மீட்டிங்கில் "அந்த" இடத்தில் கை வைத்து அத்துமீறிய மேனேஜர்.. கோர்ட்டுக்கு போன பெண்.. இப்படி ஆகிடுச்சே
லண்டன்: வேலை நேரத்தில் தொடக்கூடாத இடத்தில் பெண் ஊழியரை மேனேஜர் தொட்ட சம்பவம் பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. இந்த விவகாரத்தில் அந்தப் பெண் நேரடியாக நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வேலை செய்யும் இடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள் நடப்பதாக ஆங்காங்கே புகார்கள் வந்து கொண்டு தான் இருக்கிறது. இதில் இருந்த பெண்களைப் பாதுகாக்க பல்வேறு அமைப்புகள் உள்ளன.
இருந்த போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால் பெண்கள் துணிச்சலுடன் புகார் அளிக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

கீழ்த்தரமான செயல்
அப்படியொரு சம்பவம் தான் வடக்கு அயர்லாந்தில் நடந்துள்ளது. அங்குள்ள ஒரு அலுவலகத்தில் ஊழியர்கள் கூட்டம் நடந்துள்ளது. அப்போது பெண் ஊழியர் ஒருவரை ஆண் மேனேஜர் எழுந்து நிற்கச் சொல்லியுள்ளார். அவர் எழுந்து நின்றதும் பின்னால் திரும்பச் சொல்லியுள்ளார் அந்த மேனேஜர். அந்த பெண்ணும் திரும்பியுள்ளார். அப்போது யாருமே எதிர்பார்க்காத வகையில் அந்த மேனேஜர் கீழ்த்தரமாக நடந்துள்ளார். அதாவது ரூலர் ஒன்றை வைத்து பெண் ஊழியரின் பின்பக்கத்தில் அடித்துள்ளார்.

பெண் ஊழியரிடம் அத்துமீறல்
ஊழியர்களின் மீட்டிங்கில் அனைவருக்கும் முன்னிலையில் இப்படி கீழ்த்தரமாக அந்த மேனேஜர் நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்தப் பெண் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டார். அந்த மேனேஜர் கூலாக, "சாரி, இதை நான் செய்தாக வேண்டிய சூழல்" என்று சொல்லியுள்ளார். அந்தப் பெண் மற்றொரு ஆண் மேனேஜரை பார்த்து, "இதுபோன்ற செயல்களில் ஈடுபடலாமா... அலுவலக கூட்டங்களில் இப்படிச் செய்வது சரியா" என்று கேட்டுள்ளார். இருப்பினும், அதை அந்த மேனேஜர் கண்டுகொள்ளவில்லை.

ஜோக்
இதை ஒரு ஜோக்காகவே இரு மேனேஜர்களும் பார்த்து, அந்த பெண்ணை நக்கல் அடித்துள்ளனர். அது மட்டுமின்றி கூட்டத்திற்கு வந்த அனைவரிடமும் இந்த சம்பவத்தைச் சொல்லிச் சிரித்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பெண்ணுக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. அவமானம் காரணமாக முதலில் இந்தச் சம்பவத்தை அந்தப் பெண் காதலன் மற்றும் தாய் என யாரிடமும் சொல்லவில்லை.. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தைத் தாயிடமும் காதலனிடமும் கூறியுள்ளார். இருவரும் இது தொடர்பாக ஹெஆர் துறையிடம் புகார் அளிக்கச் சொல்லியுள்ளனர்.

புகார்
அதன்படி அந்தப் பெண்ணும் புகார் அளித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தீர்வு எட்டப்படும் வரை வேலைக்குத் திரும்பப் போவதில்லை என்றும் அவர் தனது அலுவலகத்தில் தெரிவித்துள்ளார். அலுவலகத்தில் இருந்து சிலர் பெண் ஊழியரைத் தொடர்பு கொண்டு சமாதானப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், அவர் கேட்பதாக இல்லை. இப்போது தான் நிலைமையைக் கையை மீறிச் செல்வதை அந்த மேனேஜர் உணர்ந்துள்ளார். இதையடுத்து விஷயத்தைக் காபி ஷாப்பில் பேசி தீர்த்துக் கொள்ளலாம் என அந்த மேனேஜர் பெண் ஊழியரை அழைத்துள்ளார்.

மேல்முறையீடு
இருப்பினும், இது "முற்றிலும் பொருத்தமற்றது" என்று கூறி, அந்தப் பெண் அங்குச் செல்லவில்லை. அதையடுத்து அலுவலகத்தில் இருந்து அழுத்தம் அதிகரிக்கவே பெண் ஊழியரை அடித்த அந்த ஆண் மேனேஜர் ராஜினாமா செய்துவிட்டார். இருப்பினும், தனது புகாரை விசாரிக்க நிறுவனம் தாமதித்தாக கூறி அந்தப் பெண் வழக்கு தொடர்ந்தார். இதுபோன்ற புகார்களில் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விதி இருக்கும் நிலையில், முதல் 10 நாட்கள் நிறுவனம் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அந்தப் பெண் குற்றஞ்சாட்டினார்.

90 லட்சம் நஷ்டஈடு
இந்தச் சம்பவம் குறித்து அந்த நிறுவனம் விசாரித்து நடவடிக்கை எடுக்க 5 வாரங்கள் ஆகியுள்ளது. விசாரணைக் குழு தன்னைப் பற்றி பொய்யான மற்றும் இழிவான கருத்துக்களைக் கூறியதாகச் சொல்லி அந்தப் பெண் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அதன் பிறகே மேல்முறையீடு செய்து வழக்கு தொடர்ந்தார். அந்தப் பெண் கவர்ச்சியான உடை அணிந்திருந்தார் என்று அந்த நிறுவனம் சார்பில் கூறப்பட்டது. இருப்பினும் இதை நிராகரித்த நீதிமன்றம், அந்த பெண் சங்கடத்தையும் அவமானத்தையும் அனுபவித்ததாகக் கூறி அவருக்கு 90 லட்ச ரூபாய் நஷ்டஈடு வழங்கி உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications