லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரக்கும் பிரிட்டன்.. எலிசபத் ராணி, குடும்பத்தினரை பக்கிங்காம் அரண்மனையிலிருந்து வெளியேற்ற திட்டம்

Google Oneindia Tamil News

லண்டன்: எலிசபத் ராணி மற்றும் அவரது குடும்பத்தினரை வெளியேற்ற திட்டமிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலக அந்நாட்டு நாடாளுமன்றம் முடிவு எடுத்தது. இது தொடர்பாக கடந்த 2016-ஆம் ஆண்டு பொது வாக்கெடுப்பில் இருந்து விலகும் தீர்மானத்தை அதிகம் பேர் ஆதரித்து வாக்களித்தனர்.

செயல்திட்டம்

செயல்திட்டம்

இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேற மார்ச் 29-ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைகிறது. இதனால் பிரிட்டன் பிரதமர் தெரசா மே செயல்திட்டத்தை தயாரித்துள்ளார்.

எதிர்ப்பு

எதிர்ப்பு

அது தொடர்பாக அவரது கட்சி எம்பிக்கள் அதிருப்தி தெரிவித்து எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது. இந்த எதிர்ப்பு போராட்டமாக வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முடிவு

முடிவு

இது போன்று போராட்டம் வெடித்தால் எலிசபத் ராணி குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பது அரசின் கடமையாகும். இதனால் பக்கிங்காம் கால்வாயில் உள்ள ராணி எலிசபத் மற்றும் அவரது குடும்பத்தினரை பாதுகாப்பான இடத்துக்கு அழைத்து செல்ல முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

செய்திகள்

செய்திகள்

ஏற்கெனவே நடந்த பனிப்போர் காலத்திலும், பிரிட்டன் நாட்டின் மீது ரஷ்யா அணு ஆயுத தாக்குதல் நடத்த முற்பட்ட போதும் பிரிட்டன் அரச குடும்பத்தினர் அரண்மனையிலிருந்து வெளியேற்றப்பட்டு லண்டன் நகருக்கு வெளிப் பகுதியில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்தனர் என்பதையும் அந்த செய்திகள் குறிப்பிட்டுள்ளன.

English summary
British officials have revived cold war emergency plans to relocate the royal family should there be riots in London if Britain suffers a disruptive departure from the European Union.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X