ஒரே அமைதி.. உறங்கும் மகாராணி எலிசபெத்! உடல் முன் நின்ற திரௌபதி! வரலாற்றில் பதிவான “அந்த” கையெழுத்து
லண்டன்: பிரிட்டன் மகாராணி இரண்டாவது எலிசபெத் உடல் செப்டம்பர் 19 ஆம் தேதி அடக்கம் செய்யப்பட உள்ள நிலையில் பிரிட்டன் சென்ற இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி இரங்கல் குறிப்பில் புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
பிரிட்டன் ராணி 2 வது எலிசபெத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட எலிசபெத் ராணி கடந்த 8 ஆம் தேதி லண்டனில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரிட்டன் மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அது தொடர்பான செய்திகளே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தன.

ஸ்காட்லாந்தில் மறைவு
ஸ்காட்லாந்தில் உள்ள அரண்மனையில் உயிரிழந்த எலிசபெத்தின் உடல் நேற்று லண்டனுக்கு எடுத்து செல்லப்பட்டது. அடுத்த சில நாட்கள் ராணி எலிசபெத் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்படும். ராணி எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தலைவர்கள் இரங்கல்
ராணி இரண்டாம் எலிசபெத் மறைவை தொடர்ந்து இந்தியாவிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தனர். இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்ட இரங்கல் செய்தியில், "உலகம் ஒரு ஆளுமையை இழந்துவிட்டது." என்று தெரிவித்தார்.

லண்டன் சென்ற திரௌபதி முர்மு
இந்த நிலையில் செப்டம்பர் 19 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனின் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியில் நடைபெற இருக்கும் பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கில் நிகழ்வில் இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் கலந்துகொள்ள இருக்கிறார். இதற்காக அவர் நேற்று விமானத்தில் லண்டன் புறப்பட்டார்

எலிசபெத்துக்கு அஞ்சலி
லண்டன் சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து எலிசபெத் உடல் வைக்கப்பட்டு இருந்த வெஸ்ட்மினிஸ்டர் அரங்கம் சென்ற திரௌபதி முர்மு, தலைவர்களுக்கான மேடையில் ஏறி நின்று உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதனை தொடர்ந்து அவர் அஞ்சலி செலுத்த வந்த உலக தலைவர்களுக்கான இரங்கல் குறிப்பு புத்தகத்தில் கையெழுத்திட்டார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications