"அதை" தொடாதீங்க.. கேஷூவலா நகர்ந்த சார்லஸ்.. திடீரென நடந்த பகீர்.. இதென்ன விநோதமான தண்டனையா இருக்கே
முட்டை வீச்சில் ஈடுபட்ட நபருக்கு விநோத தண்டனை அளிக்கப்பட்டுள்ளது
லண்டன்: மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு சம்பவம் நடந்ததையடுத்து, அதுதொடர்பான இன்னொரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
4 நாட்களுக்கு முன்பு, மறைந்த இங்கிலாந்து மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் சிலையை திறக்க மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலா யார்க்ஷயர் நகரம் சென்றிருந்தார்கள்..
மன்னரது இந்த வருகைக்காக நகரின் மிக்லேகேட் பாரில் தற்காலிக வேலி ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. அந்த வேலிக்குப் பின்னால் நின்று பொதுமக்கள் மன்னர் சார்லஸ் மற்றும் அவரது மனைவி கமிலாவை ஆரவாரத்துடன் வரவேற்று கொண்டிருந்தனர்..

நொறுங்கிடுச்சே
அப்போது கூட்டத்தில் இருந்த 23 வயதான இளைஞர் ஒருவர், "இந்த நாடு அடிமைகளின் ரத்தத்தால் கட்டப்பட்டது" என்று கத்தியபடி, மன்னர் சார்லஸ் மீது 3 முட்டைகளை வீசினார்.. அதில், அதிர்ஷ்டவசமாக அவை அனைத்தும் மன்னர் சார்லஸ் மீது படாமல் கீழே விழுந்து நொறுங்கிவிட்டது.. உடனடியாக அங்கு காவலில் ஈடுபட்டிருந்த போலீசார் அந்த இளைஞரை மடக்கி பிடித்தனர்... மன்னர் சார்லஸ் இந்த சம்பவத்தை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல், பாதையில் சிதறிக்கிடந்த முட்டைகளை கண்டு ஒதுங்கி சென்று, சுற்றியிருந்தார்.

கேஷூவல்
அத்துடன், அங்கு தன்னை வரவேற்க நின்று கொண்டிருந்த மக்களுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்தார்... அவர்களோடு கேஷூவலாக பேசினார். சார்லஸ் இங்கிலாந்து அரசரானது முதல், அவர்மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அவருக்கு பெரும்பான்மையான மக்களது ஆதரவு கிடைத்துள்ளது என்றாலும்கூட, சிலர் எதிர்ப்பு குரல்களும் வெடித்து கிளம்பி உள்ளன.. இந்நிலையில்தான் இதுபோன்ற மீது முட்டைகள் வீசப்பட்ட சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது..

முட்டை வீச்சு
சார்லஸ் மீது முட்டை வீசப்பட்ட நிகழ்வு பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பந்தப்பட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.. பல்கலைக்கழக மாணவரான அந்த இளைஞர் பெயர் பாட்ரிக் தெல்வெல்.. 23 வயதாகிறது.. தற்போது அவருக்கு நூதனமான தண்டனை ஒன்று தரப்பட்டுள்ளது.. சார்லஸ் மீது முட்டைகளை வீசிய அவருக்கு, முட்டை சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முட்டை + முட்டை
இது தொடர்பாக அரச வர்ணனையாளர் ஓமிட் ஸ்கோபி சொல்லும்போது, "இந்த தண்டனை அவருக்கு தக்க பாடத்தை கற்பிக்கும் என்றார். இந்த சம்பவம் குறித்து திகைத்து போனதாக தெரிவித்துள்ள யோர்க் பல்கலைக்கழகம், தவறான நடத்தை நடைமுறைகள் தொடர்பாக மதிப்பாய்வு செய்வதாக கருத்து கூறியுள்ளது. முட்டை வீசியவருக்கு முட்டை சாப்பிட தடை என்ற நூதன தண்டனை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications