பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டத்தில் பிரிட்டன் சோகம்.. விக்டோரியா சாதனையை முறியடித்த ராணி எலிசபெத்!
லண்டன்: உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த இரண்டாவது நபர் என்ற பெருமையை எலிசபெத் பெற்றுள்ளார்.
ஸ்காட்லாந்துக்கு கோடைக்காக சென்றிருந்த இரண்டாம் எலிசபெத் ராணிக்கு திடீரென உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரை பால்மாரல் அரண்மனையில் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில் எலிசபெத்தின் உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து பக்கிங்காம் அரண்மனையின் அதிகாரிகள் பால்மாரலுக்கு விரைந்தனர். இந்த நிலையில் ராணி எலிசபெத் சிகிச்சை பலனின்றி காலமானார்.

எலிசபெத்
இரண்டாம் எலிசபெத் ஆட்சி பொறுப்பேற்று 70 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி 2022 ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூபிலியாக பக்கிங்காம் அரண்மனை கொண்டாடி வந்தது. பிரிட்டன் சாம்ராஜ்ஜியத்தை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த ஒரே மகாராணி என்ற பெருமையை எலிசபெத் பெற்றார்.

70 ஆண்டுகள்
தாய்லாந்து அரசர் பூமிபோல் அதுல்யதேஜ் 1927 ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை 70 ஆண்டுகள் 126 நாட்கள் அரசார இருந்தார். அந்த சாதனையை இரண்டாம் எலிசபெத் ராணி முறியடித்து உலகின் நீண்ட காலம் ஆட்சி செய்ய மகாராணி என்ற சாதனையை படைத்த இரண்டாவது நபர் என்ற பெருமையை பெற்றார்.

25 வயதில்
1952 ஆம் ஆண்டு இரண்டாம் எலிசபெத் பிரிட்டன் ராணியாக முடிசூட்டிக் கொண்டார். அப்போது அவருக்கு 25 வயதுதான். பிரிட்டன் வரலாற்றில் விக்டோரியா மகாராணி 63 ஆண்டுகாலம் ஆட்சிபுரிந்து நிலையில் அதை முறியடித்து 70 ஆண்டுகள் அரியணையை அலங்கரித்தார் ராணி எலிசபெத்.

15 பிரதமர்கள்
16 நாடுகளின் அரசியல் சாசன சட்டப்படி இவர் அரசியாக இருந்தார். பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்வதில் ராணி எலிசபெத்தின் பங்கு முக்கியமானது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்த வின்ஸ்டன் சர்ச்சில் முதல் லிஸ் டிரஸ் வரை 15 பிரிட்டன் பிரதமர்களை தேர்வு செய்து அவர்கள் காலத்தில் அரசியாகவும் இருந்துள்ளார். ராணி எலிசபெத் கடைசியாக பிரிட்டன் பிரதமர் லிஸ் டிரஸின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.












Click it and Unblock the Notifications