இன்ஸ்டா முதல் யூடியூப் வரை எல்லாவற்றுக்கும் தடை.. 16 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு பிரிட்டன் அதிரடி

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சிறுவர்களின் மனநலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்குப் பிரிட்டன் அரசு அதிரடியாகத் தடை விதித்துள்ளது. ஆஸ்திரேலியா, இந்தோனேசியா மற்றும் மலேசியா ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, இந்தத் தடையை அமல்படுத்தும் நான்காவது நாடாகப் பிரிட்டன் மாறியுள்ளது.

இந்த காலத்தில் சோஷியல் மீடியா தான் எல்லாமே என இருக்கிறது. காலை எழுந்தது முதல் இரவு கண்ணை மூடி படுப்பது வரை எல்லாமே சோஷியல் மீடியா என்ற நிலையே இருக்கிறது. இது குழந்தைகளின் வளர்ச்சியைக் கடுமையாகப் பாதிப்பதாகப் பலரும் குற்றஞ்சாட்டுகிறார்கள். இதைக் கருத்தில் கொண்டே உலகின் பல்வேறு நாடுகளும் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது.

UK Prime Minister Keir Starmer announcing new social media regulations

பிரிட்டன் தடை

இந்தியாவும் கூட சிறார்களின் சமூக வலைத்தள பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே பிரிட்டன் இப்போது அதிரடியாக ஒரு தடையை விதித்துள்ளது. அதாவது பிரிட்டனில் 16 வயதிற்குட்பட்ட குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையை அறிவித்த பிரிட்டன் பிரதமர் கீர் ஸ்டார்மர், குழந்தைகளின் குழந்தைப் பருவத்தை அவர்களிடமே மீண்டும் ஒப்படைப்பதே இந்த முடிவின் நோக்கம் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும், "16 வயதிற்குப்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதை நாங்கள் தடை செய்கிறோம். இன்றைய காலத்தில், தொழில்நுட்பம் குழந்தைகளின் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் ஊடுருவி இருக்கிறது. இது அவர்களின் இயல்பான வளர்ச்சியைப் பாதிக்கிறது. இதை இனிமேலும் அனுமதிக்க முடியாது" என்றார்.

என்ன நடவடிக்கை

பிரிட்டன் அரசு இந்தத் திட்டத்தை ஆஸ்திரேலியா-பிளஸ் அணுகுமுறை என்று அழைக்கிறது. ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே நடைமுறையில் உள்ள சட்டங்களை விடவும் கூடுதல் கட்டுப்பாடுகளைப் பிரிட்டன் கொண்டு வரவுள்ளது. அதன்படி பாதுகாப்பானவை என்று கருதப்படும் தளங்களில் கூட நேரலை ஒளிபரப்புகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.

ஆன்லைன் கேமிங் அறிமுகமில்லாத நபர்களுடன் குழந்தைகள் உரையாடுவது அல்லது தொடர்புகொள்வது தடுக்கப்படும். குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு குழந்தைகள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடியாத முறையைக் கொண்டு வரவும் பிரிட்டன் ஆலோசித்து வருகிறது. இது குறித்த விரிவான தகவல்கள் அடுத்த மாதம் வெளியாகும்.

எதற்கெல்லாம் தடை

ஆஸ்திரேலியாவைப் போலவே பிரிட்டனிலும் பின்வரும் 10 தளங்களுக்குத் தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.. டிக்டாக், ஸ்னாப்சாட், இன்ஸ்டாகிராம், யூடியூப், ரெடிட், ட்விட்ச், எக்ஸ் (ட்விட்டர்), த்ரெட்ஸ், பேஸ்புக், கிக் உள்ளிட்ட தளங்களுக்குத் தடை விதிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், செயற்கை நுண்ணறிவு சாட்போட்களைப் பயன்படுத்துவதற்கும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

இந்த தடையை அமல்படுத்துவதற்கு முன்னதாக, பிரிட்டன் அரசு மூன்று மாத காலம் பொதுமக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் சுமார் 1,16,000 பேர் பங்கேற்றனர். கருத்துக்கணிப்பில் பங்கேற்ற பெற்றோர்களில் 90% பேர் இந்த தடையை முழுமையாக ஆதரித்துள்ளனர். 83% பேர் சமூக வலைத்தளங்களால் குழந்தைகளுக்கு நன்மையை விடத் தீமையே அதிகம் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

முக்கியம்

குழந்தைகளின் பாதுகாப்பு என்பது தற்போதைய காலத்தின் மிக முக்கியமான விவாதம் என்று பிரதமர் ஸ்டார்மர் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். பழைய முறையைத் தொடர்வதா அல்லது குடும்பங்களுக்கு ஆதரவாக நிற்பதா என்ற கேள்வி வந்தபோது, நாங்கள் குடும்பங்களின் பக்கமே நிற்கிறோம்" என்று அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+