லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஹேக் செய்யப்பட்டதா ஃபைசர், பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசி ஆவணங்கள்? சைபர் அட்டாக் என புகார்

Google Oneindia Tamil News

லண்டன்: ஐரோப்பிய ஒன்றியத்தின் மருத்துவ கட்டுப்பாட்டாளர்கள், பச்சைக் கொடி காட்டிய 2 கொரோனா தடுப்பூசி நிறுவனங்கள், தங்கள் மீது சைபர் தாக்குதல் நடந்துள்ளதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளன.

ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் ஆகிய தடுப்பூசி நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசியை, ஐரோப்பிய ஒன்றிய மருத்துவ கட்டுப்பாட்டாளர் ஓகே செய்திருந்தது. இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் பணி துவங்கியிருந்தது.

Pfizer-BioNTech Says Vaccine Documents Hacked due to Cyberattack

இந்த நிலையில், ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள், தங்களது தடுப்பூசி தொடர்பான ஆவணங்கள் ஹேக் செய்ய முயற்சி செய்யப்பட்டதாக கூறியுள்ளன.

ஆனால் "இந்த சம்பவத்தில் எந்த ரகசியமும் பறிபோகவில்லை" என்றும் தெரிவித்துள்ளன.

"எந்தவொரு தனிப்பட்ட டேட்டாவையும் களவாடியுள்ளார்களா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது," என்று ஃபைசர் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது. அதே நேரத்தில் பயோஎன்டெக் "எந்தவொரு தடுப்பூசி ஆய்வு பங்கேற்பாளர்களின் தரவையாவது களவாடிவிட்டார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை" என்று கூறியுள்ளது.

ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது... 70% ஆற்றல் மிக்கது... ஆய்வு முடிவில் அபாரம்..!ஆக்ஸ்போர்டு பல்கலை. கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது... 70% ஆற்றல் மிக்கது... ஆய்வு முடிவில் அபாரம்..!

Pfizer-BioNTech Says Vaccine Documents Hacked due to Cyberattack

இதற்கிடையில், பிரிட்டனின் சைபர் கண்காணிப்புக் குழு "ஐரோப்பிய ஒன்றியத்தின் மருந்து கட்டுப்பாட்டாளரைப் பாதிக்கும் இந்த சம்பவத்தின் தாக்கத்தைப் புரிந்துகொள்ள சர்வதேச பார்ட்னர்களுடன் இணைந்து செயல்பட உள்ளோம்" என்று தெரிவித்துள்ளது.

English summary
Two pharmaceutical companies in line for first conditional approval for their Covid-19 vaccine by the EU's medicine regulator said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X