Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இந்தியா-பாகிஸ்தான் போட்டி.. இங்கிலாந்தில் இந்து முஸ்லீம் இடையே வன்முறை?.. குவிக்கப்பட்ட போலீசார்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து நாட்டின் லெய்செஸ்டர் நகரில் சமீபத்தில் நடந்த இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பாக இந்து முஸ்லீம்களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் அங்கு அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள நகரம் லெய்செஸ்டர்.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து சுமார் 100 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த லெய்செஸ்டர் நகரத்தில் இந்தியர்கள் பலர் வசிப்பதாக சொல்லப்படுகிறது.

 வன்முறை

வன்முறை

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அங்கு வசிக்கும் இந்துக்கள் மற்றும் முஸ்லீம்கள் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இரு சமூகத்தினர் இடையே ஏற்பட்ட மோதலால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிலமையை கட்டுக்குள் கொண்டுவர பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீசார் குவிக்கபட்டனர். கடந்த மாதம் 28 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின.

போலீஸ் எச்சரிக்கை

போலீஸ் எச்சரிக்கை

இதில் இந்திய கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி தொடர்பாகத்தான் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் வெடித்ததாக போலீஸ் தரப்பில் சொல்லப்படுகிறது. மோதல் ஏற்பட்டதையடுத்து, போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எந்த வகையிலும் வன்முறை மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள மாட்டோம்'' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விசாரணை நடத்தி வருகிறோம்

விசாரணை நடத்தி வருகிறோம்

மேலும் லெய்ஸ்டர் நகரின் மெல்டோன் சாலையில் அமைந்திருக்கும் மத வழிபாட்டு தலம் அருகே ஏற்ப்பட்டு இருந்த கொடியை ஒருவர் கீழே இறக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பார்த்த போலீசார் இது தொடர்பாக கூறுகையில், ''இந்த வீடியோ இணையத்தில் பரவி வருவதை நாங்கள் கவனித்தோம். வன்முறையில் பல இடங்களில் சேதம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. விசாரணை நடத்தி வருகிறோம்" என்றனர்.

2 பேர் கைது

2 பேர் கைது

தொடர்ந்து அவர்கள் கூறுகையில், ''இரு சமூகத்தில் உள்ள முக்கிய நபர்களை அழைத்து அமைதிகாக்க வலியுறுத்துமாறு பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். பதற்றத்தை தணிக்க போலீஸ் அதிக அளவில் இந்த பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். வன்முறையில் ஈடுபட்ட நபர் ஒருவர் மற்றும் ஆயுதம் வைத்திருந்த நபர் ஒருவர் என 2 பேரை இதுவரை கைது செய்துள்ளோம். இந்த விவகாரத்தில் மக்கள் அமைதி காக்க வேண்டும்'' என்றும் கூறப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+