சந்தோஷமா போறோம்.. விமான விபத்துக்கு முன்பாக பிரிட்டன் பயணிகள் பகிர்ந்த வீடியோ! நெஞ்சை உருக்கும் காட்சி
அகமதாபாத்: அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிச் சென்ற ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணம் செய்த இரண்டு பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள், விமானம் புறப்படுவதற்கு முன்பு இந்தியாவில் இருந்து விடைபெறும் வீடியோவை பதிவு செய்துள்ளனர்.
விபத்துக்கு முன்பு வீடியோ எடுத்த பிரிட்டன் பயணிகள் ஜேமி ரே மீக் மற்றும் ஃபியோங்கல் கிரீன்லா-மீக் ஆகிய இரண்டு பிரிட்டன் நாட்டினரும் ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்துள்ளனர். விமானம் புறப்படுவதற்கு சற்று முன்பு, அவர்கள் இருவரும் நகைச்சுவையாகவும், சிரித்த முகத்துடனும் வீடியோ எடுத்துள்ளனர். அதுவே அவர்களின் கடைசி வீடியோவாகவும் அமைந்தது.

கொடூரமான விபத்து
விபத்து என்பது ஒரு நொடியில் ஒருவரது வாழ்க்கையை மாற்றி விடுகிறது. அப்படித்தான் இன்று நடந்த விபத்து மிக கொடூரமானது. ஒரு மணி நேரத்திற்குள் 200க்கும் மேற்பட்டோரின் உயிரை இந்த விபத்து காவு வாங்கியுள்ளது. இந்த விபத்தானது அவர்களது உயிர்களை மட்டுமின்றி அவர்களை நம்பியுள்ள குடும்பத்தினரின் கனவுகளையும் சிதைத்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத்தில் இருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், யாரும் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கியது. ஒரே நிமிடத்தில் நிகழ்ந்து முடிந்த இந்த விபத்து பலரது வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது. நாம் இப்படி விபத்தில் சிக்கி உயிரிழப்போம் என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்கள் இந்த விமானத்தில் பயணிப்பதற்கு முன்பு.
கைக்குழந்தைகள், சிறுவர்-சிறுமிகள்
விமானத்தில் பயணித்த பலரும் பெரும் கனவுகளோடு இருந்திருப்பார்கள். ஒருவர் வேலைக்காகவும், மற்றொருவர் குடும்பத்தை சந்திக்கவும், சிகிச்சைக்காவும் என ஒவ்வொருவரும் ஒரு தேவைக்காக நம்பிக்கையோடு விமானத்தில் ஏறி அமர்ந்தனர். எப்படியும் லண்டன் போய் இறங்கிவிடுவோம் என்ற அவர்களது நம்பிக்கை தூள் தூளாகியது. 2 கைக் குழந்தைகள், 11 சிறுவர் - சிறுமிகளும் இந்த விமானத்தில் உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், லண்டனை சேர்ந்த 2 பயணிகள், விமான பயணத்திற்கு முன்பு செல்போனில் பதிவு செய்த வீடியோ ஒன்று இணையத்தில் பரவி பலரையும் கண் கலங்க செய்ய வைக்கின்றது. விமானம் புறப்படுவதற்கு முன்பு சந்தோஷமாக பாய் இந்தியா.. ஹேப்பி.. என்று மகிழ்ச்சியுடன் இருவரும் கூறியிருக்கிறார்கள். இந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிகம் பரவி வருகிறது.
பிரிட்டன் பயணிகள் வீடியோ
ஜேமி ரே மீக் மற்றும் ஃபியோங்கல் கிரீன்லா-மீக் ஆகிய இருவரும் பதிவு செய்த வீடியோவில், "குட் பாய் இந்தியா... தேங்க்யூ.. சந்தோஷமாக போறோம்.. இன்னும் 10 மணி நேரத்தில் இங்கிலாந்தில் நிற்போம்" என்று மகிழ்ச்சியுடன் பிளெயின் கிஷ் கொடுத்தவாறு அந்த வீடியோவானது உள்ளது. விமானம் விபத்துக்குள்ளாகும் இரண்டு மணி நேரத்துக்கு முன்பு தான் இவர்கள் இருவரும் இந்த வீடியோவினை எடுத்துள்ளனர் .
மேலும், ஜேமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அகமதாபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தேவ்தாஸ் பாடல் பின்னணியில் ஒலிக்க, வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அந்த வீடியோவில் "தி ஹவுஸ் ஆஃப் எம்.ஜி" என்ற இடத்தின் விவரம் குறிப்பிடப்பட்டிருந்தது. இன்று மதியம் 1 மணியளவில் அந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது. சில மணி நேரங்களில் அவர்கள் பயணம் செய்த விமானம் விபத்துக்குள்ளானது.
242 பேர் பயணம் செய்தனர்
ஏர் இந்தியா AI171 போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் அகமதாபாத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 204 பேர் உயிரிழந்தனர் மற்றும் 41 பேர் காயமடைந்தனர். விமானத்தில் 230 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 242 பேர் இருந்தனர். அவர்களில் 169 இந்தியர்கள், 53 பிரிட்டன் நாட்டினர், ஒரு கனடா நாட்டவர் மற்றும் ஏழு போர்ச்சுகல் நாட்டினர் இருந்தனர்.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்த விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு அரசு மருத்துவமனை விடுதி வளாகத்தில் விழுந்தது. டேக் ஆஃப் செய்த உடனேயே விமானம் வானில் பறக்க முடியாமல் தள்ளாடியது. பின்னர் கீழே விழுந்து தீப்பிடித்து வெடித்தது.
3 மருத்துவ மாணவர்கள் பலி
அகமதாபாத் போலீஸ் கமிஷனர் ஜி.எஸ். மாலிக், விபத்தில் 204 பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார். மேலும் காயமடைந்தவர்களின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவித்தார். இந்திய மருத்துவ சங்கத்தின் டாக்டர் மெஹுல் ஷாவின் கூற்றுப்படி, இறந்தவர்களில் 3 மருத்துவ மாணவர்களும் அடங்குவர். மேலும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது இரங்கலைத் தெரிவித்தார். மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை அவர் கேட்டுக் கொண்டார். டிஜிசிஏ மற்றும் விமான விபத்து புலனாய்வுப் பணியகம் விபத்துக்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறார்கள். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications