எலிசபெத் கிரீடத்தில் இந்தியாவின் கோஹினூர் வைரம்.. ராணி மரணத்தால் வைர கிரீடம் யாருக்கு?
லண்டன்: ராணி எலிசபெத் மரணமடைந்துள்ளதால் அவரிடம் இருந்த கோஹினூர் கிரீடம் தற்போது யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
உலகிலேயே அதிக மதிப்புமிக்க வைரங்களுள் ஒன்று கோஹினூர் வைரம். இது இந்தியாவிற்கு சொந்தமானது. ஆனால் இங்கு இல்லை. பிரிட்டிஷ் படையெடுப்பின் போது இந்தியாவிலிருந்து கொள்ளையடிக்கப்பட்டு எலிசபெத் ராணியின் கிரீடத்தில் இந்த வைரம் இருக்கிறது.
இந்த வைரத்தை இந்தியாவிற்கு திரும்ப கேட்டு இந்திய அரசு பல முறை முயன்றுள்ளது. ஆனாலும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது உடல்நலக் குறைவால் ராணி எலிசபெத் காலமாகிவிட்டார்.

சார்லஸ்
இதையடுத்து அடுத்த மன்னராக அவரது மகன் சார்லஸ் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைரம் பதித்த கிரீடம் அடுத்து யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2800 வைரங்களை கொண்ட இந்த கிரீடத்தில் கோஹினூர் வைரம் மகுடமாக உள்ளது.

சார்லஸ் மனைவி டயானா
ராணியின் மகன் சார்லஸின் மனைவி டயானா 1996ஆம் ஆண்டு கார் விபத்தில் பலியான நிலையில் அவர் கமீலா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது மன்னராக சார்லஸ் தேர்வு செய்யப்பட்டுவிட்டதால் ராணி எலிசபெத்தின் கோஹினூர் வைர கிரீடம் டச்சஸ் ஆப் கார்ன்வால் கமீலாவிடம் செல்லும்.

ஜார்ஜ் 6ஆவது மன்னர்
இந்த கிரீடம் 1937 ஆம் ஆண்டு ஜார்ஜ் 6-ஆவது மன்னரின் முடிசூட்டு விழாவுக்காக உருவாக்கப்பட்டது. அது போல் விக்டோரியா மகாராணிக்கு பரிசாக வழங்கப்பட்ட வைரக்கல்லும் அந்த கிரீடத்தில் உள்ளது. 105 காரட் எடை கொண்டது கோஹினூர் வைரம். கிரீடத்தின் முன்பு பிளாட்டினத்தினால் செய்யப்பட்ட சிலுவை உள்ளது. விலைமதிப்பே இல்லாத வைர கிரீடம் சார்லஸ் பதவியேற்றதும் கமீலாவின் தலையை அலங்கரிக்கும்.

14 ஆவது நூற்றாண்டு
14 ஆவது நூற்றாண்டுகளில் இந்த கோஹினூர் வைரம் இந்தியாவில் காணப்பட்டது. இது பல 100 ஆண்டுகளில் பலரது கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. 1849 ஆம் ஆண்டு ராணி விக்டோரியாவிடம் அளிக்கப்பட்டது. இந்த வைரத்திற்கு இந்தியா உள்பட 4 நாடுகள் சொந்தம் கொண்டாடி வருகின்றன. தற்போது அந்த கிரீடம் லண்டன் டவரில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications