லண்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எந்த பெண்ணை எப்போது பலாத்காரம் செய்யலாம்.. தனி லிஸ்ட் போட்ட கடற்படை அதிகாரிகள்! விசாரணைக்கு உத்தரவு

Google Oneindia Tamil News

லண்டன்: பிரிட்டன் கடற்படையில் பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்து வெளியான தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

உலகெங்கும் உள்ள ராணுவங்களில் ஆண்களே அதிகம் உள்ளனர். இன்னும் கூட பல நாட்டு ராணுவங்களில் பெண்கள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்படுவது இல்லை.

பெண்களை அனுமதிக்கும் ராணுவங்களிலும் கூட பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கூட இதே தான் நிலைமை.

பலாத்கார குற்றவாளி.. பலியானதாக நாடகம்.. 4 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு வந்த அதிசயம்.. ட்விஸ்ட்! பலாத்கார குற்றவாளி.. பலியானதாக நாடகம்.. 4 ஆண்டுகளுக்கு பின் உயிரோடு வந்த அதிசயம்.. ட்விஸ்ட்!

பிரிட்டன்

பிரிட்டன்

இதனிடையே உலக புகழ்பெற்ற பிரிட்டன் நாட்டின் கடற்படையில் பெண் வீரர்கள் மிக மோசமான பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டு வருவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டு உள்ளது. நீர்மூழ்கிக் கப்பல்களில் பணியமர்த்தப்படும் பெண் ஊழியர்கள் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகப் பலரும் கூறினர். இதையடுத்து இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யப் பிரிட்டிஷ் ராயல் நேவி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.

 பலாத்கார பட்டியல்

பலாத்கார பட்டியல்


முன்னாள் கடற்படை பெண் லெப்டினன்ட் வீரர் சோஃபி புரூக் என்பவரது நேர்காணலும் அதில் வெளியிடப்பட்டு உள்ளது. கடற்படையில் உள்ள பெண்கள் மீது தொடர்ந்து பாலியல் அத்துமீறல் நடக்கும் என்றும் பலாத்கார பட்டியல் என்றே ஒன்றை ஆண் வீரர்கள் வைத்து இருந்ததாக அவர் கூறியுள்ளனர். அதாவது பேரழிவு எதாவது ஏற்படும்போது அங்குள்ள பெண்களை எந்த வரிசையில் பலாத்காரம் செய்ய வேண்டும் என்று பட்டியல் போட்டுள்ளனர்.

 பரபர புகார்

பரபர புகார்

30 வயதான ப்ரூக் நாட்டிற்காகச் சேவை செய்ய வேண்டும் என்பதற்காகக் கடற்படையில் இணைந்தார். இருப்பினும், அங்கு இருந்த மோசமான கலாசாரத்தால் அவர் பல சமயங்களில் தற்கொலைக்கும் முயன்றார். ஆண் அதிகாரிகள் பலாத்கார பட்டியல் என்று தனியாக ஒன்று வைத்து இருப்பதைக் கண்ட அவர், தனது பெயர் அதில் 6ஆவது இடத்தில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் தெரிவித்தார்

கொடூரம்

கொடூரம்

இது தொடர்பாக ப்ரூக் கூறுகையில், "அங்கு நான் இருந்த நாட்கள் மிகவும் கொடூரமானது. ஒரு நாள் திருமணமான ஆண் ஊழியர் ஒருவர் திடீரென என் முன்னால் நிர்வாணமாக வந்து நின்றார். அதேபோல மற்றொரு நான் தூங்கிக் கொண்டு இருந்த போது, படுக்கையில் என் மீது ஏறி முத்தமிடத் தொடங்கினார். இப்படி ஒவ்வொரு நாளும் எனக்கு மோசமாகவே இருந்தது. பணிபுரியும் இடத்திலேயே பெண்களின் நிர்வாண படங்களை வைத்து இருந்தனர். இது தொடர்பாகப் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

 தற்கொலை முயற்சி

தற்கொலை முயற்சி

19 வயதில் நான் நாட்டிற்குச் சேவை செய்ய வேண்டும் எனக் கடற்படையில் சேர்ந்தேன். அங்கு என்னால் சில மாதங்கள் கூட இருக்க முடியவில்லை. இரு ஆண்டுகளில் இருந்தே நான் தற்கொலைக்கு முயன்றேன். முதல்முறை நான் தற்கொலைக்கு முயன்ற போதே, என்னைக் கட்டாய விடுப்பில் அனுப்பச் சொன்னார்கள். ஆனால் அவர்கள் மறுநாளே நீர்மூழ்கிக் கப்பலில் என்னை பணியமர்த்தினர்" என்றார்.

 விசாரணைக்கு உத்தரவு

விசாரணைக்கு உத்தரவு

ப்ரூக் கூறியது போல தாங்களும் பாலியல் தொல்லைகளை அனுபவித்து உள்ளதாகப் பல பெண் கடற்படை வீராங்கனைகள் தெரிவித்து உள்ளனர். பிரிட்டன் கடற்படையில் இப்போது 10% பெண்கள் உள்ள நிலையில், இது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரிட்டன் கடற்படையில் பாலியல் தொல்லைகளுக்கு இடமில்லை எனக் கூறியுள்ள பிரிட்டிஷ் ராயல் நேவி தலைவர், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.

English summary
British Royal Navy female staffs allegations of widespread sexual harassment: British Royal Navy sexual allegation complaints.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X