லிஸ் ட்ரஸ் ராஜினாமா.. மேஜிக் செய்வாரா ரிஷி சுனக்? இங்கிலாந்தின் புது பிரதமராக யாருக்கு வாய்ப்பு?
லண்டன்: பிரிட்டனில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்துள்ள நிலையில், கடும் போட்டிகளுக்கு மத்தியில் அந்நாட்டு பிரதமராக தேர்வான லிஸ் டிரஸ் நேற்று பதவி விலகினார்.
இந்நிலையில் தற்போது புதிய பிரதமருக்கான போட்டியில் இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர் மட்டுமல்லாது, பென்னி மோர்டான்ட், பென் வாலஸ், ஜெர்மி ஹன்ட்டின் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் புதிய பிரதமர் பதவிக்காக போட்டியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதாரம்
ஒரு நாட்டின் பாதுகாப்புக்கு ராணுவம் எந்த அளவுக்கு அவசியமோ, அதே போல அந்நாட்டின் வளர்ச்சிக்கு துடிப்பான பொருளாதாரம் மிகவும் அவசியம். ஆனால் கடந்த 2009ம் ஆண்டில் உருவான பெரும் மந்த நிலை உலக நாடுகள் மத்தியில் கடும் பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியது. உலகின் சக்தி வாய்ந்த நாடாக கருதப்பட்ட அமெரிக்கா கூட இந்த பாதிப்பிலிருந்து தப்பவில்லை. அப்போது தொடங்கிய மந்த நிலை தற்போது வரை நீண்டு வருவதாக பொருளாதார அறிஞர்கள் கூறுகின்றனர். இந்நிலையில், கொரோனா தொற்று ஏற்படுத்திய தாக்கம், பொருளாதாரத்தை மேலும் பலமாக தாக்கியது.

சுழல்
இந்த சுழலில் தற்போது ஒவ்வொரு நாடாக சிக்கி வருகிறது. இதில் சிக்கிய பிரிட்டன், மீள முடியாமல் தவித்து வருகிறது. அந்நாட்டில் எரிபொருட்களின் விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது. வாழ்வதற்காக மக்கள் செலவிடும் தொகையும் உயர்ந்திருக்கிறது. ஆனால் அதே அளவு வருமானம், ஊதியம் அதிகரிக்கவில்லை. எனவே மக்கள் வீதியில் போராட்டம் நடத்த இறங்கியுள்ளனர். இதன் காரணமாக சமீபத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பிரதமர் பதவியிலிருந்து விலகினார். பின்னர் அடுத்த பிரதமருக்கு கடுமையான போட்டி நிலவியது. இதில் லிஸ் டிரஸ் புதிய பிரதமராக தேர்வாகினார்.

பட்ஜெட்
ஆனால் அவர் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பணக்காரர்களுக்கு மேலும் பல சலுகைகள் அறிவிக்கப்பட்டன. இதனால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. மாறாக போராட்டங்கள் தீவிரமடைந்தன. இதனையடுத்து தனது நிதியமைச்சரை மாற்றினார். ஆனால் பலனில்லை. பின்னர் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டும் திரும்ப பெறப்பட்டது. கடைசியாக வேறு வழியின்றி 45 நாட்களுக்கு பிறகு நேற்று தான் ராஜினாமா செய்வதாக லிஸ் அறிவித்தார். தற்போது புதிய பிரதமர் பதவிக்காக பலர் போட்டியிட்டு வருகின்றனர். ஏற்கெனவே இதற்கான போட்டியில் பங்கேற்றிருந்த இந்திய வம்சாவளியான ரிஷி சுனக் தற்போது மீண்டும் போட்டியிட இருக்கிறார்.

கருத்து கணிப்பு
இந்த போட்டியில் ரிஷிக்கு ஆதரவு அதிகமாக இருந்தாலும் சக போட்டியாளர்களாக பென்னி மோர்டான்ட், பென் வாலஸ், ஜெர்மி ஹன்ட்டின் மற்றும் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இருப்பதால் போட்டி கடுமையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. முன்னாள் நிதியமைச்சராக இருந்த ரிஷி நாட்டு மக்களின் நம்பிக்கையை பெற்றவராக இருப்பார் என YouGov கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது. எதிர்பார்ப்பின்படி ரிஷி வெற்றி பெற்றால் இங்கிலாந்து நாட்டின் அதிபராகும் இந்திய வம்சாவளியை சேர்ந்த முதல் நபர் என்கிற பெருமையையும் பெறுவார். இவருக்கு அடுத்தபடியாக பென்னி மோர்டான்ட் இருக்கிறார்.
எப்படி இருந்தாலும், புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் நீண்ட காலமாக இருந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு உரிய தீர்வை காண்பவராக இருக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications