லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியாவில் இனி தொழில் செய்வது கஷ்டம்.. வோடபோன் சிஇஒ பரபரப்பு பேட்டி

Google Oneindia Tamil News

லண்டன்: மொபைல் ஸ்பெக்ட்ரம் கட்டணங்களுக்கான நிலுவை தொகை விவகாரத்தில் மத்திய அரசு உதவாவிட்டால் வோடபோன் குரூப் இந்தியாவின் தொழில் செய்வது கடினமாகிவிடும் என்று வோடபோன் தொலைபேசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

இங்கிலாந்தைச் சேர்நத பிரபல வோடபோன் நிறுவனம் இந்தியாவில் உள்ள ஐடியா நிறுவனத்துடன் இணைந்து தொலைத்தொடர்பு சேவைகளை இந்தியாவில் அளித்து வருகிறது. இந்தியாவின் தொலைத்தொடர்பு சந்தையில் 30 சதவீத தொலைத்தொடர்பு சேவைகளை வோடபோன் ஐடியா கைவசம் வைத்துள்ளது. எனினும் ரிலையன்ஸ் ஜியோவின் குறைந்த கட்டண போட்டியை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஹெட்ச் மற்றும் ஐடியா நிறுவன இணைப்பு தொடர்பான ஸ்பெக்டரம் கட்டண நிலுவைத்தொகை 4 பில்லியன டாலரை வோடபோன் ஐடியா நிறுவனம் செலுத்த வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வோடபோன் உறுதி

வோடபோன் உறுதி

ஆனால் மற்றொரு ஸ்பெக்ட்ரம் ஏலம் நெருங்கி வரும் நிலையில் ஏற்கனவே வோடபோன் நிறுவனம் 14 பில்லியன் டாலர் கடனை கொண்டுள்ளது. இந்நிலையில் கடந்த (ஜுலை-செப்டம்பர்) மூன்று மாதத்தில் மட்டும் இந்தியாவில் 5 ஆயிரம் கோடி கடனில் சிக்கியது. இதையடுத்து இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட வோடபோன் நிறுவனம் மேலும் பணத்தை செலுத்த முடியாது என்பதில் உறுதியாக உள்ளது.

அபராதம் வட்டி தள்ளுபடி

அபராதம் வட்டி தள்ளுபடி

வோடபோன் ஐடியாவின் 45 சதவீத பங்குகளை வைத்திருக்கும் வோடபோன் நிறுவனம் ஸ்பெக்ட்ரம் உரிம கட்டணத்தை திருப்பி செலுத்த இரண்டு ஆண்டு காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்றும் குறைந்த உரிம கட்டணமே விதிக்க வேண்டும் என்றும், அதற்கு அபராதம் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது.

நிலைமை மோசம்

நிலைமை மோசம்

இந்நிலையில் வோடபோன் நிறுவன சிஇஒ நிக் ரீட் டெல்லி மற்றும் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்தியாவில் தொழில் மற்றும முதலீடு வாய்ப்புகள் மோசமாகி கொண்டே வருகிறது. எனினும் நம்பிக்கையுடன் இன்னும் அதிக அளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று உறுதியாக உள்ளோம்.

வதந்தியை நம்பாதீங்க

வதந்தியை நம்பாதீங்க

சந்தையில் கடினமான போட்டியை சமாளிக்க வேண்டியது உள்ளது. அதை சமாளிக்க நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவில் இருந்து வோடபோன் வெளியேறப்போவதாக வரும் வதந்திகளை நம்பவேண்டாம். சேவையை எங்கள் நிறுவனம் தொடர்ந்து அளிக்கும்.அதில் எந்ந சந்தேகமும் இல்லை. போட்டிகளை சமாளிக்க தகுந்த உக்திகளை நாங்கள் பரிசீலித்து வருகிறோம்.

மததிய அரசு உதவ

மததிய அரசு உதவ

இந்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தொழில் போட்டியில் சீரான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டுடியது அவசியம். ரிலையன்ஸ் ஜியோ அளித்து வரும் சலுகைகள் மற்ற நிறுவனங்களின் வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வருகிறது. மத்திய அரசு ஊக்கதிட்டங்களை அறிவிக்காவிட்டால் தொழிலை தொடர்வது கடினமாகிவிடும்" என்றார்.

English summary
Vodafone CEO Nick Read said that Vodafone Group Plc’s Indian venture may be headed for liquidation unless the government eases off on demands for mobile spectrum fees,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X