"இப்போது பதற்றமடைவார்".. பாகிஸ்தான் பத்திரிகையாளர் கேட்ட அந்த கேள்வி.. ஓடவிட்டு அடித்த ஜெய்சங்கர்!
லண்டன்: ‛‛நான் இப்போது ஜெய்சங்கரை பதற்றமடைய வைக்கப்போகிறேன்'' என்று காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி கேட்டு மடக்க நினைத்த பாகிஸ்தான் பத்திரிகையாளருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்து ஓடவிட்ட சம்பவம்
கவனம் பெற்றுள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கடந்த 4ம் தேதி பிரிட்டன் புறப்பட்டு சென்றார். இங்கு 9 ம் தேதி வரை அவர் இருப்பார். இந்த பயணத்தின்போது
அயர்லாந்துக்கும் 2 நாள் சுற்றுப்பயணமாக ஜெய்சங்கர் செல்ல உள்ளார்.

முதற்கட்டமாக ஜெய்சங்கர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். நம் நாட்டுக்கும் பிரிட்டனுக்கும்
இடையேயான உறவு பற்றி விவாதித்தார். அதன்பிறகு லண்டன் சாத்தம் ஹவுஸில் ஜெய்சங்கர், லண்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் லாமியை சந்தித்தார். இருநாடுகள் இடையேயோன அரசியல், வர்த்தகம், கல்வி, டெக்னாலஜி உள்பட பல்வேறு விவகாரங்கள் பற்றி இருவரும்
விவாதித்தனர்.
அதன்பிறகு லண்டனில் நேற்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஒருவர், ‛‛நான் இப்போது ஜெய்சங்கரை கொஞ்சம் பதட்டப்பட வைக்கப்போகிறேன்'' என்று கேள்வியை ஆரம்பித்தார்.
இதுதொடர்பாக பாகிஸ்தான் பத்திரிகையாளர், ‛ ‛காஷ்மீரை இந்தியா சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. காஷ்மீர் மக்கள் ஆயுதம் ஏந்தி எதிர்த்து நிற்கின்றனர். காஷ்மீரில் 70 லட்சம் மக்கள் உள்ளனர். இவர்களை கட்டுப்படுத்த 10 லட்சம் ராணுவ வீரர்களை குவித்து இருக்கிறீர்கள். பிரதமர் மோடி தனது நண்பரான அமெரிக்க அதிபர் டிரம்புடன் பேசி காஷ்மீர் பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வருவாரா?'' என்று கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்வியால் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பதற்றமடைவார் என்று பாகிஸ்தான் பத்திரிகையாளர் நினைத்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜெய்சங்கர் பதற்றமடையவில்லை. மாறாக பாகிஸ்தான் பத்திரிகையாளர் மீது அவர் கோபப்படாமல் வழக்கம்போல் கூலாக நெத்தியடி பதிலை கொடுத்தார்.
இதுதொடர்பாக ஜெய்சங்கர், ‛‛காஷ்மீர் பிரச்னைகளை தீர்ப்பதில் இந்தியா சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
அதன்படி சட்டப்பிரிவு 370-ஐ நீக்கியது சிறந்த நடவடிக்கையின் முதல் படியாகும். காஷ்மீரின் வளர்ச்சி, பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சமூக நீதியை மீட்டெடுத்தது. இது 2வது படியாகும். காஷ்மீர் தேர்தலில் மிகவும் அதிகபடியான வாக்குப்பதிவு பதிவாகி உள்ளது. காஷ்மீர் தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம். இது 3வது படியாகும். இன்னும் ஒரே ஒரு விவகாரம் மட்டும் தான் தீர்க்கப்படாமல் உள்ளது. அந்த பிரச்னை இப்போது இந்தியாவுக்கு வெளியே உள்ளது.
அதுதான் மொத்த இந்தியாவும் காத்திருக்கும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்னும் திருடப்பட்ட காஷ்மீர்.
அதை மட்டும் மீட்டு கொண்டு வந்துவிட்டால் மொத்த காஷ்மீர் பிரச்சனையும் தீர்க்கப்பட்டு விடும் என உங்களிடம் உறுதி அளிக்கிறேன்'' என்று ஜெய்சங்கர் அதிரடி காட்டினார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து கேள்வி கேட்டு பதற்றமடைய வைக்கலாம் என்று நினைத்த பாகிஸ்தான் பத்திரிகையாளர் ஜெய்சங்கர் கொடுத்த இந்த பதிலால் அதிர்ந்து போனார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.












Click it and Unblock the Notifications