லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

1990க்கு பின் எல்லாம் மாறிடுச்சு.. திடீரென அதிகரிக்கும் புற்றுநோய் கேஸ்கள்.. அதிர்ச்சி தரும் ஆய்வு!

Google Oneindia Tamil News

லண்டன்: உலகம் முழுவதும் கடந்த 1990களுக்கு பிறகு கேன்சர் எனப்படும் புற்றுநோய் பாதிப்பின் தாக்கம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

குறிப்பாக 50 வயதிற்கு உட்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் ஆயு்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

மது அருந்துதல், தூக்கமின்மை, புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆகியவை இந்த பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாக தெரியவந்திருக்கிறது.

நுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபாநுரையீரல் முதல் கருப்பை புற்றுநோய் வரை.. ஆரம்பத்தில் தடுப்பது எப்படி.. அறிகுறிகள் என்ன.. Dr ஒய் தீபா

புற்றுநோய்கள்

புற்றுநோய்கள்

உலகம் முழுவதும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறான நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் உயிரிழக்கும் அவலமும் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், இது குறித்து ஆய்வு ஒன்று வெளியாகியுள்ளது. இதில், 50 வயதிற்கு உட்பட்டவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படும் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உருவாகும் புற்றுநோய்களில் மார்பகம், பெருங்குடல், உணவுக்குழாய், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் கணையம் சார்ந்த புற்றுநோய்கள் அதிகம் உருவாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 குழந்தைகளும் கூட

குழந்தைகளும் கூட

இதற்கான காரணமாக மது அருந்துதல், தூக்கமின்மை, புகைபிடித்தல், உடல் பருமன் மற்றும் அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது போன்ற இருப்பதாக சொல்லப்படுகிறது. லண்டனை மையமாக கொண்ட 'நேச்சர் ரிவியூஸ் கிளினிக்கல் ஆன்காலஜி' எனும் ஆய்விதழில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதேபோல கடந்த சில ஆண்டுகளாக வயது வந்தோர்களின் உறக்க நேரத்தில் மாற்றங்கள் ஏதும் நிகழாத நிலையில், குழந்தைகளின் உறக்க நேரம் கணிசமாக குறைந்துள்ளதையும் ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

அதிர்ச்சி தகவல்கள்

அதிர்ச்சி தகவல்கள்

அதேபோல இதுபோன்ற புற்றுநோய் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட உணவு முறை உள்ளிட்டவை இருந்தாலும் இவைகள் அனைத்தும் கடந்த 1950களுக்கு பிறகு வெகுவாக அதிகரித்துள்ளன. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மது அருந்துதல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த அடுத்த தலைமுறை குழந்தைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதிர்ச்சி தகவல்கள்

அதிர்ச்சி தகவல்கள்

அதேபோல இதுபோன்ற புற்றுநோய் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக மேற்குறிப்பிடப்பட்ட உணவு முறை உள்ளிட்டவை இருந்தாலும் இவைகள் அனைத்தும் கடந்த 1950களுக்கு பிறகு வெகுவாக அதிகரித்துள்ளன. அதிக பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை பானங்கள், உடல் பருமன், வகை 2 நீரிழிவு, உட்கார்ந்த வாழ்க்கை முறை மற்றும் மது அருந்துதல் போன்ற காரணிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிறந்த அடுத்த தலைமுறை குழந்தைகளை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ததில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

50 வயதுக்கு உட்பட்டவர்கள்

50 வயதுக்கு உட்பட்டவர்கள்

அதாவது, இந்த அடுத்த தலைமுறை குழந்தைகள் 'பிறப்பு ஒருங்கிணைப்பு விளைவு' (Birth cohort effect) ஒன்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அமெரிக்காவின் பிரிகாம் மற்றும் பெண்கள் மருத்துவமனையின் பேராசிரியர் ஷுஜி ஓகினோ கூறியுள்ளார். இதன் காரணமாக புற்றுநோயால் பாதிக்கப்படும் அபாயம் இவர்களுக்கு அதிகரித்துள்ளது என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். உதாரணமாக, 1950 இல் பிறந்தவர்களை விட 1960 இல் பிறந்தவர்கள் 50 வயதை அடைவதற்கு முன்பே அதிக புற்றுநோய் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.

ஆய்வு

ஆய்வு

இந்த ஆபத்து நிலை அடுத்தடுத்த தலைமுறைகளில் அதிகரிக்கும் என்றும் ஆய்வு தெரிவித்துள்ளனர். 2000 முதல் 2012 வரை 50 வயதிற்கு உட்பட்டவர்கள் 14 வெவ்வேறு வகையான புற்றுநோய்களால் தாக்கப்படும் அபாயத்தில் இருக்கிறார்கள் என்றும் ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் இவையெல்லாமும் ஒரு அச்சம்தானே தவிர 100% இவை உறுதிப்படுத்தப்படவில்லை என்றும் ஆய்வு விளக்கியுள்ளது.

English summary
Studies have shown that the incidence of cancer has increased worldwide since the 1990s. The life expectancy results also show that the number of people suffering from cancer, especially those under the age of 50, continues to increase. Alcohol consumption, lack of sleep, smoking, obesity and consumption of highly processed foods have been found to cause these effects.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X