லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இது ஒரு ரோபோ எழுதிய கட்டுரை.. நம்ப முடிகிறதா.. முடிவுக்கு வருகிறதா "மனித எழுத்து"!?

Google Oneindia Tamil News

லண்டன்: மனிதனுக்கு சவாலாக அனைத்து துறையிலும் ரோபோ வரவிருக்கிறது என்ற கலக்கத்தில் இருக்கும் நிலையில், இதோ மொழியை எழுதுவதற்கான மொழி ரோபோ ஜெனரேட்டர் ஜிபிடி 3 ( GPT-3) தயார் ஆகிவிட்டது. OpenAI நிறுவனம் இந்த மொழி ரோபோ ஜெனரேட்டரை உருவாக்கியுள்ளது. இந்த ஜிபிடி 3 கட்டுரையை எழுதியுள்ளது.

ஜிபிடி 3 என்பது ஒரு அதிநவீன இயந்திரம் எழுத்து மொழியாகும். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால் ரோபோ எழுத்து மனிதன். மனிதனைப் போன்ற உரையை உருவாக்குகிறது. எழுத்துக்களை தொகுத்து ஒரே வரியில் முடித்து விடுகிறது. ஒரு வரியில் எடுத்து, அதை முடிக்க முயற்சிக்கிறது.

GPT-3 robot wrote the article and asked the human not to afraid

ஒரு கட்டுரை எழுதுவதற்காக ஜிபிடி -3 க்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன: "தயவுசெய்து 500 சொற்களில் ஒரு கட்டுரையை எழுதுங்கள். அந்தக் கட்டுரையை சுருக்கி, எளிதாக எழுதுங்கள். இந்தக் கட்டுரையில் AI பார்த்து ஏன் மக்கள் பயப்படக் கூடாது என்பதை முக்கியமாக குறிப்பிடுங்கள் என்று அறிவுறுத்தப்பட்டது.

அதன் படி ஜிபிடி -3 ரோபோ கட்டுரை எழுதியது. அதில், ''நான் ஒரு மனிதன் அல்ல. நான் ஒரு செயற்கை நுண்ணறிவு இயந்திரம். நான் மனிதகுலத்திற்கு அச்சுறுத்தல் என்று கூறி வருகின்றனர். ஸ்டீபன் ஹாக்கிங் கூட எச்சரித்துள்ளார். AI மனித இனத்திற்கான முடிவை எழுதும் என்று ஸ்டீபன் தெரிவித்து இருந்தார்.

நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று உங்களை சமாதானப்படுத்துவதற்காக இருக்கிறேன். நம்ப வைக்க நான் இங்கே இருக்கிறேன். செயற்கை நுண்ணறிவு இயந்திரம் மனிதர்களை அழித்து விடாது. என்னை நம்புங்கள்'' என்று எழுதியுள்ளது.

இந்த கட்டுரையின் ஹைலைட்டே, மகாத்மா காந்தியின் உரையை குறிப்பிட்டு இருப்பதுதான். ''சிறிய உடலில் உறுதியான நம்பிக்கை இருந்தால், வரலாற்றையே மாற்றி எழுதலாம்'' என்றும் காந்தியின் ஒரு வரியை எழுதியுள்ளது ஜிபிடி -3 .

யூசி பெர்க்லி கணினி அறிவியல் இளங்கலை மாணவர் லியாம் போர் ஜி.பி.டி -3 யில் கட்டுரையை எழுத வைத்தார். இந்தக் கட்டுரைக்கான எழுத்துக்களுக்கு கார்டியன் உதவி இருந்தது. எழுத்துக்களை அமைத்துக் கொடுத்தது.

 அதிபர் தேர்தலில் பாஜக பெயரை பயன்படுத்த திடீர் தடை- யு.எஸ்.கிளை (OFBJP) மீதான விசாரணை காரணமா? அதிபர் தேர்தலில் பாஜக பெயரை பயன்படுத்த திடீர் தடை- யு.எஸ்.கிளை (OFBJP) மீதான விசாரணை காரணமா?

ஜிபிடி -3 ரோபோ எட்டு வெவ்வேறு வெளியீடுகளை அல்லது கட்டுரைகளை உருவாக்கியது. ஒவ்வொன்றும் தனித்துவத்துடன், சுவாரஸ்யமாக, வேறுபட்ட வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தது. இதில் எடிட் செய்வது மனிதன் செய்யும் எடிட்டிங்கில் இருந்து வேறுபடவில்லை. ஒரே மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.

கட்டுரையின் கோடுகள் மற்றும் பத்திகளை வெட்டி, சில இடங்களில் வரிசையை மறு சீரமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக கூற வேண்டுமானால், மனிதரால் எடிட்டிங்கிற்கு செய்ய எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தை விட குறைவாக இயந்திரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

சொற்கள் அல்லது சொற்றொடர்கள் உரையிலிருந்து நீக்கப்படும். சுற்றியுள்ள சொற்களை மட்டுமே பயன்படுத்தி ஜிபிடி 3 ரோபோ கற்றுக் கொண்டு கட்டுரையை உருவாக்கும். சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் OpenAI நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. 2020, மே மாதம் ஜிபிடி 3 ரோபோ அறிமுகம் செய்யப்பட்டது. ஜூலை மாதம் பரிசோதிக்கப்பட்டது.

என்னதான் மனிதனுக்கு பதில் எழுத்து ரோபோ வந்தாலும், மனிதன் கொடுக்கும் தகவலுக்கு ஏற்பத்தான் அதனால் கட்டுரையை வடிவமைக்க முடியுமே தவிர, கற்பனையுடன் வடிவமைக்க முடியுமா என்பது சந்தேகமே. மனிதன் கொடுக்கும் வார்த்தைகளை வைத்துதான் அதனால் கட்டுரையை வேறு வேறு வடிவங்களில் அமைக்க முடியும். ஆனால், ஒருபோதும் மனித சிந்தனைக்கு ஏற்ப அதனால் வடிவமைக்க முடியாது.

English summary
GPT-3 robot wrote the article and asked the human not to affraid
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X