அடேங்கப்பா! இது வேறு லெவலா இருக்கே! 10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னரும் வேலை செய்யும் செல்போன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்து பெண் ஒருவர் ஆற்றில் இருந்து கண்டறிந்த ஸ்மார்ட்போன் குறித்த சுவாரசிய தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இந்த ஸ்மார்ட் யுகத்தில் மொபைல் போன்கள் நமது வாழ்க்கைக்கு இன்றி அமையாத ஒன்றாகிவிட்டது. வங்கி டிரான்ஸ்பர் தொடங்கி இன்ஸ்டாகிராம் பார்ப்பது வரை ஸ்மார்ட் போன் அனைத்துக்கும் ஸ்மார்ட்போன் தேவை.

ஸ்மார்ட் போன் இல்லாத ஒரு உலகை இப்போதெல்லாம் நம்மால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. அந்தளவுக்கு ஸ்மார்ட் போன் நமது வாழ்க்கையில் கலந்துவிட்டது.

ஸ்மார்ட்போன்

ஸ்மார்ட்போன்

அப்படிப்பட்ட ஸ்மார்ட்போனை அனைவரும் பொத்தி பொத்தி பார்த்துக் கொள்வார்கள். அதிலும் ஸ்மார்ட்போன் தண்ணீரில் விழுந்தால், உரிமையாளர் இதயமே ஒரு கனம் நின்றுவிடும். ஏனென்றால், மொபைல் தண்ணீரில் விழுந்தாலே, அது சில நொடிகளாக இருந்தாலும் சரி, அதன் ஆயுள் முழுவதுமாக முடிந்துவிட்டதாகவே அர்த்தம். இங்கு பெரும்பாலான நபர்கள் தங்கள் ஸ்மார்ட்போனை குறைந்தது ஒரு முறையாவது இப்படி நீரில் போட்டுவிட்டுத் துடித்து இருப்பார்கள்.

 ஐபோன்

ஐபோன்

இதனிடையே சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் ஆற்றில் போடப்பட்ட ஸ்மார்ட்போன் கண்டறியப்பட்டால் அது எப்படி இருக்கும்! வாங்கப் பார்க்கலாம். இந்த மாத தொடக்கத்தில், இங்கிலாந்து நாட்டின் க்ளூசெஸ்டர்ஷையரைச் சேர்ந்த மிங்கி என்பவர் தனது பேஸ்புக்கில், வை (Wye) ஆற்றின் கரையில் படகு ஓட்டும் பயிற்சி மேற்கொள்ளும் போது ஐபோன் ஒன்றைக் கண்டறிந்ததாக உள்ளூர் க்ரூப் ஒன்றில் பதிவிட்டு இருந்தார்.

 வேலை செய்தது

வேலை செய்தது

அந்த மொபைல்போனை வீட்டிற்கு எடுத்துச் சென்று உலர்த்தி உள்ளார். மறுநாள் அதை சார்ஜ் போட்டுள்ளார். அது இன்னும் வேலை செய்வதைக் கண்டு அவர் ஆச்சரியமடைந்தார். அந்த மொபைல் போனில் ஒரு ஜோடியின் முகப்பு படம் இருந்தது. மேலும், தேதி ஆகஸ்ட் 13 என்று இருந்தது. இதையடுத்து மொபைல் போன் உரிமையாளரை பேஸ்புக்கில் கண்டுபிடிக்கத் தொடங்கினர்.

பேஸ்புக்

பேஸ்புக்

மொபைல் முகப்பு படத்தையும் மேலும் சில படங்களையும் அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்து உள்ளார். அதை ஆயிரக்கணக்கான உள்ளூர் வாசிகள் பகிரவே வைரலானது. அந்தச் சமயத்தில் தான் மொபைல்போனின் உரிமையாளரான ஓவைன் டேவிஸின் நண்பர் படத்தைப் பார்த்துள்ளார். உடனே அதில் இருப்பது தனது நண்பர் ஓவைன் டேவிஸ் என்பதைப் புரிந்து கொண்டு மிங்கியிடம் இது குறித்துத் தெரிவித்துள்ளார்.

 இன்ப அதிர்ச்சி

இன்ப அதிர்ச்சி


படத்தில் ஓவைன் டேவிஸ் உடன் இருப்பது அவரது வருங்கால மனைவி ஃபியோனா கார்ட்னர். இதையடுத்து அவர்களின் முகவரியைக் கண்டுபிடித்து ஸ்மார்ட்போனை அனுப்பி உள்ளார் மிங்கி. சுமார் 10 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் தொலைந்துபோன ஃபோனை பார்த்தும் டேவிஸுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. அதிலும் ஃபோன் முழுவதுமாக வேலை செய்யும் நிலையில் உள்ளதைப் பார்த்தும் இன்ப அதிர்ச்சி தான்.

என்னாச்சு

என்னாச்சு

இது குறித்து டேவிஸ் கூறுகையிஸ், "நானும் வருங்கால மனைவியும் படகில் பயணம் செய்ய போது எனது ஃபோன் ஆற்றில் விழுந்துவிட்டது. அது இருவர் மட்டும் செல்லும் படகு. எனது வருங்கால மனைவி படகில் திடீரென எழ முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாகப் படகு கவிழந்துவிட்டது. எனது ஃபோனும் போய்விட்டது. இவ்வளவு தூரம் மெனக்கெட்டு போனை எனக்கு அனுப்பிய மிங்கிக்கு நன்றி!" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+