மீண்டும் மீண்டும் உடலுறவு! இளைஞர் செயலால் பெண் திடீர் மரணம்.. ஆயுள் தண்டனை கொடுத்த கோர்ட்! என்னாச்சு
லண்டன்: பிரிட்டன் நாட்டில் மயக்கமடைந்த நிலையில் இருந்த பெண்ணை இளைஞன் ஒருவர் மோசமாகப் பலாத்காரம் செய்துள்ளான். நள்ளிரவு நேரத்தில் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்யப்பட்டதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் அந்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது சமீப காலங்களில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியா என்று இல்லை.. உலகின் அனைத்து நாடுகளிலும் இதுபோன்ற குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

பிரிட்டனில் ஷாக்: அப்படியொரு மிகவும் மோசமான சம்பவம் தான் இப்போது பிரிட்டன் நாட்டில் நடந்துள்ளது. அங்குள்ள பார்க் ஒன்றில் மயக்கமடைந்த நிலையில், பெண் ஒருவர் இருந்துள்ளார். அந்த பெண்ணை 35 வயது இளைஞர் திரும்ப திரும்ப கொடூரமாகப் பலாத்காரம் செய்ததில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இந்தச் சம்பவம் கடந்த 2021ம் ஆண்டு நடந்துள்ளது. அப்போது மேற்கு லண்டனில் உள்ள பார்க் ஒன்றில் 37 வயதான நடாலி ஷோட்டர் என்பவர் மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார். மூன்று குழந்தைகளுக்குத் தாயான அவர், அன்று தனது நண்பர்களுடன் வெளியே சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மயக்கமடைந்துள்ளார்.
பலாத்காரம்: அப்போது அந்த பார்கிற்கு சென்ற 35 வயதான மொஹமட் ஐடோவ் என்பவர் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். மயக்கமடைந்த நிலையில் இருந்த அந்த பெண்ணை சுமார் 15 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார். இதில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதாவது அந்த பெண் முதலில் தனது ஆண் நண்பர் ஒருவருடன் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது ஜடோவ் அங்கு வந்து பார்க்கில் சுற்றித் திரிந்துள்ளார். பலவீனமாக அல்லது மயக்க நிலையில் எதாவது பெண் உள்ளனரா என்பதைத் தேடியுள்ளார். பிறகு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இருப்பினும், கொஞ்ச நேரத்தில் மீண்டும் அங்கு வந்த ஜடோவ் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். இவை அனைத்தும் பார்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கிறது.
தாய் வேதனை: இந்த கொடூரம் தொடர்பாகத் தொடர்பாக நடாலியின் தாயார் கூறுகையில், "பெண்களுக்கு எதிரான இதுபோன்ற கொடூரமான வன்முறைகளை முடிவுக்குக் கொண்டு வரக் கடுமையான நடவடிக்கைகள் தேவை. இதுபோன்ற கொடூரச் செயல்களைச் செய்தாலும் தப்பித்துக் கொள்ள முடியும் எனச் சிலர் நினைக்கிறார்கள். அவர்களுக்குப் பாடம் புகட்டும் வகையில் தண்டனை வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அந்த கொடூரன் பெண்ணை திரும்பத் திரும்ப பலாத்காரம் செய்த நிலையில், தொண்டையின் பின்பகுதியில் உள்ள நரம்புகள் அதீதமாகத் தூண்டப்பட்டு, இதனால் மாரடைப்பு ஏற்பட்டு அந்த பெண் மரணமடைந்துள்ளார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அந்த நபரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் நடந்து சுமார் 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பை வழங்கியுள்ளார்.
ஆயுள் தண்டனை: பெண் மயக்க நிலையில் இருந்ததை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு அந்த இளைஞர் பலாத்காரம் செய்துள்ளது தெளிவாகத் தெரிவித்தாக குறிப்பிட்ட நீதிபதி, அந்த கொடூரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications