இங்கிலாந்தில் விபத்தை கட்டுப்படுத்த விரைவில் புதிய திட்டம்.. ஷாக் ஆகும் இளம் வயதினர்.. என்னாச்சு?
லண்டன்: இங்கிலாந்தில் 25-வயதுக்கு கீழ் உள்ள இளம் ஓட்டுநர்கள் ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு தங்கள் காரில் நண்பர்களுக்கு முதல் ஒரு வருடம் வரை லிப்ட் கொடுக்கக் கூடாது என்ற புதிய கட்டுப்பாட்டை அந்த அரசு அமல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
உலகம் முழுவதும் விபத்துக்களில் உயிர்கள் பறிபோவது பெரும் கவலைக்குரிய விஷயமாகவே உள்ளது. சிறந்த சாலை கட்டமைப்புகள் கொண்ட நாடுகளில் கூட விபத்துக்கள் அடிக்கடி நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால், சாலை விபத்துக்களை கட்டுப்படுத்த பல கட்டுப்பாடுகளும் விதிகளும் அவ்வப்போது அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், இங்கிலாந்தில் விரைவில் இளம் ஓட்டுநர்களுக்கு புதுவிதமான கட்டுப்பாடு ஒன்றை கொண்டு வர சில பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாம். அதாவது, 25-வயதுக்கு கீழ் உள்ள இளம் ஓட்டுநர்கள் தங்கள் காரில் நண்பர்களுக்கு லிப்ட் கொடுக்கக் கூடாதாம். அதாவது, ஓட்டுனர் உரிமம் பெற்ற பிறகு முதல் ஒருவருடம் வரை நண்பர்கள் யாருக்கும் லிப்ட் கொடுக்கக் கூடாது என்பதே அந்த கட்டுப்பாடு.
தற்போது முன்வைக்கபட்டுள்ள இந்த பரிந்துரையை இங்கிலாந்து சாலை அமைச்சர் ரிச்சர்டு ஹோல்டன் பரிசீலனை செய்ய இருக்கிறார். வரும் மே 16 ஆம் தேதி இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. graduated driving licence- என்ற திட்டத்தில் ஒரு அம்சமாக இதுவும் சேர்க்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டத்தின் படி, புதிதாக ஓட்டுநர் உரிமம் பெறுபவர்களுக்கு குறிப்பிட்ட காலம் கண்காணிப்பு காலமாக இருக்கும். ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான தேர்ச்சி பெற்ற காலத்தில் இருந்து இரண்டு ஆண்டுகளுக்குள் 6 அபராத புள்ளிகளை வாங்கினால் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்படும். இங்கிலாந்தில் அண்மையில் 18 வயது இளம் பெண் ஒருவர் தனது தோழியின் காரில் லிப்ட் கேட்டு ஏறி சென்ற போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

உயிரிழந்த பெண்ணின் தாயார், சாலை விபத்துக்கள் தொடர்பான ஒரு பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறார். இந்த நிலையில் தான் சாலை விபத்துக்களை குறைக்கும் விதமாக சில கெடுபிடிகளை அமல்படுத்த இங்கிலாந்து ஆலோசித்து வருகிறது. இங்கிலாந்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான தொண்டு நிறுவனமான பிரெக் வெளியிட்ட தகவலின்படி, இங்கிலாந்தில் நடைபெறும் விபத்துக்களில் 5 ல் ஒன்று புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்களால்தான் ஏற்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதிதாக ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் தங்கள் வயதிற்கு நிகரானவர்களை உடன் ஏற்றிக்கொண்டு செல்லும்போதுதான் அதிகமாக விபத்தில் சிக்குவதாகவும் தனியாக செல்லும்போதை விட இளம் வயதினர் தங்கள் நண்பர்களை ஏற்றி செல்லும்போது விபத்துக்களில் சிக்கி உயிரிழப்பது நான்கு மடங்கு அதிகமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தகைய கட்டுப்பாடுகளை கொண்டு வர இங்கிலாந்து ஆலோசித்து வருவதாக தெரிகிறது.
இங்கிலாந்தில் ஒட்டுமொத்தமாக ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களில் இளம் வயதினர் வெறும் 6 சதவீதம் மட்டுமே இருந்தாலும் மோசமான விபத்துக்களில் 5ல் ஒன்று இளம் வயது ஓட்டுநர்கள்தான் சிக்குகின்றனர். ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, அயர்லாந்து ஸ்வீடன், மற்றும் அமெரிக்காவின் சில மாகாணங்களிலும் புதிதாக ஒட்டுநர் உரிமம் பெற்றவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளன.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications