நாடுகள், முக்கியமாக மேற்கத்திய நாடுகள் எதிர்கொண்ட விதம் சரியில்லை என்று கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டது.

விமர்சனம்
இந்த நிலையில்தான் தற்போது ஜி7 மாநாடு நடக்க உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களுக்கான பாதுகாப்பு, அங்கு இருக்கும் மக்களின் சுதந்திரம், பெண் உரிமைகள் குறித்து இந்த ஜி 7 மாநாட்டில் பேசப்பட உள்ளது. அதோடு ஆகஸ்ட் 31க்கு பின்பும் அமெரிக்க படைகளை மீட்பு பணிகள் முடியும் வரை ஆப்கானிஸ்தானில் இருக்க வைப்பது தொடர்பான முடிவுகள் இதில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.

அமெரிக்க படை
தாலிபான்களின் ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு பின் நடக்கும் முக்கியமான ஆலோசனை கூட்டங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாக ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் ஐநா பாதுகாப்பு கவுன்சில் சார்பாக அவசரமாக மீட்டிங் நடத்தப்பட்டது. ஆப்கானிஸ்தானில் இருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறும் நிலையில் நார்வே உள்ளிட்ட நாடுகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த மீட்டிங் நடத்தப்பட்டது.
Recommended Video

ஐநா
இதில் ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றாக செயல்பட வேண்டும், ஆப்கானிஸ்தான் மீண்டும் இருண்ட காலத்திற்கு சென்றுவிட கூடாது. மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் உடனே நிறுத்தப்பட வேண்டும். சர்வதேச மனித உரிமை விதிகள், கஷ்டப்பட்டு மீட்கப்பட்ட பெண் சுதந்திரம் காக்கப்பட வேண்டும். ஆப்கானிஸ்தானில் அனைவரும், குறிப்பாக தாலிபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும், என்று ஐநா பொதுச்செயலாளர் ஆண்டோனியோ குட்டேரஸ் இன்று நடந்த ஐநா பாதுகாப்பு கவுன்சில் மீட்டிங்கில் பேசியது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications