காசுக்காக அவர் பின்னாடி போனேனா? லலித் மோடி பற்றி சுஷ்மிதா சென் பரபரப்பு பேச்சு.. என்ன ஆச்சு?
லண்டன்: லண்டனில் லலித் மோடியுடன் இருந்து வரும் சுஷ்மிதா சென் குறித்து சமூக வலைத்தளங்களில் அதிகளவில் விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன. இந்த நிலையில், விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சுஷ்மிதா சென் ஒரு 'இன்ஸ்டாவில் போஸ்ட்' போட்டுள்ளார். இதேபோல லலித் மோடியும் அஜித் ஸ்டைலில் போஸ்ட் போட்டுள்ளார்.
Recommended Video
தமிழில் நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்த பிரபல இந்தி நடிகையும், முன்னாள் பிரபஞ்ச அழகியுமான சுஷ்மிதா சென், ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில், 'ஷக்கலக்க பேபி' பாடலுக்கு நடனம் ஆடி இளைஞர்களை சொக்க வைத்தார். பாலிவுட் திரையுலகையும் கலக்கிய சுஷ்மிதா சென் 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.
சில ஆண்களால் ஏற்பட்ட ஏமாற்றங்கள் காரணமாக திருமணம் செய்து கொள்ளவில்லை என்றும் அதில் இருந்து கடவுள்தான் என்னை காப்பாற்றினார் எனக் கூறும் சுஷ்மிதா சென், இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

காதல் மலர்ந்தது
இந்த நிலையில், நிதி மோசடியில் சிக்கி தற்போது லண்டனில் வசித்து வரும் லலித் மோடிக்கும் சுஷ்மிதா சென்னுக்கும் காதல் மலர்ந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னாள் லலித் மோடி இதை பகிரங்கமாக தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார். லலித் மோடியின் முதல் மனைவி உடல்நலக்குறைவால் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ள நிலையில், 58 வயதான லலித் மோடி தனது புது காதல் குறித்த அறிவிப்பை வெளியிட்டதும் இந்த விஷயம் இணையத்தில் டிரெண்ட் ஆனது. அதுவும் சுஷ்மிதா சென் என்றதும் நெட்டிசன்கள் விவாதத்திற்கு சரியான தீனி கிடைத்தது.

கடும் விமர்சனம்
லலித்மோடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷ்மிதா சென்னுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு, ‘‘எனது துணையான சுஷ்மிதா சென்னுடன் புதிய வாழ்க்கையை தொடங்குகிறேன். சுஷ்மிதா சென்னை காதலிக்கிறேன். அதே நேரத்தில் அவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. விரைவில் திருமணம் நடைபெறும்" என்று பகிர்ந்து இருந்தார். இந்த புது காதல் ஜோடிக்கு ஒரு பக்கம் வாழ்த்துக்கள் குவிந்தாலும் மற்றொரு புறம் வசவுகளும் இல்லாமல் இல்லை. நெட்டிசன்கள் பலரும் சுஷ்மிதா சென்னை கடுமையாக டிரோல் செய்தனர். குறிப்பாக பணத்திற்காக எதையும் செய்பவர் என்றெல்லாம் விமர்சிக்கத் தொடங்கினர்.

விமர்சனங்களுக்கு பதிலடி
இந்த நிலையில் தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்து சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிரம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், ''நான் நானாகவே இருக்கிறேன். எனது மனசாட்சி நடுநிலையானது. இயற்கையானது எப்படி அனைத்து படைப்புகளையும் ஒன்றிணைக்கிறதோ? அதைப்போல நானும் அனைத்தையும் விரும்புகிறேன். இத்தகைய சமநிலையை உடைக்கும் போது நாம் எவ்வளவு பிளவுபடுகிறோம்.
நம்மைச் சுற்றியுள்ள உலகம் எவ்வளவு பரிதாபமாகவும், மகிழ்ச்சியற்றதாகவும் மாறிவருகிறது என்பதைப் பார்க்கும்போது மனவேதனையாக இருக்கிறது. அறிவுஜீவிகள் என்று அழைக்கப்படுபவர்கள் தங்கள் அறியாமையால் மலிவான மற்றும் சில சமயங்களில் வேடிக்கையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

ஆதரவு வழங்க விரும்புகிறேன்
எனக்கு இதுவரை இதுவரை இல்லாத நண்பர்கள் மற்றும் நான் சந்தித்திராத அறிமுகமானவர்கள் என பலரும் தங்கள் மகத்தான கருத்துக்களையும் எனது கேரக்டர் பற்றி ஆழமான அறிவையும் பகிர்கின்றனர். அனைத்து வழிகளிலும் பணம் சம்பாதிக்கிறேன் என அறிவுஜீவிகள் கூறுகின்றனர். நான் தங்கத்தை விட ஆழமாக தோண்டுகிறேன். நான் எப்போதும் வைரங்களை விரும்புவேன். அதை நானே வாங்கிக்கொள்கிறேன். எனது நலம் விரும்பிகளும், அன்பானவர்களும் முழு மனதுடன் தங்களது ஆதரவை தொடர்ந்து வழங்க நான் விரும்புகிறேன். தயவு செய்து தெரிந்துகொள்ளுங்கள், உங்கள் சுஷ் முற்றிலும் நலமாக இருக்கிறார். காரணம் நான் ஒருபோதும் நிச்சயம் அல்லாத இந்த புகழ்வெளிச்சத்தில் வசிப்பவள் அல்ல. நான் சூரியன்.... நான் நானாகவும் எனது மனசாட்சியை மையப்படுத்தியே இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார்.

அஜித் ஸ்டைலில் பதிலடி
தங்களுக்கு எதிரான விமர்சனங்களுக்கு அஜித் ஸ்டைலில் 'வாழு வாழ விடு' எனப்பதிவிட்டு நெட்டிசன்களுக்கு லலித் மோடியும் பதிலடி கொடுத்துள்ளார். லலித் மோடி வெளியிட்ட பதிவில், "சமூக வலைத்தளங்களில் ஏன் என்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரியவில்லை. தெரிந்தால் யாராவது விளக்குங்கள். நான் இன்ஸ்டாவில் சில படங்களை மட்டுமே பதிவிட்டேன். இதற்காக நான் ஏன் விமர்சிக்கப்படுகிறேன்? இப்போது நாங்கள் (சுஷ்மிதா சென்) இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவேளை இருவருக்குமிடையேயான புரிதல் நேர்மறையானதாக இருப்பின் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனால் அதிசயம் நிகழலாம். 'வாழுங்கள் மற்றும் மற்றவரை வாழவிடுங்கள்' இதுதான் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை" எனப்பதிவிட்டு இருந்தார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications