பதவிக்கு வந்த முதல் நாளே ரிஷி சுனக் திட்டத்தை குப்பையில் போட்ட பிரிட்டன் பிரதமர்.ஸ்டார்மர்! பரபரப்பு
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள கெய்ர் ஸ்டார்மர், பதவிக்கு வந்த முதல் நாளே ரிஷி சுனக் கொண்டு வந்த ருவாண்டா திட்டத்தை ரத்து செய்வதாக அறிவித்துள்ளார். ரிஷி சுனக் காலத்தில் கொண்டு வரப்பட்ட சர்ச்சைக்குரிய திட்டங்களில் ஒன்றான இது, மக்களை ஏமாற்றும் திட்டம் என விமர்சித்த அவர், இதை ரத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார்.
பிரிட்டன் நாட்டில் சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ரிஷி சுனக் கட்சி படுதோல்வி அடைந்தது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அங்கு வென்று ஆட்சியைப் பிடித்தது.

தொழிலாளர் கட்சியின் கெய்ர் ஸ்டார்மர் பிரிட்டன் நாட்டின் பிரதமராகப் பதவியேற்றார். இதற்கிடையே பிரதமர் பதவியேற்ற உடன் கெய்ர் ஸ்டார்மர் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கத் தொடங்கியுள்ளார்.
ருவாண்டா சட்டம்: இதற்கு முன்பு பிரதமராக இருந்த ரிஷி சுனக் தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு சட்டங்களைக் கொண்டு வந்தார். குறிப்பாகப் பொருளாதாரம் சற்று தடுமாறிய போது மக்கள் கவனத்தைத் திசை திருப்ப அவர் சட்ட விரோத குடியேற்றம் தொடர்பாகத் தொடர்ந்து பேசினார். மேலும், சிறு படகுகள் மூலம் சட்ட விரோதமாகப் பிரிட்டனுக்குள் அகதிகள் வருவதைத் தடுக்க இந்த ருவாண்டா பிளானை முன்மொழிந்தார்.
கடந்த 2022ஆம் ஆண்டில் ரிஷி சுனக் முதலில் இத்திட்டத்தை முன்மொழிந்தார். முறையான அனுமதி இல்லாமல் பிரிட்டனுக்கு வரும் மக்களைக் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ருவாண்டாவுக்கு அனுப்புவதே இத்திட்டமாகும். அந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் சிறிய படகுகளில் ஆபத்தான முறையில் பிரிட்டனுக்குப் புகலிடம் கோரி வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்காக ரிஷி சுனக் காலத்திலேயே ருவாண்டா அரசுக்குப் பிரிட்டன் பல மில்லியன் பவுண்டுகளை அளித்தது. அகதிகளைத் தங்க வைக்கத் தங்குமிடங்கள், அதிகாரிகளை நியமிக்க இந்த தொகையைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
சிக்கல்கள்: இருப்பினும், சட்டச் சிக்கல்கள் காரணமாகப் பிரிட்டன் அரசு இதுவரை ஒருவரையும் ருவாண்டாவுக்கு அனுப்பவில்லை. ஏனென்றால் கடந்த நவ. மாதம் ருவாண்டாவை பாதுகாப்பான நாடாகக் கருத முடியாது எனக் கூறி இந்த பாலிசி சட்டவிரோதமானது என்று கூறி அந்நாட்டு உச்சநீதிமன்றம் இதை ரத்து செய்தது. இருப்பினும், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் ரிஷி சுனக் அரசு புதிய சட்டத்தைக் கொண்டு வந்தது. இருப்பினும், அதற்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இப்படி இந்தத் திட்டமே குழப்பத்தில் இருக்கும் நிலையில், இதை முழுமையாக ரத்து செய்யப் போவதாகப் பிரிட்டன் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார். பிரதமராகப் பதவியேற்ற உடன் முக்கிய துறைகளுக்கு அமைச்சர்களை நியமித்தார். அதைத் தொடர்ந்து அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்ட நிலையில், அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
திட்டம் ரத்து: அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஸ்டார்மர், ருவாண்டா பாலிசி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார். இந்த பாலிசி கீழ் இதுவரை புகலிடம் கோருபவர்களில் 1 சதவீதம் பேர் மட்டுமே அகற்றப்பட்டுள்ளதாகவும் இது பிரச்சினையைத் தீர்க்க தவறிவிட்டதாகவும் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், "ருவாண்டா திட்டம் தொடங்குவதற்கு முன்பே புதைக்கப்பட்டுவிட்டது. இது புகலிடம் கோர விரும்புவோரைத் தடுக்க தவறிவிட்டது. எனவே, மக்களை ஏமாற்ற நான் இந்தத் திட்டத்தை மேலும் தொடர தயாராக இல்லை" என்று அவர் அதிரடியாக அறிவித்தார்.
ஸ்டார்மர்: பிரிட்டன் பிரதமரான பிறகு ஸ்டார்மர் நடத்திய முதல் செய்தியாளர் சந்திப்பு இதுவாகும். அதில் அவர் பல்வேறு கேள்விகள் குறித்தும் விரிவாகப் பதிலளித்தார். நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தத் தேவைப்பட்டால் வரிகளை உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு அவர், "எங்கள் அரசு இப்போது சமூகத்தில் உள்ள சிக்கல்களைக் கண்டறிந்து அதைச் சரி செய்யும் முயற்சியில் இறங்கியுள்ளது.
குறிப்பாகத் தேசிய மருத்துவ திட்டத்தில் இருக்கும் காத்திருப்பு நேரத்தைக் குறைப்பது, சிறை நிர்வாகத்தை மாற்றி அமைப்பது போன்ற விஷயங்களில் கவனம் செலுத்த உள்ளோம். தேவையான முடிவுகளை விரைவில் எடுப்போம்" என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications