• search
லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கர்ப்பமான 24 மணி நேரத்தில் குழந்தை? அதிர்ச்சியின் உச்சத்திற்கு சென்ற தாய்.. அது எப்படி சாத்தியம்

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் நாட்டை சேர்ந்த பெண் ஒருவருக்குக் கர்ப்பம் எனத் தெரிந்து அடுத்த 24 மணி நேரத்தில் நடந்த சம்பவம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாகப் பெண்கள் கர்ப்பம் தரிக்கும் போது சில வாரங்களில் வந்தி, தலைச்சுற்றல் போன்றவை ஏற்படும். இந்த அறிகுறிகள் மூலம், பெண்கள் கருவுற்று இருப்பதை நாம் தெரிந்து கொள்ள முடியும்.

மேலும், கரு வளர்வதால் குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர் அவர்களின் வயிறு பெரிதாகிக் காணப்படும். இதனை பேபி பம்ப் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.

40 ஆண்டு காலம் பதவியில் இருக்கேன்.. புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கனும்.. அசோக் கெலாட் பரபர 40 ஆண்டு காலம் பதவியில் இருக்கேன்.. புதியவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கனும்.. அசோக் கெலாட் பரபர

கர்ப்பம்

கர்ப்பம்

ஆனால், பேபி பம்ப் தொடங்கி எந்தவொரு அறிகுறியும் இல்லாமல் குழந்தை பிறந்த சம்பவத்தைப் பார்த்து இருக்கிறீர்களா? அப்படியொரு நிகழ்வு தான் இங்கிலாந்து நாட்டில் அரங்கேறி உள்ளது. அந்த பெண்ணுக்குத் தான் கருவுற்று இருப்பது தெரியாது. அதுவும் ஓரிரு வாரங்கள் இல்லை. சுமார் 39 வாரங்களுக்குத் தான் கருவுற்று இருப்பதே அந்த பெண்ணுக்குத் தெரியாது. கருவுற்று இருப்பது தெரிந்ததும் அந்த பெண்ணுக்கு நடந்தது தான் இன்னும் சுவாரஸியமானது.

இங்கிலாந்து பெண்

இங்கிலாந்து பெண்

இங்கிலாந்தைச் சேர்ந்த 25 வயதான மோலி கில்பெர்ட்டிற்கு தான் கர்ப்பமாக இருப்பதே தெரியாதாம். கர்ப்பத்தினால் ஏற்படும் உடல்நிலை மாற்றங்களை உடல்நிலை பாதிப்பு காரணமாக ஏற்படுவதாகக் கருதி, அதற்காக சில மாதங்களாகவே இவர் மருத்துவமனைக்கும் சென்று வந்துள்ளார். மருத்துவரும் கர்ப்பமாக உள்ளாரா எனச் சோதனை செய்யாமல் மற்ற சிகிச்சைகளை எல்லாம் தந்து இருக்கிறார்கள்.

மருத்துவர்கள்

மருத்துவர்கள்

மோலி கில்பெர்ட் இது தொடர்பாகக் கூறுகையில், "மார்ச் மாதம் முதலே நான் சிகிச்சைக்குச் சென்று வருகிறேன். பல ஆண்டுகளாக அதிக எடை என்பதே எனது பிரச்சினையாகவே இருந்துள்ளது. கடந்த சில மாதங்களில் உடல் எடை அதிகரித்ததுடன் வேறு சில பிரச்சினைகளும் வந்தது. இதனால் நான் மருத்துவமனைக்குச் சென்றேன்.. உடலில் நீர் கோர்த்து உள்ளதாக நினைத்து அவர்கள் எனப் பல டெஸ்டிங் செய்தனர்" என்றார்.

ரத்தப் பரிசோதனை

ரத்தப் பரிசோதனை

கடந்த செப். 5ஆம் தேதி மோலிக்கு ரத்தப் பரிசோதனை எடுத்துள்ளனர். இரு நாட்களுக்குப் பிறகு வந்த டெஸ்ட் முடிவில் அவருக்கு இரும்புச் சத்து குறைவாக இருப்பதாகவும், கல்லீரலில் பிரச்சனை இருப்பதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்காகச் சிகிச்சை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதையடுத்து மோலி வீடு திரும்பிவிட்டார். இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே மருத்துவமனையில் இருந்து அவருக்கு மீண்டும் கால் வந்துள்ளது.

நிறைமாத கர்ப்பிணி

நிறைமாத கர்ப்பிணி

மோலிக்கு கால் செய்த மருத்துவர்கள், அவர் கர்ப்பமாக உள்ள விஷயத்தைத் தெரிவித்து உள்ளனர். இதைக் கேட்டதும் மோலி ஆடிப்போய்விட்டார். ஆம், ஏனென்றால் அவர் 39 வாரங்கள்.. அதாவது நிறைமாத கர்ப்பிணியாக இருந்து உள்ளார். ஆனால், அது கூட தெரியாமல் வழக்கமான பணிகளை எப்போதும் போலச் செய்து வந்துள்ளார். சில வாரங்களில் குழந்தை பிறக்க வாய்ப்பு உள்ளதால் அதற்கேற்ப ரெடியாகும்படி மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

பிரசவ வலி

பிரசவ வலி

மேலும், ஒரு வாரம் கழித்து மற்றொரு ரத்த டெஸ்ட் மற்றும் ஸ்கேன் எடுக்கச் சொல்லி உள்ளனர். ஆனால், அதுவரை உள்ளே இருந்த குழந்தை காத்திருக்கவில்லை. கர்ப்பமாக இருந்தது தெரிந்து வெறும் 24 மணி நேரத்திற்குள் அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. அருகே உள்ள மருத்துவமனைக்குத் தாயாருடன் சென்றுள்ளார். மருத்துவமனை சென்ற போது, மருத்துவர்களால் மாலி பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

அழகிய ஆண் குழந்தை

அழகிய ஆண் குழந்தை

ஏனென்றால் 9 மாதங்கள் அவர் குழந்தைக்காக வாழ்க்கை முறை எதையும் இவர் மாற்றிக் கொள்ளவில்லை. ஆப்ரேஷன் மூலம் அவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து உள்ளது. அங்கே சென்று சில மணி நேரத்தில் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்து உள்ளது. இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை இணையத்தில் பலரும் பகிர்ந்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

English summary
A woman is shocked as she went into labour just 24 hours: Pregnant woman don't know she is was pregnant for almost nine months.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X