என்னம்மா இப்படி பண்றீங்களேமா..லண்டனில் ஊரடங்கை மீறிய பிரியங்கா சோப்ரா..சலூனுக்கு சென்றதால் சர்ச்சை!
லண்டன்: லண்டனில் உள்ள சலூன் கடைக்கு சென்று கொரோனா விதிகளை மீறியதாக நடிகை பிரியங்கா சோப்ராவை போலீசார் எச்சரித்தனர்.
லண்டனில் நடக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக பிரியங்காவின் தலைமுடியில் வண்ணம் பூசப்பட்டது. இதற்காக அந்த சலூன் தனிப்பட்ட முறையில் திறக்கப்பட்டது. இதில் எந்த விதிமீறலும் இல்லையென பிரியங்கா சோப்ரா தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில் அங்கு தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

உருமாறிய கொரோனா
இங்கிலாந்தில் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் இங்கிலாந்து உடன் பொருளாதாரம் உள்ளிட்ட பல தொடர்புகளை பல நாடுகள் துண்டித்துள்ளன. இங்கிலாந்தில் தற்போது முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அனைத்து வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.

லண்டனில் பிரியங்கா சோப்ரா
தொற்று மேலும் பரவாமல் தடுப்பதற்காக பெண்களின் முடி அழகு மையம், டாட்டூ பார்லர்கள், ஸ்பாக்கள், மசாஜ் பார்லர்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. இந்திய பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனாஸுடன் லண்டனில் வசித்து வருகிறார். ஹாலிவுட் படங்களிலும் பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார்.

சலூன் கடையில் சிக்கினார்
இந்நிலையில், அங்குள்ள சலூன் கடை ஒன்றுக்கு சிகை அலங்காரத்திற்காக பிரியங்கா சோப்ரா சென்றதாகவும், அவர் கொரோனா விதிகளை மீறியதாகவும் குற்றசாட்டு எழுந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பந்தப்பட்ட சலூனுக்கு சென்று பிரியங்கா சோப்ராவை எச்சரித்ததாகவும் தெரிகிறது.

போலீசார் எச்சரிக்கை
இதுகுறித்து போலீஸ் செய்தித் தொடர்பாளர் 'மெயில் ஆன்லைன்' என்று ஊடகத்திடம் கூறுகையில், 'பிரியங்கா சோப்ரா கொரோனா விதிகளை மீறியதாக மாலை 5.40 மணிக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட சலூனுக்கு சென்று, அதன் உரிமையாளருக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. ஊரடங்கு சட்டம் தொடர்பான அனைத்து விதிகளையும் பின்பற்றுமாறு பிரியங்கா சோப்ராவுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை என்றார்.

பிரியங்கா சோப்ரா விளக்கம்
இது தொடர்பாக பிரியங்கா சோப்ரா செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
லண்டனில் நடக்கும் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக பிரியங்காவின் தலைமுடியில் வண்ணம் பூசப்பட்டது. இதற்காக அந்த சலூன் தனிப்பட்ட முறையில் திறக்கப்பட்டது. அங்கு வந்த அனைவரும் கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடித்தனர். இங்கிலாந்தில் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பு தொடர அனுமதிக்கப்படுகிறது. எனவே நாங்கள் விதிமுறைகளை பின்பற்றி இங்கு இருந்ததை காவல்துறைக்கு விளக்கம் அளித்தோம். அதில் திருப்தி அடைந்து அவர்கள் சென்றனர் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications