இந்து தேசியம்.. காலிஸ்தான் தீவிரவாதம் தான் பெரிய அச்சுறுத்தல்.. லீக்கான பிரிட்டன் ரகசிய ஆவணம்! பரபர
லண்டன்: பிரிட்டன் தற்போது எதிர்கொள்ளும் மேஜர் பிரச்சினைகள் குறித்து அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் முக்கிய ரிப்போர்ட் ஒன்றை சமர்ப்பித்து இருந்தது. அதில் இந்து தேசியவாதமும் காலிஸ்தானி தீவிரவாதமும் தான் பிரிட்டன் எதிர்கொள்ளும் மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக மாறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரிட்டன் தற்போது எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து ஆய்வு செய்து ரிப்போர்ட் அளிக்கக் கடந்த ஆகஸ்ட் மாதம் உள்துறைச் செயலர் யவெட் கூப்பர் குழு ஒன்றை அமைத்திருந்தார்.

இந்த குழு சமீபத்தில் தனது ரிப்போர்ட்டை தாக்கல் செய்திருந்தது. இந்த ரிப்போர்ட் இன்னும் பொதுவெளியில் வெளியிடப்படவில்லை. இருப்பினும், அங்கு வெளியாகும் தி கார்டியன் செய்தி நிறுவனம் அதில் இடம்பெற்றுள்ள விஷயங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டுள்ளது.
பிரிட்டன் உள்துறை:
உள்துறை அமைச்சகம் அளித்த ரிப்போர்ட்டில் மொத்தம் 9 அச்சுறுத்தல்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. குறிப்பாக இந்து தேசியவாதமும் காலிஸ்தான் தீவிரவாதமும் இங்கிலாந்தில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாகப் பிரிட்டன் எதிர்கொள்ளும் மிக முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக காலிஸ்தான் தீவிரவாதம் உருவெடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்து தேசியவாத தீவிரவாதம் மற்றும் இந்துத்துவாவைக் கவலைக்குரிய விஷயமாக அந்த ரிப்போர்ட் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையைப் பிரிட்டன் பயன்படுத்துவதே இதுதான் முதல்முறை என்றும் கார்டியன் தெரிவித்துள்ளது.
இந்து தேசிய தீவிரவாதம்:
கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து பிரிட்டிஷ் இந்துக்களும் பிரிட்டிஷ் முஸ்லிம்களும் இடையே மோதல் ஏற்பட்டு, அது கலவரமாக மாறியது. அதைத்தொடர்ந்தே "இந்து தேசியவாத தீவிரவாதம்" ஒரு அச்சுறுத்தலாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் கார்டியன் குறிப்பிட்டுள்ளது..
மொத்தம் 9 பிரச்சினை:
கடந்த ஆகஸ்ட் 2024ம் ஆண்டில் சமர்ப்பிக்கப்பட்ட அந்த ரிப்போர்ட்டில், இங்கிலாந்து எதிர்கொள்ளும் 9 மேஜர் பிரச்சினைகள் குறித்துப் பட்டியலிடப்பட்டுள்ளன. இஸ்லாமிய விவகாரம், தீவிர வலதுசாரி கொள்கைவாதிகள், தீவிர பெண் வெறுப்பு கொள்கை கொண்டவர்கள், காலிஸ்தான் சார்பு தீவிரவாதம், இந்து தேசியவாத தீவிரவாதம், சுற்றுச்சூழல் தீவிரவாதம், இடதுசாரிகள், அராஜகவாதிகள் மற்றும் ஒற்றை பிரச்சினை தீவிரவாதம், வன்முறை மோகம் கொண்டவர்கள் மற்றும் சதி கோட்பாடுகளைப் பரப்புவோர் ஆகியவர்கள் பிரிட்டனுக்கு மிகப் பெரிய அச்சுறுதலைத் தருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலிஸ்தான் தீவிரவாதம்:
குறிப்பாக காலிஸ்தானை ஆதரிப்பவர்கள் வன்முறையை ஊக்குவிப்பது கவலையளிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் முஸ்லீம் மக்களுக்கு எதிராகப் பொய்யான கருத்துகளைப் பரப்புவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், பிரிட்டிஷ் அரசும் இந்தியாவும் ஒன்றிணைந்து சீக்கியர்களுக்கு எதிராகச் செயல்படுவதாகவும் பொய்யான கருத்துகள் பரப்பப்படுவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
அதேபோல வெளிநாடுகளில் இந்திய அரசின் செயல்பாடுகள் இருப்பதாக வெளியாகும் தகவல்கள் குறித்தும் அந்த ரிப்போர்ட்டில் சில தகவல்கள் இடம்பெற்று இருப்பதாக கார்டியன் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை தொடர்பான தகவல்களும் இதில் உள்ளது.
ரகசிய டாக்குமெண்ட்டிற்கு பிரிட்டன் அரசு பதில்:
இந்த ரகசிய டாக்குமெண்டு வெளியாகி பிரிட்டனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அந்நாட்டின் உள்துறை அமைச்சர் டான் ஜார்விஸ் இது குறித்து விளக்கமளித்துள்ளார். இந்த அறிக்கை தற்போதைய அரசின் கொள்கை இல்லை என்றும் இது புதிய கொள்கை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications