பிரிட்டன் துணை பிரதமர் ராஜினாமா.. ரிஷி சுனக்கிற்கு ஒரே பிரச்னை தான்! அடுத்து முறை வாய்ப்பே இல்லையாம்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் நாட்டில் பிரதமராக உள்ள ரிஷி சுனக்கிற்கு ஏற்கனவே பிரச்சினைகளை வரிசைகட்டி வரும் நிலையில், இப்போது அந்நாட்டின் துணை பிரதமரும் ராஜினாமா செய்துள்ளார்.

பிரிட்டன் நாட்டில் கடந்தாண்டு மிக மோசமான ஒரு சூழல் நிலவியது. அங்கே கொரோனாவுக்கு பின் மிக மோசமான ஒரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் தொடங்கி அனைத்து பொருட்களின் விலைவாசியும் உச்சம் தொட்டது.

Rishi Sunak is facing heat from people as his Deputy Dominic Raab Resigns

இதனால் பிரிட்டன் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொண்டனர். பிரிட்டன் ஆளும் அரசு மீது கடும் கோபம் கொண்டனர். அங்கே வெறும் சில மாத இடைவெளியில் இரண்டு பிரதமர்கள்- போரிஸ் ஜான்சன் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் பதவி விலகினர்.

பிரிட்டன்: இதனால் பிரிட்டனில் குழப்பமே நிலவியது. அந்தச் சூழலில் தான் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பிரதமர் பதவிக்கு வந்தார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் அந்நாட்டின் பிரதமர் ஆவது இதுவே முதல்முறை. மேலும், முதல் இந்து, இளம் வயது பிரதமர் என்றும் பல்வேறு சிறப்புகளையும் கொண்டிருந்தார். இக்கட்டான சூழலில் பிரதமர் பதவிக்கு வந்த அவர் பொருளாதாரத்தை மீட்கப் பல நடவடிக்கைகளை எடுத்தார்.

இருந்த போதிலும், இப்போது அங்கே இன்னும் நிலைமை முழுமையாகச் சரியாகவில்லை. இதனால் மக்கள் ரிஷி சுனக் அரசு மீது கடும் கோபத்திலேயே இருக்கின்றனர். இது ஒரு பக்கம் இருக்க ரிஷி சுனக் வரிசையாகச் சிறிதும் பெரிதுமாக பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். முதலில் தனது மனைவி அக்ஷதா மூர்த்தி வருமான வரி செலுத்தவில்லை என்ற சர்ச்சையில் சிக்கினார். அக்ஷதா மூர்த்தி இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் ஆவர்.

Rishi Sunak is facing heat from people as his Deputy Dominic Raab Resigns

வரிசையாக சர்ச்சை: இன்போசிஸ் பங்குகள் அக்ஷதா மூர்த்திக்கு இருக்கும் நிலையில், அதில் இருந்தும் ஆண்டுக்குக் கணிசமான வருவாய் வருகிறது. பிரிட்டன் சட்டப்படி வெளிநாட்டில் சம்பாதிக்கும் வருவாய்க்கு வரி செலுத்தத் தேவையில்லை. இருப்பினும், இத்தனை கோடி சம்பாதித்துவிட்டு வரி செலுத்தாமல் இருப்பது தவறு என்று பலரும் சாடினர். இதுவே பெரிய சர்ச்சையானது. இதையடுத்து சுனக் பிரதமரான பிறகு, வருமான வரியைச் செலுத்துவதாக ஒப்புக்கொண்டார்.

இது ஒரு பக்கம் என்றால்.. மறுபுறம் சீட் பெல்ட் அணியாமல் சென்று பைன் கட்டியது, தனது வளர்ப்பு நாயை விதிகளைப் பின்பற்றாமல் ரோட்டில் உலா விட்டது உள்ளிட்ட சர்ச்சைகளிலும் அவர் சிக்கினார். இது சிறிய விஷயம் தான் என்றாலும் கூட நிச்சயம் இவை நிச்சயம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். இதனிடையே இப்போது மற்றொரு தலைவலியும் சேர்ந்துள்ளது.

ராஜினாமா: பிரிட்டன் நாட்டின் துணைப் பிரதமரான டொமினிக் ராப் இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். டொமினிக் ராப் மீது ஏற்கனவே பல குற்றச்சாட்டுகள் இருந்த நிலையில், அது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அதில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமான நிலையில், டொமினிக் ராப் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் முன்பு தனது ஊழியர்களிடம் புல்லி (Bully) அதாவது மிரட்டுவது போல நடந்து கொண்டதால் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது டொமினிக் ராப்பிற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்தமாக ரிஷி சுனக் அரசுக்கே சிக்கலை ஏற்படுத்தும். மக்களுக்கு அரசு மீதான கோபம் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற சம்பவங்கள் அரசின் இமேஜ்ஜை கடுமையாகப் பாதிக்கவே செய்கிறது.

மக்கள் ஆதரவு இல்லை: கடந்த 2019இல் தேர்தல் முடிந்த பிறகு நடந்த சர்வே-இல் ஆளும் அரசுக்குத் தான் அதிக ஆதரவு இருந்தது. ஆனால், 2021இல் அது அப்படியே தலைகீழாக மாறியது. அதன் பின்னர் ஆளும் அரசாக இருந்தாலும் கூட மக்கள் ஆதரவு கன்சர்வேடிவ் கட்சிக்கு இல்லை. லேபர் கட்சிக்கே அதிகபட்ச ஆதரவு இருந்து வருகிறது.

தற்போதைய கருத்துக்கணிப்பின் படி அங்குள்ள லேபர் கட்சிக்கு 44% மக்கள் ஆதரவு இருக்கிறது. அதேபோல கன்சர்வேட்டிவ் கட்சிக்கு 30% ஆதரவே இருக்கிறது. தேர்தலுக்கு இன்னும் சில ஆண்டுகள் இருந்தாலும் கூட, இதுபோல அங்கு நடக்கும் சம்பவங்கள் ரிஷி சுனக்கிற்கு சிக்கல் மேல் சிக்கலையே தருகிறது. இதை நிலை தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் சுனக் ஆட்சியைப் பிடிப்பது ரொம்பவே கஷ்டம் தான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+