மண்ணோடு மண்ணாக போன.. 64,93,33,78,350 ரூபாய் மதிப்புள்ள பிட்காயின்.. லண்டன் நபருக்கு நேர்ந்த சோகம்!
லண்டன்: லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய 750 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயினை இழந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அவர் நீதிமன்றத்தை நாடிய போதிலும் அவரால் பிட்காயின்களை மீட்க முடியாமல் போய்விட்டது. அவருக்கு என்ன நடந்தது என்று பார்க்கும் முன் பிட்காயின் குறித்து சிறிய அறிமுகம் இங்கே!
உலகில் நாம் பயன்படுத்தும் பணம் போலவே இணையத்திலும் நிறைய பணம் இருக்கிறது. இந்த பணத்தை நாம் நேரடியாக பயன்படுத்தாமல் இணையத்தில் மட்டுமே பயன்படுத்துவோம். 1500க்கும் அதிகமான இதுபோன்ற பணங்கள் உலகில் பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு 'கிரிப்டோ கரன்சி' என்று பெயர். அவற்றில் ஒன்றுதான் இந்த பிட்காயின்.

இந்த பிட்காயினை நாம் பணம் கொடுத்தோ, பங்குகள் கொடுத்தோ வாங்கி கொள்ள முடியும். மேலும் தங்கத்திற்கு பதிலாகவும் இதை மாற்ற முடியும். இதற்கு வடிவம் இல்லை என்பதால் இதை வைத்து இணையத்தில் எளிதாக பொருட்கள் வாங்கலாம். மேலும் இதற்கு சரியான வரி விதிப்பு முறையோ, வங்கி கட்டுப்பாடோ இல்லை என்பதால் இதில் அதீத சுதந்திரம் இருக்கிறது.
பிளாக் செயின்: பிளாக் செயின் தொழில்நுட்பத்தில்தான் கிரிப்டோகரன்சி செயல்படுகிறது . உலகிலேயே மிகவும் பாதுகாப்பான தொழில்நுட்பம் ஆகும் இது. இணையத்தில் க்ரிப்டோகரன்சிகளுக்காக இருக்கும் லெட்ஜர் என்று இதை கூறலாம். எந்த வங்கியின் கட்டுப்பாட்டிலும் இல்லாத தனி தனி கரன்சிகள் ஆகும் இது. உலகம் முழுக்க கிரிப்டோ கரன்சி பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொலைந்த காயின்:
இப்படிப்பட்ட நிலையில்தான் லண்டனை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய 750 மில்லியன் டாலர் மதிப்புள்ள பிட்காயினை இழந்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக அவர் நீதிமன்றத்தை நாடிய போதிலும் அவரால் பிட்காயின்களை மீட்க முடியாமல் போய்விட்டது.
10 ஆண்டுகளுக்கு முன்பு 39 வயதான ஜேம்ஸ் ஹோவெல்ஸ் நியூபோர்ட் இருக்கும் போது நிலச்சரிவு ஒன்றில் சிக்கி உள்ளார். இதில் அவரின் வீடு கடும் சேதம் அடைந்துள்ளது. அதோடு அவரின் கணினி ஹார்ட் டிஸ்க் மண்ணோடு மண்ணாகி உள்ளது. தனது கிரிப்டோகரன்சியைக் கொண்ட ஹார்ட் டிரைவை மீட்க அவர் கடுமையாக போராடினார்.
10 வருடமாக இதற்காக சட்ட போராட்டமும் நடத்தினார். அதோடு இதை அரசு மீட்டு தந்தால் தான் மீட்கும் பணத்தில் 25% ஐ அப்படியே அரசின் சிட்டி கவுன்சிலுக்கு நிதி உதவியாக தருவேன் என்றும் கூறினார். இதன் இன்றைய மதிப்பு 64,93,33,78,350 அதாவது கிட்டத்தட்ட 6400 கோடி ரூபாய்.
இதற்காக அவர் தொடுத்த வழக்கில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை தோண்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதை கோர்ட் நிராகரித்துவிட்டது. இது எல்லாம் நடக்கிற காரியம் இல்லை. 10 வருட பழைய ஹார்ட் டிஸ்க் கிடைக்காது. கிடைத்தாலும் அது வேலை செய்வது கடினம். அதனால் அதை மறந்துவிடுங்கள் என்று கோர்ட் தீர்ப்பில் கூறி உள்ளதாம்.
பிட்காயின் மதிப்பு என்ன?:
பிட்காயின் மதிப்பு தற்போது 1 லட்சம் டாலரை தாண்டி உள்ளது. இதன் மதிப்பு நாளுக்கு நாள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கிறது. தற்போது 106000 டாலர் என்ற நிலையை பிட்காயின் அடைந்துள்ளது. 90 ஆயிரத்தில் கடந்த சில நாட்களாக இருந்த நிலையில் தற்போது 1 லட்சம் டாலரை தாண்டி உள்ளது.
தற்போதைய சந்தை நிலவரப்படி பிட்காயின் மதிப்பு தற்போது 1.06 லட்சம் டாலரை தொட்டுள்ளது.
இதனுடைய மதிப்பு 89,92,568ரூபாய் ஆகும். அதாவது கிட்டத்தட்ட 90 லட்சம் ரூபாய். கடந்த சில வருடம் முன் இதன் மதிப்பு வெறும் 1000 டாலர் மட்டுமே இருந்தது. ஆனால் சில வருடங்களில் வருடத்தில் விஸ்வரூப வளர்ச்சி அடைந்து இருக்கிறது. இந்த ஒரு வருடத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50,000 டாலர் வரை இது உயர்ந்தது. இடையில் சில நாள் வீழ்ச்சியும் அடைந்தது.












Click it and Unblock the Notifications