டிவி நடிகை பண்ண வேலையை பாருங்க.. கர்ப்பமாக இருக்கும்போதே தீவில்.. வெளியான "பேபி பம்ப்" போட்டோ

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை கருவுற்று இருக்கும் நிலையில், அவர் தனது நிர்வாண ஃபோட்டோக்களை பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த பிரபல நடிகை சார்லோட் க்ராஸ்பி. இவர் அந்த நாட்டில் பல பிரபலமான சீரியல்களில் நடித்துள்ளார்.

குறிப்பாக அவர் நடித்துள்ள ஜியோர்டி ஷோர் என்ற சீரியஸ் மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்று இருந்தது.

 டிவி நடிகை

டிவி நடிகை

32 வயதான சார்லோட் க்ராஸ்பி கடந்த ஏப்ரல் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்தார். இந்த ஆண்டின் இறுதியில், அவர் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். அந்த நாட்டில் பாலினங்களை கண்டறிவது சட்டப்படி குற்றம் இல்லை என்பதால் சார்லோட் க்ராஸ்பி தனக்குப் பிறக்கப் போவது பெண் குழந்தை என்பதையும் அறிவித்துவிட்டார்.

 நிர்வாண படம்

நிர்வாண படம்

சார்லோட் க்ராஸ்பிக்கு இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 7.9 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர். கர்ப்ப காலத்தில் வயிறு எப்படி இருக்கிறது என்பதைக் காட்டும் வகையில் முற்றிலும் நிர்வாணமாக போஸ் கொடுத்து ஃபோட்டோக்களை சார்லோட் க்ராஸ்பி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அவர்களுக்கு இந்த ஆண்டு இறுதியில் குழந்தை பிறக்கும் என்றாலும், எப்போது பிறக்கும் என்ற தகவலை அந்தத் தம்பதி இன்னும் அறிவிக்கவில்லை.

 பாலினம்

பாலினம்

முன்னதாக, கடந்த வாரம் தான் சார்லோட் க்ராஸ்பி இன்ஸ்டாகிராமில் லைவ்வில் வந்து தனது குழந்தையின் பாலினத்தை அறிவித்து இருந்தார். இதனிடையே இப்போது அவர் கர்ப்ப காலத்தில் நிர்வாண படங்களைப் பதிவிட்டுள்ளார். சார்லோட் க்ராஸ்பி இப்போது 31 வயதான ஜேக் உடன் விடுமுறைக்குச் சென்று ஓய்வு எடுத்து வருகிறார். அங்கிருந்தவாறே தான் அவர் இந்த நிர்வாணப் படங்களை வெளியிட்டுள்ளார்.

 சீரியல்

சீரியல்

சார்லோட் க்ராஸ்பி கருவுற்ற பின்னரும் ஒரு சீரியஸ் ஒன்றில் நடித்து வருகிறார். அதில் கர்ப்ப காலத்தில் அவர் என்ன செய்கிறார். அவருக்கும் அவரது பார்ட்னருக்கும் இடையே இருக்கும் உறவு, பிரசவ காலத்திற்கு அவர் எப்படி தயார் ஆகிறார் உள்ளிட்டவற்றை அவர் விளக்குகிறார். இந்த சீரியலும் அங்கு செம ஹிட் அடித்துள்ளது.

 மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இது தொடர்பாக அவர் கூறுகையில், "எனது பைத்தியக்காரத்தனமான வாழ்க்கை, எனது வணிக முயற்சிகள், நான் மிகவும் நேசிக்கும் குடும்பம், வருங்கால கணவன் மற்றும் எனது விலைமதிப்பற்ற கரு உள்ளிட்டவை குறித்து டிவியில் வருவது எனக்குப் பெரிய மகிழ்ச்சி தான்" என்றும் அவர் தெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+