லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இனிமேல் பொறுக்க முடியாது..கொந்தளித்த மக்கள்..போலீஸ் மீது தாக்குதல்..உச்சக்கட்ட பதற்றத்தில் பிரிட்டன்

Google Oneindia Tamil News

லண்டன்: கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட லாக்டவுனுக்கு எதிராக லண்டன் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி நடத்திய போராட்டத்தில் போலீசார் மீது சிலர் தாக்குல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரிட்டன் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உருமாறிய கொரோனா பரவல் உறுதி செய்யப்பட்டது. இந்த உருமாறிய கொரோனா மற்ற வகைகளை விட சுமார் 70% வரை வேகமாகப் பரவுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த உருமாறிய கொரோனா காரணமாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரிட்டன் நாட்டில் குறைந்த கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியது. முதலில் லண்டனிலும் பின்னர் இங்கிலாந்து முழுவதிலும் இந்த உருமாறிய கொரோனா பரவியது.

தளர்வுகள் இல்லா லாக்டவுன்

தளர்வுகள் இல்லா லாக்டவுன்

இதன் காரணமாக வேறுவழியின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டனில் தளர்வுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. மேலும், பொதுமக்கள் முடிந்தவரை தங்கள் வீடுகளில் இருந்த பணிபுரிய வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டது.இதன் காரணமாக வேறுவழியின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் லண்டனில் தளர்வுகள் அனைத்தும் நீக்கப்பட்டு, முழு லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய கடைகளைத் தவிர மற்ற கடைகளை மூட அரசு உத்தரவிட்டது. மேலும், பொதுமக்கள் முடிந்தவரை தங்கள் வீடுகளில் இருந்த பணிபுரிய வேண்டும் என்றும் அரசு கேட்டுக்கொண்டது.

கடும் பாதிப்பு

கடும் பாதிப்பு

இருப்பினும், லண்டன் நகரில் கடந்த ஓர் ஆண்டாக லாக்டவுன் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்தைச் சந்தித்துள்ளனர். பொருளாதார ரீதியிலும் நாடு கடுமை பாதிக்கப்பட்டுள்ளதால் பலர் வேலையிழந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்நாட்டு அரசு உதவி தொகையை வழங்குகிறது. இருப்பினும், அந்த உதவித்தொகைகள் போதுமானதாக இல்லை என்று அந்நாட்டு மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

இதனால் லண்டன் நகரில் அறிவிக்கப்பட்டுள்ள லாக்டவுனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆயிரக் கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லண்டனிலுள்ள ஹைட் பார்க் பகுதியில் ஒன்றுகூடிய ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் லாக்டவுன் உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

போலீசார் மீது தாக்குதல்

போலீசார் மீது தாக்குதல்

எவ்வித அனுமதியுமின்றி போராட்டத்தை நடத்தியதால் போலீசார், கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். அப்போது சிலர் போலீசாரை நோக்கி கண்ணாடி பாட்டில்களை வீசி தாக்கினர். இதில் போலீசார் சிலர் காயமடைந்தனர். நீண்ட இழுபறிக்குப் பிறகு போராட்டக்காரர்களை போலீசார் அங்கிருந்து கலைத்தனர். மேலும் கொரோனா விதிமுறைகளை மீறியதாக இதுவரை 36 போரட்டகாரர்களையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

ஐரோப்பாவிலேயே மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடக பிரிட்டன் உள்ளது. பிரிட்டன் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும் 5.587 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 4.29 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல பிரிட்டனில் உயிரிழப்பும் 1.26 லட்சத்தைக் கடந்துள்ளது.

English summary
36 Arrested As Thousands Protest Against year-long Lockdown In London.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X