Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துணை ஜனாதிபதி டூ மும்பை டப்பாவாலாக்கள் வரை.. சார்லஸ் முடிசூட்டு விழா! ஜொலிக்க போகும் இந்தியர்கள்

Subscribe to Oneindia Tamil

லண்டன்: பிரிட்டன் மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடைபெறும் நிலையில், இதில் இந்தியர்கள் சிலரும் கலந்து கொள்ள உள்ளனர். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

பிரிட்டன் நாட்டில் நீண்ட காலம் முடியாட்சியில் தலைமை பொறுப்பில் இருந்தவர் ராணி எலிசபெத். சுமார் 70 ஆண்டுகள் பிரிட்டன் ராணியாக இருந்த எலிசபெத், கடந்தாண்டு வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.

 These Indians Will Attend King Charles Coronation Ceremony In London Today

அவருக்குப் பின்னர் சார்லஸ் மன்னர் பணிகளைக் கவனித்து வந்தார். இந்தச் சூழலில் தான் சார்லஸ் முடிசூட்டு விழா இன்று நடைபெறுகிறது. அங்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் இந்த முடிசூட்டு விழா மீது மிகப் பெரியளவில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அப்போது ராணி எலிசபெத்திற்கு நடந்த முடிசூட்டு விழாவுடன் ஒப்பிடும் போது, இது சற்று சிம்பிளாகவே நடைபெற உள்ளதாம். அதேநேரம் இந்த விழாவில் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

முக்கிய தலைவர்கள்: உலகெங்கும் இருந்தும் பல முக்கிய தலைவர்கள் இதில் கலந்து கொள்கிறார்கள். இந்தியாவில் இருந்தும் முக்கிய தலைவர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளனர். லண்டனில் இன்று நடக்கும் முடிசூட்டு விழாவில் இந்தியத் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், நடிகை சோனம் கபூர் கலந்து கொள்கின்றனர்.

வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் எலிசபெத் ராணியாக முடிசூட்டப்பட்ட நிகழ்விற்குப் பிறகு நடக்கும் இந்த விழாவில் பல வெளிநாட்டுப் பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இந்தியா சார்பில் அதிகாரப்பூர்வமாக இந்த நிகழ்வில் துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் தனது மனைவி சுதேஷ் தன்கருடன் லண்டன் சென்றடைந்தார்.

அதேபோல சோனம் கபூரும் முடிசூட்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் நிகழ்ச்சியில் சிறு அங்கமாக இருக்கப் போகிறார். மேலும், மும்பையில் இருந்து இரண்டு டப்பாவாலாக்களும் இந்த முடிசூட்டு விழாவில் தங்கள் சகோதரத்துவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்த இதில் கலந்து கொள்ள உள்ளனர். இதில் அவர்கள் புனேரி தலைப்பாகை மற்றும் வார்காரி சால்வையை மன்னருக்குப் பரிசளிக்க உள்ளனர்.

டப்பாவாலா: மும்பையில் இருக்கும் டப்பாவாலாக்கள் என்பது மிகப் பழமையான மதிய உணவு டெலிவரி செய்யும் அமைப்பாகும். உலகிலேயே மிகக் குறைந்த error percentage எனப்படும் மிஸ்டேக நடக்கும் ஒன்றாக டப்பாவாலாக்கள் உள்ளனர். சார்லஸ் 2003இல் இந்தியா வந்த போது டப்பாவாலாக்களை சந்திருந்தார். டப்பாவாலாக்கள் வேலை சார்லஸுக்கு பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்லஸின் தொண்டு முயற்சிகளுடன் தொடர்புடைய ஆலோசகர், செப் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சார்லஸின் அறக்கட்டளையில் பணியாற்றும் புனேவில் பிறந்த 37 வயதான கட்டிடக் கலைஞரான சௌரப் பாட்கேவும் விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஆண்டு பிரின்ஸ் டிரஸ்ட் குளோபல் விருது பெற்ற 33 வயதான குல்ஃப்ஷா என்ற சர்வதேச ஆலோசரகும் இதில் கலந்து கொள்ள உள்ளார். கனடாவைச் சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜெய் படேல் என்ற சமையல் கலை நிபுணரும் இதில் கலந்து கொள்கிறார்.

ரிஷி சுனக்: அதேபோல இந்த நிகழ்வில் பிரிட்டன் அரசு தலைமை பொறுப்பில் இருப்பவர் என்ற அடிப்படையில் ரிஷி சுனக் இதில் பைபிளை படிக்க உள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பைபிளை படிப்பது இதுவே முதல்முறையாகும். அவரும் அவரது மனைவி அக்ஷதா மூர்த்தியும் கொடியேந்தி ஊர்வலத்தை வழிநடத்துவார்கள்.

மேலும், மாற்று மத தலைவர்களும் இதில் கலந்து கொள்ள உள்ளனர். சீக்கிய மதத்தில் இருந்து லார்ட் இந்திரஜித் சிங், இஸ்லாம் மதத்தில் இருந்து சையத் கமால் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+