இளமை திரும்புதே! ட்ரிம் செய்த தாடி.. கோட் ஷூட் - லண்டனில் இருந்து ராகுல் காந்தியின் ஸ்டைலான போட்டோ
ஒற்றுமை யாத்திரையில் தான் வைத்து இருந்த நீளமான தாடி மற்றும் தலைமுடியை வெட்டிய ராகுல் காந்தி, கோட் ஷூட்டுடன் ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார்
லண்டன்: உலகின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரை ஆற்றுவதற்காக பிரிட்டன் சென்று இருக்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஒற்றுமை யாத்திரையில் தான் வைத்து இருந்த நீளமான தாடி மற்றும் தலைமுடியை வெட்டி, கோட் ஷூட்டுடன் ஸ்டைலாக போட்டோவுக்கு போஸ் கொடுத்து உள்ளார்.
உலகின் புகழ்பெற்ற மற்றும் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்று பிரிட்டனில் இருக்கும் கேம்பிரிட்ஜ் பல்கலை. இந்த பல்கலைக்கழகத்தின் மேலாண்மை துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதில் "21 ஆம் நூற்றாண்டில் கேட்க கற்றுக்கொள்வது" என்ற தலைப்பில் ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது இந்தியாவில் தான் மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை, 2 விதமான கொள்கைகள் மற்றும் உலகளாவிய உரையாடலுக்கான தேவை என 3 விசயங்கள் குறித்து அவர் பேசினார்.

ஸ்டைலான ராகுல் காந்தி
இந்த நிகழ்வில் கோட் ஷூட் அணிந்து கலந்துகொண்ட ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையின்போது வளர்த்த நீளமான தாடி மற்றும் தலை முடியை வெட்டி மீண்டும் இளமையாக மாறினார். அந்த புகைப்படங்களை காங்கிரஸ் கட்சியினர் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகிறார்கள்.

புலம்பெயர் இந்தியர்களுடன் சந்திப்பு
பிரிட்டனுக்கு ஒருவார சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக நிகழ்வுக்கு பிறகு அந்நாட்டின் தலைநகர் லண்டனில் வரும் மார்ச் 5 ஆம் தேதி புலம்பெயர்ந்த இந்தியர்களை சந்தித்து பேச உள்ளார். அத்துடன் லண்டனில் இருக்கும் இந்திய அயலக காங்கிரஸ் (IOC) உறுப்பினர்களை சந்தித்து பேச உள்ளார்.

தொழிலதிபர்களை சந்திக்க வாய்ப்பு
ஐஓசி என்பது காங்கிரஸ் கட்சியின் வெளிநாட்டு பிரிவாகும். இந்த பிரிட்டன் பயணத்தில் ராகுல் காந்தி பல்வேறு தொழிலதிபர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார்.

இந்திய ஒற்றுமை யாத்திரை
அங்கிருந்து காந்தி, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, உத்தரப்பிரதேசம், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு நடந்தே யாத்திரை மேற்கொண்டார். 12 மாநிலங்களில் வழியாக 136 நாட்களில் 4,080 கிலோ மீட்டர் தூரம் பாத யாத்திரை மேற்கொண்ட ராகுல் காந்தி பல்வேறு தரப்பட்ட மக்களை சந்தித்து பேசினார்.

டிரெண்டான ராகுல் தாடி
கன்னியாகுமரியில் தன்னுடைய யாத்திரை நன்கு டிரிம் செய்த தாடியுடன் தொடங்கிய ராகுல் காந்தி கேரளாவை தாண்டி கர்நாடக எல்லைக்குள் நுழைந்தபோது அதிக தாடியுடன் காணப்பட்டார். அடுத்து மகாராஷ்டிராவை தாண்டியபோதெல்லாம் அவரது முகத்தை மறைக்கும் அளவுக்கு தாடி இருந்தது. ராகுல் காந்தியின் அந்த தாடியே கடைசியில் டிரெண்டாக மாறியது.

2 வது யாத்திரை
ஒற்றுமையை யாத்திரை முடிந்த பிறகும் அதே தாடி மற்றும் தலைமுடியுடன் இருந்த ராகுல் காந்தி, சமீபத்தில் சத்தீஸ்கரில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அருணாச்சல பிரதேசம் முதல் குஜராத்தின் போர்பந்தர் வரை 2 வது யாத்திரையை தொடங்க உள்ளதாக அறிவித்தார். இந்த நிலையில் அவர் பிரிட்டன் பயணம் மேற்கொண்டு உள்ளார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications