"காவி கொடியை இறக்கி.." பிரிட்டனில் இந்து கோயில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம்! பகீர் முடிவுகள்
லண்டன்: பிரிட்டனில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வன்முறை ஏற்பட்ட நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரிட்டனில் இந்துக்களும் இஸ்லாமியர்களுக்கும் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே இந்த வன்முறை எப்படி ஏற்பட்டது என்பது குறித்தும் இதற்கு யார் காரணம் என்பது குறித்தும் சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரிட்டன்
பிரிட்டனில் கடந்த ஆகஸ் மாதம் இறுதியில் முதலில் கிழக்கு லெய்செஸ்டர் பகுதியில் இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்தே இந்த மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கிருந்த இந்து கோயில் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. மேலும், கோயில் முன்பு இருந்து காவிக் கொடியும் கீழே இறக்கப்பட்டது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வன்முறை
அங்கு வன்முறை முழுமையாகக் கட்டுக்கள் வர சில நாட்கள் வரை ஆனது. இந்தச் சம்பவம் குறித்து 47 பேர் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே இந்தச் சம்பவம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பிரிட்டனுக்கு வெளியே உருவான சில போலிக் கணக்குகள் தான் இந்த வன்முறை ஏற்படவே காரணமாக இருந்துள்ளது. சுமார் 500 போலிக் கணக்குகள் வன்முறையை ஊக்குவிக்கும் வகையில் ட்வீட்களையும் போலியான வீடியோக்களையும் பதிவிட்டு உள்ளது.

காரணம்
மசூதிகள் தீ வைக்கப்பட்டது போலவும், சிலர் கடத்தப்பட்டுள்ளது போலவும் போலி தகவல்கள் பரவின. இதுவே வன்முறைக்கு வழிவகுத்தது. மேலும், இந்துக்கள் இணைந்து முஸ்லீம்களைத் தாக்கும் வீடியோக்களும் இதற்காகப் பரப்பப்பட்டு உள்ளன. இதுவே மோசமான வன்முறைக்குக் காரணமாக அமைந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்து உள்ளனர். இணையத்தில் பரவிய இதுபோன்ற தகவல்களை நம்பியதே வன்முறைக்கு வித்திட்டது.

பொய்யான தகவல்கள்
இது குறித்து ஆய்வாளர்கள் மேலும் கூறுகையில், "சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க, சில தீய சக்திகள் வெளிநாட்டினருடன் இணைந்து பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். எனவே அரசு அமைப்புகள் இதுபோன்ற வன்முறைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாட்டுச் சக்திகள் பிரிட்டனில் பரப்பிய பொய்யான தகவல்களே இந்த வன்முறைக்குக் காரணம் என்பது தெளிவாகத் தெரிந்துள்ளது.

போலி ட்வீட்கள்
ட்வீட்களில் முஸ்லீம் என்ற வார்த்தையுடன் ஒப்பிடுகையில் இந்து என்ற வார்த்தை சுமார் 40% அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் இந்துக்கள் சதிகாரர்களாகவும் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்கள் என்பது போலவும் திட்டமிட்டு சித்தரிக்கப்பட்டு உள்ளனர். சுமார் 70% ட்வீட்கள் இந்துக்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் அமைந்து உள்ளது. மேலும், முஸ்லீம்களை இந்துக்கள் தாக்குவது போன்ற போலி தகவல்களை மீம்களாகவும் அவர்கள் பரப்பி உள்ளனர்.

500 ட்வீட்கள்
போலி கணக்குகள் மூலம் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கணக்குகள் தொடர்ந்து பரப்பப்பட்டு உள்ளனர். இதற்காக உருவாக்கப்பட்ட போட் (தானியங்கி கணக்கு) ஒரு நிமிடத்திற்கு 500 ட்வீட்கள் வரை பதிவிட்டுள்ளன. முதலில் பரவிய போலி ட்வீட்களுக்கு பின், இந்தியாவில் இருந்து இந்த வன்முறைக்கு இஸ்லாமியர்கள் மட்டுமே என்ற ரீதியில் திட்டமிட்டு செய்திகள் பரப்பப்பட்டன. அதுவும் பிரிட்டனில் நிலைமையை மோசமாக்கியது.

வன்முறை
அதாவது வெளிநாடுகளில் இருக்கும் தேசியவாத குழுக்கள் பரப்பிய தகவல்களே பிரிட்டனில் இந்த மோசமாகக் காரணமாக அமைந்துவிட்டது. பிரிட்டனில் வன்முறை இருந்த வந்த பதிவிடப்பட்ட பல ட்வீட்கள் இந்தியாவில் இருந்து வந்தவை என்பதற்கான ஆதாரங்களும் எங்களிடம் உள்ளது" என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக ட்விட்டர் இதுவரை எந்தவொரு விளக்கமும் இதுவரை தரவில்லை.












Click it and Unblock the Notifications