ரிஷி சுனக்கை விட அவரது மனைவியே பெரும் பணக்காரர்! காரணம் இந்தியா தான்.. அடேங்கப்பா எவ்வளவு முதலீடு
லண்டன்: பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்றுள்ள நிலையில், அந்நாட்டில் பிரதமராகப் பதவியேற்றவர்களில் அவரது குடும்பம் தான் மிகப் பெரிய கோடீஸ்வர குடும்பம் ஆகும்.
பிரிட்டன் பிரதமராக இருந்த லிஸ் டிரஸ் பதவி விலகிய நிலையில், அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யத் தேர்தல் நடைபெற்றது. இதில் ரிஷி சுனக் போட்டியின்றி வெற்றி பெற்றார்.
இதையடுத்து அவர் பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம் மிகக் குறைந்த வயதில் பிரதமரானவர், முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் எனப் பல சிறப்புகளை அவர் பெற்றுள்ளார்.

ரிஷி சுனக்
இது மட்டுமின்றி பிரிட்டன் பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள முதல் இந்து என்ற சிறப்பையும் அவர் பெற்றார். மேலும், இதுவரை பிரிட்டன் பிரதமர் பொறுப்பில் உள்ள குடும்பங்களின் வரிசையை எடுத்துப் பார்த்தால் ரிஷி சுனக் குடும்பம் தான் மிகவும் பணக்கார குடும்பம். அவர்களின் குடும்பத்தின் செல்வத்திற்கு ரிஷி சுனக்கின் மனைவி அக்ஷதா மூர்த்திதான் முக்கிய காரணம். அவரது பல முதலீடுகளில் இருந்தே வருமானம் கொட்டுகிறது.

அக்ஷதா மூர்த்தி
அக்ஷதா மூர்த்தி இந்தியாவில் பிறந்தவர். இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் ஆவர். அக்ஷதா மூர்த்தி பல ஆண்டுகளாகப் பிரிட்டனில் வசித்து வந்தாலும் கூட அவர் இன்னும் இந்தியக் குடிமகன் தான். தந்தையின் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் அவருக்கு இன்னும் ஒரு சதவீதத்திற்கும் குறைவான பங்குகள் உள்ளன. இதில் இருந்து மட்டும் ஆண்டுக்கு அவருக்கு சுமார் 100 கோடி ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

இந்தியா தான் காரணம்
ரிஷி சுனக்கின் சொத்து மதிப்பு என்பது பிரிட்டன் ராணி எலிசபெத்தின் சொத்து மதிப்பை விட அதிகமாக இருக்கும் என்றும் கூட மதிப்பிடப்படுகிறது. 2001ஆம் ஆண்டு முதல் அக்ஷதாவுக்கு இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் பங்கு உள்ளன. அப்போது முதல் கடந்த 20 ஆண்டுகளில் இந்த பங்கின் மதிப்பு மட்டும் 1,500 சதவிகிதத்திற்கு மேல் அதிகரித்து உள்ளது. பிரிட்டனின் புதிய பிரதமரின் குடும்பத்தின் சொத்து பல மடங்கு அதிகரிக்க இதுவே முக்கிய காரணம்.

வருமான வரி
அக்ஷதா இப்போது பிரிட்டனில் நான்-டோமிசைல் (Non-domicile) என்ற வரி நிலையில் உள்ளார். இந்த முறையில் வெளிநாட்டில் பிறந்த ஒருவர் அல்லது பெற்றோர் வேறொரு நாட்டைச் சேர்ந்தவர் என்றால், வெளிநாட்டில் ஈட்டும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை. பிரிட்டன் வருமானத்திற்கு மட்டும் வரி செலுத்தினால் போதும். இதனால் இன்ஃபோசிஸில் கிடைக்கும் 100 கோடி ரூபாய் லாபத்திற்கு அவர் வரி செலுத்தாத சூழலே இருந்தது. இது மிகப் பெரிய சர்ச்சையான பின்னரே, அவர் இந்தாண்டு முதல் வரி செலுத்துவதாக அறிவித்தார்.

முதலீடுகள்
இது தவிரவும் கூட அவர் பல்வேறு முதலீடுகளைச் செய்து உள்ளார். பிரிட்டன் நாட்டிலும் பல முக்கிய நிறுவனங்களில் அவரது முதலீடுகள் உள்ளன. அதேநேரம் அக்ஷதா மூர்த்தி குடும்பத்தின் முக்கியமான முதலீடு என்றால் இந்தியாவில் தான். பெங்களூரைச் சேர்ந்த ஒரு முதலீட்டு நிறுவனம் மூலம் அவர்கள் கேம்கள், இன்சூரன்ஸ் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் முதலீடு செய்து உள்ளனர். இதில் இருந்தும் பெரியளவில் அவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

சந்தித்தது எப்படி
2000களில் ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்கும் போது தான் ரிஷி சுனக்கும் அக்ஷதாவும் முதலில் சந்தித்து உள்ளனர். அக்ஷதா உடன் அமர வேண்டும் என்பதற்காகவே பல கிளாஸ்குக்கு சென்றுள்ளதாக ரிஷி சுனக் தெரிவித்து உள்ளார். அவர்கள் இருவரும் கடந்த 2009இல் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணம் பெங்களூரில் வெகு விமர்சையாக நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications