உலகம் அழியும் ஆண்டு இதுதான்.. அடித்து சொல்லும் நியூட்டன்.! தெளிவாக விளக்கி 150 பக்கத்திற்கு லெட்டர்
லண்டன்: உலகில் வாழ்ந்த மிகச் சிறந்த இயற்பியலாளர்களில் ஒருவர் சர் ஐசக் நியூட்டன். புவியீர்ப்பு விதிகள் குறித்த இவரது கண்டுபிடிப்பு தான் உலகை மொத்தமாக மாற்றிப் போட்டது. அவர் நமது பூமி எப்போது அழியும் என்பது குறித்துக் கணித்துள்ளார். அந்த கடிதத்தில் அவர் என்ன சொல்லி இருக்கிறார்.. உலகம் அழிவது குறித்த அவரது கணிப்பு என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
சர் ஐசக் நியூட்டன்- பிரிட்டனைச் சேர்ந்த இவர், உலகில் வீழ்ந்த மிக முக்கியமான இயற்பியலாளர்களில் ஒருவர் ஆவார். லா ஆஃப் மோஷன் மற்றும் புவியீர்ப்பு விதிகள் குறித்த இவரது கண்டுபிடிப்புகள் தான் நவீனக் கால இயற்பியலின் அடிப்படை.

ஐசக் நியூட்டன்
1704ம் ஆண்டில் எழுதிய கடிதத்தில் பூமி எப்போது அழியும்.. எப்படி அழிய வாய்ப்பு இருக்கிறது என்பதை அவர் விளக்கியுள்ளார். இது தொடர்பான கடிதம் இப்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. அது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
உலகம் எப்போது அழியும்
கிறிஸ்தவ மதத்தில் நம்பிக்கை கொண்டிருந்த நியூட்டன், பைபிள் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு பூமி 20260ல் அழியலாம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது பூமி அழிவது என்பது தாமதம் ஆகக் கூட வாய்ப்பு இருக்கிறதே தவிர சீக்கிரம் அழிய வாய்ப்பில்லை என கூறியுள்ளார். மேலும், தனது கணிப்பை விளக்கும் வகையில் சில கணக்கீடுகளையும் அவர் போட்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், "உலகம் இந்த குறிப்பிட்ட காலத்தில் அழிந்துவிடும் என நான் சொல்வது யாரையும் அச்சுறுத்த இல்லை. இப்போது பலரும் உலகம் இப்போது அழியும் இப்போது அழியும் எனச் சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள். இதுபோல பொய்யான கணிப்புகளைச் செய்வதன் மூலம் அவர்கள் மற்ற தீர்க்கதரிசனங்களை இழிவுபடுத்துகிறார்கள். அதை நிறுத்தவே நான் இதைச் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது 1704ம் ஆண்டு நியூட்டன் எழுதிய கடிதத்தில் 2060க்கு முன்பு வரை உலகம் அழிய வாய்ப்பில்லை" எனக் கூறியிருக்கிறார்.
கணிப்பு எப்படி
இந்த கடிதம் சுமார் 150 பக்கங்கள் கொண்டதாக இருக்கிறது. அபோகாலிப்ஸின் சில முக்கியமான தருணங்களின் முடிவையும் தொடக்கத்தையும் வைத்து அவர் இந்த கணக்கீட்டிற்கு வந்துள்ளார். கி.பி800ஐ அடிப்படையாக வைத்துக் கணக்கிட்ட நியூட்டன், அதில் இருந்து 1260 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் மீண்டும் முதலிலிருந்து தொடங்கும் எனக் கணித்துள்ளார். அதன்படியே 2060ல் உலகம் அழியும் என்பதைக் கணித்து அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மற்ற அறிஞர்கள்
சர் நியூட்டன் மட்டுமின்றி பலரும் இதுபோல உலகம் எப்போது அழியும் என்ற கணிப்பை விட்டுச் சென்றுள்ளனர். 1500களில் வாழ்ந்த பிரெஞ்சு ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2025ஆம் ஆண்டில் ஒரு மாபெரும் சிறுகோள் பூமியுடன் மோதும் என்றும் இதனால் உலகிற்கு ஆபத்து ஏற்படும் எனக் கணித்திருந்தார். அதேபோல பாபா வாங்காவும் உலகம் அழியும் காலத்தைக் கணித்துள்ளார். வரும் காலங்களில் பூமியில் பல்வேறு மாற்றங்கள் நடக்கும் என்றும் வேற்று கிரக வாசிகளுடன் தொடர்பு, பனிக்கட்டிகள் உருகுவது என ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து, கடைசியில் 5079இல் உலகம் அழியும் என்பதை கணித்துள்ளார்.
-
தங்கம் விளையும் 3 இந்திய நதிகள்.. மணலை சலித்து தங்கத்தை அள்ளும் பொதுமக்கள்! சர்ப்ரைஸ் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications